Sunday, 12 May 2024

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 14 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.

இதுவரை 1269 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹74,38,605/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 14 ஆண்டுகளில் ₹74 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

மேலும் வரும் 2024 – 2025 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்:

👉   APPLY ONLINE

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கடைசி நாள்: 
15.06.2024

How to apply?
https://youtu.be/ACJhul9bfjU

பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏழ்மை தகுதியின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு,  நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு பிறகு “தீபம் கல்வி உதவி குழு” பரிந்துரை செய்த மாணவ மாணவிகளுக்கு, கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பயிலும் கல்லூரிக்கு  காசோலையாக செலுத்தப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும். தீபம் அறக்கட்டளையின் கல்வி உதவி குழுவின் முடிவே இறுதியானது.

கல்வி உதவி குழு பரிந்துரை செய்யும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

குறிப்பு:

1) பள்ளி மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம்.

2) தாய்/தந்தை இல்லாத, முதல் தலைமுறை பட்டதாரி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், அரசு கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு, கிராமத்தில் உள்ள  மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

3) விண்ணப்பம் நிரப்பும் போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண் அல்லது WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண் : 044-4335 8232

WhatsApp எண் : https://wa.me/914443358232

மாதிரி விண்ணப்பம்:







No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...