Saturday, 31 August 2019

01.09.2019 - இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 1-9-2019 ஞாயிறு
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை

இலவச மருத்துவ உதவி முதலில் வரும் 30 பேருக்கு மட்டும்

மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635

அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!

Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் ... இயற்கை வழியில்

Wednesday, 28 August 2019

28.8.2019 மாத பூசம் - வடலூர் சேவை

மனமார்ந்த நன்றி!!! நெஞ்சார்ந்த நன்றி !!!

72 மாதங்களாக தொடர்ந்து மாத பூச நாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான சேவை...
தீபம் அறக்கட்டளையின் சார்பாக தொடர்ந்து நடைபெறுகின்ற அன்னதான அறப்பணியில்... திருப்பணியில் ...
வடலூர் தருமச்சாலையில் சத்திய தருமச்சாலையில் இரண்டு இரவுகள்  பயணம் செய்து,
ஒரு பகல் முழுவதும் வடலூர் தருமச்சாலையில் திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றிய  நித்ய அடுப்பில்... அணையா அடுப்பில்...
காய்களை நறுக்கியும்... உணவை தயாரித்தும்... உணவைப் பரிமாறியும்... அற்புதமான தொண்டு செய்த தீபம் அறக்கட்டளையின் உண்மை தொண்டர்களை, திருவருட்பிரகாச வள்ளலாரின் செல்ல பிள்ளைகளை,
நல்ல பிள்ளைகளை,
தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

தீபம் பாரதி,
தீபம் கணபதி,
தீபம் பிரவீண்,
தீபம் சிவா,
தீபம் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் உட்பட 15 தொண்டர்கள்

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம் !!!
--
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

Tuesday, 27 August 2019

12-ம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சிப் பெருவிழா

நாள்: 08-09-2019 ஞாயிறு

நேரம்: அதிகாலை 4-00 மணிமுதல் மாலை 4-00 மணி வரை

இடம்: நித்ய தீப தருமச்சாலை வளாகம்
7/8, புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி, சென்னை

நிகழ்வுகள்:

விழா தலைமை: 
சன்மார்க்க சாம்ராஜ்யத்தின் மூத்த சான்றோர்  மு.பாலசுப்ரமண்யம் அய்யா அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ஆழ்வார்திருநகர் & தேனாம்பேட்டை

முன்னிலை:
ஜீவகாருண்ய தியாகத்தாய்
தயவுமிகு தனலட்சுமி அம்மா அவர்கள்
அருள்ஜோதி அன்னாலயம்,  பெரம்பூர், சென்னை

சன்மார்க்க இளம்புயல்
தயவுமிகு பொதிகைப்பிரியன் அவர்கள், கள்ளக்குறிச்சி

ஜீவகாருண்யச் செம்மல்
தயவுமிகு மருத்துவர் B.செந்தில்நாதன் அய்யா அவர்கள்
(Founder, Excellent Care Hospital, Velachery)

ஜீவகாருண்யச் சுடர்
தயவுமிகு G.பாண்டியன் அய்யா அவர்கள்
தலைவர், தீபம் அறக்கட்டளை, வேளச்சேரி

அதிகாலை 4-00 மணி: 
திருப்பள்ளியெழுச்சி, திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அஷ்டகம், ஞானசரியை வழிபாடுகள்
~~~~~~~
நிகழ்த்துபவர்: 
தயவுமிகு சைவமணி C.சௌந்தராஜன் அவர்கள் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்றத்தினர் நாகப்பட்டினம்
🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
காலை 6-30 மணி: 
உலகு கட்டி ஆளும் சன்மார்க்க நீதிக்கொடியை உயர்த்துதல்
~~~~~~~
உயர்த்துபவர்: மன்றுகண்டார் தயவுமிகு இராமமூர்த்தி அய்யா அவர்கள், நாகப்பட்டினம்

காலை 7-30 மணி:
காலை சிற்றுண்டி
~~~~~~~
தொடங்கி வைப்பவர்: தயவுமிகு இராமையா அவர்கள், அருள்மிகு திரௌபதியம்மன் தர்ம பரிபாலன அறக்கட்டளை, வேளச்சேரி
📢🎤📢🎤📢🎤📢🎤📢🎤
காலை 8-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
~~~~~~~
உரை நிகழ்த்துபவர்: 
ஜீவகாருண்ய தவத்திரு
தயவுமிகு சைவமணி C.சௌந்தராஜன் அவர்கள்

காலை 10-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: கொல்லாநெறியே குருவருள் நெறி
~~~~~~~
உரை நிகழ்த்துபவர்: உலகப் புகழ்ப்பெற்ற பாரம்பரிய கிராமிய நாட்டுப்புற கலைநாயகி, கலைமாமணி, பத்மஸ்ரீ டாக்டர். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் மற்றும்
கலைமாமணி டாக்டர் நவநீதகிருஷ்ணன் அவர்கள், மதுரை

காலை 11-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: தமிழ்மொழியும், சாகாக்கல்வியும்

உரை நிகழ்த்துபவர்: சன்மார்க்க பேரொளிச் சுடர் தயவுமிகு மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி அய்யா
வள்ளலார் தமிழ் மன்றம், திருவெண்காடு

மதியம் 12-00 மணி: சிறப்பு அன்னதர்மம்

தொடங்கி வைப்பவர்: தயவுமிகு K.செல்வராஜ் அவர்கள், தங்கநாராயணா சூப்பர் மார்க்கெட், வேளச்சேரி

மதியம் 12-30 மணி: திருஅருட்பா இன்னிசை

நிகழ்த்துபவர்: அருட்பா இசைச்சுடர், சன்மார்க்க புரட்சியாளர் தயவுமிகு ஜீவ சீனிவாசன் அய்யா அவர்கள், திருக்கோவிலூர். நிறுவனர்- வடலூர் சேவை மையம், வடலூர்

மதியம் 2-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: சுத்த சன்மார்க்கம்

உரை நிகழ்த்துபவர்: நடமாடும் அருட்பா பல்கலைக்கழகம் தயவுமிகு கதிர்வேல் அய்யா ஈரோடு

பிற்பகல் 3-00 மணி: சிறப்பு சொற்பொழிவு
தலைப்பு: வள்ளலாரின் முத்தேக சித்தி

உரை நிகழ்த்துபவர்: சன்மார்க்க சொல்லரசி
தயவுமிகு தேன்மொழி தமிழ்ச்சோலை அவர்கள், வேலூர்

நிகழ்ச்சி தொகுப்பு: 
கலைஞர் தொலைக்காட்சி புகழ் தயவுமிகு ஜோதிபாசு அவர்கள், சென்னை

விழா நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்:
தயவுமிகு S.கணபதி
அறங்காவலர், தீபம் அறக்கட்டளை

தயவுமிகு S.கோபால்
அறங்காவலர், தீபம் அறக்கட்டளை

தயவுமிகு நாராயணமூர்த்தி
உறுப்பினர், தீபம் அறக்கட்டளை

ஆன்மநேய அன்பு உடன்பிறப்புக்களே தீபம் அறக்கட்டளையின் 12-ம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சிப் பெருவிழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துத் தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி


இங்ஙனம்
தயவு மு.பாலகிருஷ்ணன்
நிறுவனர்,
தயவு வே.பாரதி
பொதுச் செயலாளர்,
தயவு ஜோதி சதுரகிரியார்
விழா ஒருங்கிணைப்பாளர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை

தொடர்புக்கு:
9444073635

27.08.19 இரவு வடலூர் புனித சேவை பயணம்

28.8.2019 மாத பூசம்:

வடலூரில் வள்ளலார் பற்ற வைத்த அடுப்பில் தருமச்சாலையில்  நாள் முழுவதும் உணவு தயாரித்தல் ...உணவு பரிமாறுதல்...  டன் கணக்கில் காய்கறி வெட்டுதல்... பசியாற்றுவித்தல்... தருமச்சாலையில் நாள் முழுவதும் சுவாசம் ...

தர்ம சாலையின் ஒளி அலைகள் உடலில் படுதல் ... 
உணர்வில் கலத்தல்  ...

ஜோதி தரிசனம் காணுதல் ...

சித்தி வளாகத்தை காணுதல்... 

ஆனந்தம் அடைதல்...

இரண்டு இரவுகள் பயணம்...

தொடர்ந்து 72 மாதங்களாக  தீபத்தின் வடலூர் அன்னதான தொண்டு...

தொண்டிற்காகவே பிறந்தவர்கள்... 
தொண்டிற்காகவே வாழ்பவர்கள்... 
திருவருட்பிரகாச வள்ளலார் அருள் 
பெற்ற செல்லப்பிள்ளைகள்...
இதோ...
தீபம் பாரதி அவர்கள்
தீபம் வேல்முருகன் ஐயா அவர்கள்
தீபம் கோபால் அவர்கள்
தீபம் கணபதி அவர்கள் 
தீபம் கார்த்திக் அவர்கள்

வாய்ப்பு இதை படிக்கும் உங்களுக்கும் தான்...

உண்மை தொண்டின் மூலம் உண்மை கடவுளின் அருளைப் பெற்று உண்மை இன்பதை உணர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தீபம் அலுவலகத்தில் பெயர் கொடுத்து விட்டு 27ஆம் தேதி இரவு வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலைக்கு வரவும்.

27 8 2019 இரவு வடலூர் புறப்படுதல் 

28 8 2019 இரவு வடலூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைதல்.

வேன் கட்டணம் இல்லை.

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

நிறுவனர் 
தீபம் அறக் கட்டளை
9444073635

Monday, 26 August 2019

12 வது ஆண்டு விழா அழைப்பிதழ் (08.09.2019)

தீபநெறி 2019 - ஆகஸ்ட் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.


Sunday, 4 August 2019

04.08.2019 - பெருங்குடி, கல்குட்டை பகுதியில் பசியாற்றுவித்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் இன்று (04-08-2019) மாலை 3-00 மணி முதல் பெருங்குடி, கல்குட்டை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நடமாடும் அன்னதர்ம வாகனத்தின் மூலம் பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.

02.08.2019 - கல்குட்டை அன்னதானம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை (02-08-2019) அன்று தீபத்தின் 20 தருமச்சாலைகளில் ஒன்றான பெருங்குடி கல்குட்டை தருமச்சாலையான நாகாத்தம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமான காட்சி.

Saturday, 3 August 2019

04.08.2019 - இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்  சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 4-8-2019 ஞாயிறு
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை

இலவச மருத்துவ உதவி முதலில் வரும் 30 பேருக்கு மட்டும்

மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை 
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635

அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!

Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் ... இயற்கை வழியில்

Friday, 2 August 2019

02.08.2019 - சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு  20வது மாத சொற்பொழிவாக நாளை ஆடி 18-ம்நாளாக வருவதால் முன்கூட்டியே இன்று (02-08-2019) வெள்ளிக்கிழமை மாலை 7-00 மணியளவில் ஜீவகாருண்யத்தின் மெய்ப்பொருள் என்கிற தலைப்பில்  அகில இந்திய வள்ளலார் பேரவையின் கடலூர் மாவட்டத்தின் தலைவரும், சன்மார்க்க வீரமங்கை தயவுமிகு. இராணி இராசதுரை  அவர்கள்  உரையாற்றினார்கள்.  


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்பெறும் வகையில் ஜீவகாருண்ய சம்பந்தமான மெய்ப்பொருள் விளக்கமாக  90 நிமிடம்  சொற்பொழிவு மிகமிக சிறப்பாக அமைந்தது. திரளான  அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது.  கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்:

நாள்: 07-09-2019

தலைப்பு: உணவு ஒழுக்கம்

உரை நிகழ்த்துபவர்:  சன்மார்க்க சீலர், 
சாது வேதாசலம் அவர்கள்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், திருவொற்றியூர்

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

02.08.2019 -சமுதாயப் பணி

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சமுதாயத்தில் நலிவடைந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசியும் மளிகை பொருட்களும், மருத்துவ உதவியும், வழங்கியபோது...

வாரி வழங்கும் தீபம் அறக் கட்டளையின் வள்ளல்களை வணங்கி மகிழ்கிறோம்.

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...