Friday, 2 February 2018

வாழ்வாதார உதவி!

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் பசியாற்றுவித்தல், கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்பட பல்வேறு ஆன்மநேய அறப்பணிகளையும் செய்து வருவது தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.




தீபத்தின்  ஆன்மநேய அறப்பணிகளில் ஒன்றான பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு ஆயுட்கால வாழ்வாதார உதவி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை  அன்று வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய தங்களின் கமலமலர் பாதம் பணிந்து விண்ணப்பிக்கின்றோம். தாங்கள் மாதந்தோறும்  ஒரு பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் மாதத்திற்கு உண்டான 25 Kg அரிசி மற்றும் மளிகை பொருட்களான துவரம்பருப்பு  ஆயில் இதர பொருட்களையும் வாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம். 
ஒருவருக்கு அளிக்கப்படும் அரிசி  மற்றும் மளிகை பொருட்கள் ₹2000/- வரை செலவு ஆகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தானமும், தவமும் செய்வாராகில் வானவர் நாடு வழி திறந்திடுமே என்ற தர்மவரிகளுக்கு ஏற்பவும்
எல்லா உயிர்களும் இன்புற்று  இருப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றியம் பராபரமே என்ற தாயுமானவர்  வாக்கிற்கிணங்க 
மண் திணி ஞாலத்து உயிர் வாழ்வோருக்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற சிலப்பதிகார நாயகி கண்ணகியின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப 
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க என்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் உண்மை அறநெறிக்கு ஏற்ப தங்களை இணைத்துக் கொண்டு தர்மத்தின்படி வாழ தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அலுவலக முகவரி:
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு 
வேளச்சேரி சென்னை-600042
அலைபேசி நம்பர்: 044-22442515
கைபேசி நம்பர்:
9444073635
~~~~~~~~
For Bank Transfer:
DEEPAM TRUST
State Bank of India 
IIT Branch 
Current A/c.No: 30265475129
IFSC:SBIN0001055
www.deepamtrust.org

தாங்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு 

வாழ்க தருமம்! வளர்க தருமம்! 
தருமம் செய்வோம்...!
தயவுடன் வாழ்வோம்...!

நித்ய தீப தருமச்சாலை சத்திய ஞானசபை கட்டிட நிதி விண்ணப்பம்

நித்ய தீப தருமச்சாலை  சத்திய ஞானசபை கட்டிட நிதி விண்ணப்பம் ...