Monday, 29 April 2019

2019-2020 கல்வி ஆண்டிற்குரிய விண்ணப்பங்களை தீபம் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் பெற கடைசி நாள் : 25.05.2019

விண்ணப்பம் வழங்கப்படும் நேரம்:
மாலை 5 முதல் 9 மணி வரை (திங்கள்-சனி)


நல்ல மதிப்பெண்கள் பெற்றும் வறுமையினால் தனது உயர்கல்வியை தொடரமுடியாதவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள், கிராமப்புற மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்லூரிகளில் சேரும்/பயிலும் மாணவ மாணவியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுகிறோம். பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தகுதியான மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும், மற்றவர்கள் தயவு செய்து விண்ணபிக்க வேண்டாம்.

இதை படிக்கும் நீங்கள் மேற்கூறிய தகுதி உடைய மாணவ மாணவியர்கள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு இந்த செய்தியை பகிரலாம்.Friday, 26 April 2019

தீபநெறி 2019 - ஏப்ரல் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.


அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.

தீபம் அறக்கட்டளையின் 20 தர்ம சாலைகளில் ஒன்றான செஞ்சி வட்டம் கங்காபுரம் கிராமத்தில் தயவாளர் சன்மார்க்கி ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் தினந்தோறும் பசியாற்றி வைக்கும் அற்புத காட்சி. (24.04.2019)
நித்ய பசியாற்றுவித்தல்


தீபம் அறக்கட்டளையின் 20 தர்ம சாலைகளில் ஒன்றான செஞ்சி வட்டம் கங்காபுரம் கிராமத்தில் தயவாளர் சன்மார்க்கி ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் தினந்தோறும் பசியாற்றி வைக்கும் அற்புத காட்சி...

இந்த பசியாற்றுவித்தலுக்கு தர்மம் செய்யும் நன்கொடையாளர்கள் வாழ்க வாழ்க !!!

பஞ்சம் என்பதே இல்லாத நிலையை பாரதம் பெற வேண்டும் !!!

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!

வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க !!!

பட்டினியில்லா பாரதம் படைப்போம் ...

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் அறிவிப்பு

அன்பார்ந்த நன்கொடையாளர்களுக்கு,

அறக்கட்டளையின் அன்னதானப்பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெற ஒத்துழைப்பு நல்கும் நன்கொடையாளர்களை வணங்கி மகிழ்கிறோம்...
வாழ்த்துகிறோம் ...
நன்றியை காணிக்கையாக்குகிறோம்...

தீபம் நன்கொடைகளை வசூலிப்பதற்கு
தனிப்பட்ட நபர்களை  நியமிக்கவில்லை.
நன்கொடைகளை வசூலிக்க வீடுகளுக்கு அனுப்புவதில்லை.

இருந்தபோதும் சில சமயங்களில் ஏற்கனவே உள்ள நன்கொடையாளர்கள் மூலம் புதிய நன்கொடையாளர்கள் நன்கொடைகள் அனுப்ப நேரிடலாம்.

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு அறப்பணிகளுக்கு தாங்கள் அளித்த/ அளிக்கும் நன்கொடைகளுக்கு 5 நாட்களுக்குள் அலுவலக ரசீது வரவில்லை என்றால், உடனே  தீபத்தை தொடர்பு கொள்ளவும்.

நன்கொடை அளித்த அன்றே தங்களுக்கு sms செய்தி வாட்ஸ் அப் செய்தி அனுப்பப்படும்.
குறிப்பாக வங்கி பரிமாற்றம் bank transfer செய்பவர்கள் உடனே பெயர் முகவரி மொபைல் எண் அன்னதான நாள் போன்ற விவரங்களை 9444073635 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

தீபம் - ஒர் அரசு பதிவு செய்யப்பட்ட, தணிக்கைக்கு உட்பட்ட, 80G வரிவிலக்கு பெற்ற ஒரு அற தொண்டு நிறுவனம்.

எனவே தீபம் ₹3000 க்கும் மேற்பட்ட ரொக்க நன்கொடைகளை பெறுவதில்லை. மாறாக, அனைத்து  நன்கொடைகளையும்
காசோலையாக(cheque) அல்லது வங்கி பண பரிமாற்றம் (bank tansfer) மூலமாக மட்டுமே பெறுகிறது.

இறை பக்தியும், 
சமுதாய அக்கறையும், தர்மத்தின் மீது முழு ஈடுபாடும்,
தீபம் அறக்கட்டளையின் சமுதாய நலப்பணிகளில் மீது அளவற்ற நம்பிக்கையும் உள்ள நன்கொடையாளர்களின் மனதில் ஏதேனும் குறைகள் இருப்பின் தீபம் நிறுவனரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். 
நிறை இருப்பின் இறையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைத்து தீபம் நன்கொடையாளர்களுக்கும் மாதம்தோறும் விலையில்லா விளம்பரம் இல்லா மாதாந்திர தமிழ் சன்மார்க்க தீப நெறி மாத இதழை நன்கொடையாளர்களுக்கு 27 ஆம் தேதி தபாலில் அனுப்புகிறோம். 
இதழ் வராதவர்கள் /பெறாதவர்கள் /முகவரி மாற்றம் செய்தவர்கள்/ இதழ் வேண்டாம் என்று விரும்புபவர்கள் /இதழ் வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களுடைய தகவலை மேற்கண்ட எண்ணுக்கு sms அல்லது whatsapp அனுப்பவும்.

வாழ்க தர்மம் வளர்க தர்மம்!!! 

தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org
சென்னை வேளச்சேரி

சென்னை வேளச்சேரி திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்ட நிலையில் திருமதி சுமதி அவர்கள் உதவி - (01.01.2019)சென்னை வேளச்சேரி திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்ட நிலையில் திருமதி சுமதி அவர்கள் உதவி வேண்டி  விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தை ஏற்று தயவு C பிரபாகரன் அவர்கள் புதிய ஒரு பீரோவை தந்து உதவி இருக்கிறார். 
அவரை தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது. 

வாழ்க அவருடைய தர்ம குணம் !
வாழ்க அவருடைய அன்பு குடும்பம் !
வாழ்க அவருடைய சந்ததிகள் !

எல்லா வளங்களும் நலங்களும் பெற்று இன்புற்று வாழ்க என்று தீபம் வாழ்த்தி மகிழ்கிறது !

வாழ்க தர்மம் ! வளர்க தர்மம் !

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

திருச்சிற்றம்பலம்

தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி

-இது ஒரு அரசு பதிவு செய்யப்பட்ட சமுதாய தொண்டு அற நிறுவனம்..

Monday, 22 April 2019

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க ! உத்தமனாகுக !! ஓங்குக !!!


* தீபம் அறக் கட்டளையின் தினசரி சமுதாயப்பணிகள் :

*காலையில் அருட் கஞ்சி( மூலிகை கஞ்சி) தயாரித்து 20 தர்ம       சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பசியாற்றுவித்தல்.

*12 மணி அளவில் குளிர்ந்த நீர் மோர் தயாரித்து தண்டீஸ்வரம் ஆர்ச்   அருகில் கோடைக்கால தாகம் தணிக்க நீர்மோர் தருதல். 

* மதியம் 12.30 மணி அளவில் நடமாடும் தர்மசாலை மூலம் கங்கை   அம்மன் திருக்கோவிலில் அரசமரத்தடியில் அன்னம் தருதல்.

* சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மதியம்   நூற்றுக்கணக்கானவர்களுக்கு வயிறார அன்னம் பாலித்தல்.

* மதியம் ஒரு மணி அளவில் சைதை சன்மார்க சங்க     சன்மார்க்கிகளுக்கு சிறப்பு அன்னம் அளித்தல்.

* மாலை 6 மணியளவில் அந்தி கடை சார்பாக தினமும் அன்னம்       பாலித்தல்.

தீபத்தின் மற்ற சமுதாய திருப்பணிகள்:

a)வசதியற்ற ஏழை எளிய  மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவுதல்.

 b)மாதந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு    வாழ்வாதார உதவி செய்தல் 

c) ஏழை நோயாளிகளின் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சைக்கு     நிதியளித்தல் 

d) ஒவ்வொரு மாதமும் பூச நாளிலே  வடலூர் சத்திய   தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்தல் 

e) ஒவ்வொரு வியாழனன்றும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ   வாராந்திர வழிபாடு மற்றும் அன்னப் பிரசாதம் வழங்குதல் 

f) மாதந்தோறும் முதல் சனிக்கிழமை மாலையில் சான்றோர்களின்   ஆன்மீக சொற்பொழிவுகளை  நடத்துதல் 

g) ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச மருத்துவ   முகாம்கள் நடத்துதல்.

தொடர்ந்து நடைபெறும் இந்த அன்னதான அருட்பணியில், திருப்பணியில், சமுதாயப் பணியில்  அன்பு உள்ளங்கள் கலந்துகொண்டு, நிதியாகவோ, பொருளாகவோ, 
உடல் உழைப்பாக தொண்டு செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுமாறு தீபம் அன்போடு அழைக்கிறது.

Donations are Welcome !!!
Volunteers are Welcome !!! 

தொண்டு செய்வோம் ! 
நீண்டு வாழ்வோம்!

வாழ்க தர்மம் 
வளர்க தர்மம் !!!

தர்மம் செய்வோம் 
தயவுடன் வாழ்வோம்!!!

திருச்சிற்றம்பலம்

நிறுவனர் 
தீபம் அறக் கட்டளை
-  இது ஓர் அரசு பதிவு பெற்ற  80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட அற தொண்டு நிறுவனம்.

19.04.2017 - சித்ரா பௌர்ணமி அன்னதான விழாசென்னை அயனாவரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வள்ளலார் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆடுகின்ற சேவடிகள் பங்கு கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நாள் முழுவதும் அன்னவிரயம் செய்வதற்தாக தொடர்ந்து 18 மணிநேரம் உணவை தயாரித்த அற்புதமான காட்சியையும், பசியாற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாங்கிச் செல்வதையும் படத்தில் காணுங்கள். 
~~~~~~~~
முன்னதாக காலை அகவல் பாராயணத்துடன் தொடங்கி சன்மார்க்க சொற்பொழிவாளர்களான 
தயவுமிகு மு.பாபு சென்னை
தயவுமிகு அருட்பா அருணாசலம் புதுச்சேரி
தயவுமிகு ஜோதி வேதாசலம் திருவொற்றியூர் போன்ற சன்மார்க்க பெருமக்களின் அமிர்தமான அருட்பாவின் சொற்பொழிவுகள் இடம்பெற்றிருந்தன.
இராமபுரம் பச்சையப்பன் அவர்களின் அருட்பா பாடல்களும் அருமையாக அமைந்தது. விழாவில் நூற்றுக்கணக்கான சன்மார்க்க சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
~~~~~~~~
 விழாவிற்கான ஏற்பாடுகளை அயன்புரம் சன்மார்க்க சங்கத்தின் பொறுப்பாளர் சன்மார்க்க அருணகிரி அவர்கள் மிக சிறப்பான முறையில் செய்திருந்தார். 

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...