Monday, 8 April 2019

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு (06/04/2019)



சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (06-04-2019) மாலை 6-30 மணியளவில் 16 மாத சொற்பொழிவாக மரணமில்லா பெருவாழ்வு என்கிற தலைப்பில் சன்மார்க்க சீலர், சிராப்பள்ளி மண்ணின் சன்மார்க்க மைந்தர் தயவுமிகு.M.சந்திரசேகர்  திருச்சி அவர்கள்  உரையாற்றினார்கள்.  ஞானமார்க்கத்துடன் கூடிய அருள்ஞான பேரின்பமாய்  அகவாழ்வை உணர்ந்து அனக வாழ்விற்கு வித்திடும் வகையான சொற்பொழிவாக மிகமிக சிறப்பாக அமைந்தது. ஏராளமான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 04-05-2019

தலைப்பு: கைவிடமாட்டான் என்று ஊதூது சங்கே
உரை நிகழ்த்துபவர்.

சன்மார்க்க சீலர், ஆன்மநேய உறவினர்
தயவுமிகு. மு.பா.பாபு அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், அய்யப்பன்தாங்கல், சென்னை-42

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...