Friday 31 July 2020

சாலையோரங்களில் இருப்பவர்களைச் தேடிச்சென்று உணவு வழங்குதல்

முழு ஊரடங்கின் போது ரோட்டோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு பசிப்பிணி போக்கும் பணி...தொடர்ந்து நான்கு மாதங்களாக...







தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை

----
கீழுள்ள இணைப்புகளை கிளிக் செய்வதின் மூலம் கரோன காலத்தில் தீபம் செய்துள்ள பணிகளை விரிவாகக் காணலாம்:

கொரோனா காலத்தில் தீபத்தின் சேவைகளைக் காண: https://bit.ly/dtcovid19

புகைப்படத் தொகுப்பு: https://bit.ly/dtcovidpg

வீடியோ: https://bit.ly/dtcovidvi

Thursday 30 July 2020

சாலையோரங்களில் இருப்பவர்களைச் தேடிச்சென்று உணவு வழங்குதல்

முழு ஊரடங்கின் போது ரோட்டோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு பசிப்பிணி போக்கும் பணி...தொடர்ந்து நான்கு மாதங்களாக...








தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை

Tuesday 28 July 2020

25.07.2020 - அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குதல் - கல்குட்டை

25.7.20-நேற்று சென்னை பெருங்குடி கல்குட்டை பகுதியில் நடைபெற்ற சமுதாய பணியில், 
திருவாளர்கள்  
✅திரு பிரபு அவர்கள் (மஞ்சள் உபயம்)
✅தயவு தீபம் திருமதி ஜானகி ஜெயசேகர் அம்மையார் (மிளகு உபயம்)
✅தயவு தீபம் திரு ஓம்பிரகாஷ் ஐயா அவர்கள் (உப்பு உபயம்)
✅தயவு தீபம் N கந்தசாமி ஐயா அவர்கள் (கோதுமைமாவு  மற்றும் சமையல் எண்ணெய் உபயம்) 
✅ தயவு சுப்பையா அவர்கள் (சீரகம் உபயம்)
ஆகிய அறுவரும் 
தீபம் நிர்வாகிகளாக மற்றும் தீபம் சேவடிகளாக நிதியாகவும் பொருளாகவும் கொடுத்து, அற்புதமான நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டனர். ஆன்ம லாபத்தை பாகம் செய்துகொண்டனர். தீபம் நன்கொடையாளர்களுக்கு தீபத்தின் நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...


நேற்றைய கல்குட்டை சமுதாய பணியில் (packing and distribution) அற்புதமாக தொண்டு செய்த கீழ்கண்ட ஆன்ம நேய தொண்டு உள்ளங்களைை  தீபம் வாழ்த்துகிறது.
*திருவாளர்கள்*
திரு வேல்முருகன் ஐயா அவர்கள் 
திரு குமரேசன் ஐயா அவர்கள் 
திரு ஆனந்த் அவர்கள் 
திரு கணபதி அவர்கள் 
திரு சுப்பையா அவர்கள் 
திரு சுதாகர் அவர்கள் 
திரு பிரபு அவர்கள் 
திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் 
திருமதி மின்னல் அம்மா
அவர்கள்
திரு நாராயண மூர்த்தி ஐயா அவர்கள்
திரு ரங்கநாதன் அவர்கள்
திருமதி புஷ்பா அவர்கள்
திரு காந்தி அவர்கள்
திரு T V  ரமேஷ் அவர்கள்
திரு வெங்கடேஷ் அவர்கள்



தீபம் பாலா
நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

Friday 24 July 2020

100 ஏழை குடும்பங்களுக்கு நித்ய தீப தருமச்சாலையில் தயாராக உள்ள அரிசி சிப்பங்களும் மளிகை பொருட்களும்.

நாளை சென்னை பெருங்குடி கல்குட்டை பகுதியில் 100 ஏழை குடும்பங்களுக்கு வழங்க நித்ய தீப தருமச்சாலையில் தயாராக உள்ள அரிசி சிப்பங்களும் மளிகை பொருட்களும்.





தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Saturday 18 July 2020

18.07.2020 - ஏழ்மையில் வாடும் 100 குடும்பங்களுக்கு அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது

தீபம் அறக்கட்டளையின் இன்றைய சமுதாயப் பணி:

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமம் காட்டுப்பகுதிகளில் மிக மிக ஏழ்மையில் வாடும் 100 குடும்பங்களுக்கு முதல்தர 10 கிலோ அரிசி  சிப்பங்களுடன், 12 வகையான மளிகைப் பொருட்கள் இன்று நேரில் சென்று உணவுடன் வழங்கப்பட்டது. 

100 குடும்பங்களும் குடிசையில் 

. நிறைய குடிசைகளில் சுற்றிலும் சுவரே இல்லை.
பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை.
தற்போது வேலை இல்லை. வருமானம் இல்லை.
பசியால் வாடுவதை நேரில் கண்டு மிகவும் வருந்தினோம்.




மிக மிக ஏழ்மை நிலையில் உணவுக்கே வழி இல்லாமல் வேலை இல்லாத மக்கள்  உணவாக இறந்துபோன ஈசலை உட்கொண்டு வாழ்வதைக் கண்டு மனம் மிக மிக வேதனை அடைந்தது. 

தங்களைப் போன்ற ஒருசில நல் உள்ளங்களின் பேராதரவினால் பெருங்கருணையினால் இன்று 100 ஏழை இந்திய குடும்பங்களுக்கு அரிசியும் மளிகைப் பொருட்களும் மற்றும் ஏறக்குறைய ஏழ்மை நிலையில் வாடும் 500 இந்தியர்களுக்கு உணவு வழங்கப்பட்டதை நன்கொடையாளர்களுக்கு தெரிவித்து மகிழ்கிறோம்.

இப்படி ஒரு ஏழ்மை நிலையிலுள்ள பசியோடு வாழக்கூடிய மக்களை அடியேன் இதுவரை கண்டதில்லை.

இன்று நாள் முழுவதும் அற்புதமான மனதை நெகிழ வைத்த சமுதாயப் பணிக்கு நல் ஆதரவு தந்த நல் உள்ளங்களை மனதார போற்றி வாழ்த்தி மகிழ்கிறோம். காலை முதல் மாலை வரை தொண்டு செய்த தீபம் சேவதாரிகளை தீபம் வாழ்த்துகிறது. 

தொடரட்டும் தங்கள் தொடர் தர்மம். வளரட்டும் இச்சமுதாயம்.

மீண்டும் மக்களின் பசி போக்கும் தொடர் அன்னதான பணிகளுக்கிடையே வரும் சனிக்கிழமை அன்று 25.7.20 காலை 8 மணி அளவில், சென்னை வேளச்சேரி கல் குட்டை பகுதியிலுள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல்தர 10 கிலோ  மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்களும் நேரில் சென்று வழங்க இருக்கிறோம் என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம்.

தயவுடன் ...
என்றென்றும் சமுதாயப் பணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

Thursday 16 July 2020

100 மெய்யூர் கிராம ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி

நாள்: 18 7 2020 சனிக்கிழமை
புறப்படும் நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிக்குள்

நாளை இரவுக்குள் தயாராக வேண்டிய பொருட்கள்:
1) 10 கிலோ அரிசி சிப்பம்: 100 பேக்
2) மளிகை பொருட்கள்: 100 பேக்

எண்ணெய் ஒரு லிட்டர்
 பருப்பு ஒரு கிலோ 
மிளகு 50 கிராம் 
சீரகம் 50 கிராம் 
கடுகு 100 கிராம் 
புளி கால் கிலோ
கோதுமை மாவு ஒரு கிலோ

கொண்டு செல்ல உணவு 50 கிலோ வெஜிடபிள் பிரிஞ்சி.

வாகனம் : திரு வெங்கடேசன் அவர்களுடையது.

செல்லுமிடம் : மெய்யூர் கிராமம் திருவள்ளூர் மாவட்டம்

அதிகபட்ச தொண்டர்கள்: 6 முதல் 8

மேற்கண்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டிய பொறுப்பு:
திரு குமரேசன் அவர்கள்
திரு ஆனந்த் அவர்கள்
திரு சுப்பையா அவர்கள்
விருப்பம் உள்ள மற்ற சேவதாரிகள்.

*குறிப்பு: மேற்கண்ட சமுதாய பணியில் இக்குழுவில் உள்ள தீபம் நிர்வாகிகள் மற்றும் தீபம் சேவதாரிகளின் பாகம் (நிதியாக ...பொருளாக... தொண்டாக ...) இருக்க வேண்டும்.*

*தீபம் நிர்வாகம்*

Tuesday 14 July 2020

14.07.2020 - மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி

மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி :  தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு B கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் தங்களுடைய பெற்றோர்களுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை இன்று மேலும் திரு கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ருபாய் இரண்டாயிரத்து வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை பதிவு செய்து மகிழ்கிறோம்.  Rs.2000 உபயம் : பேராசிரியை S மீனா பாபு அம்மையார் அவர்கள். தொடர்ந்து தர்மம் செய்யும் மீனா பாபு அம்மையார் அவர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

Monday 13 July 2020

13.07.2020 - கேஸ் அடுப்பு மற்றும் புதிய பாத்திரங்கள்

100 குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு வழங்க தீபம் அறக்கட்டளை வழங்கிய கேஸ் அடுப்பு மற்றும் புதிய பாத்திரங்கள்.

13.07.2020 - மெய்யூர் கிராம காப்புக் காட்டில் உணவு கொடுத்தல்

இன்று திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராம காப்புக் காட்டில் வாழும் மிக மிக வறுமையில் வாழும் இருளர்கள் குடும்பத்திற்கும்   குழந்தைகளுக்கும் உணவு கொடுத்த காட்சி... இன்று நாள் முழுவதும் தீபம் அறக்கட்டளை நிறுவனரின் நேரடி சேவை...

Sunday 12 July 2020

12.07.2020 - தினசரி 100 குழந்தைகளுக்கு மதிய உணவு

தீபம் அறக்கட்டளையின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் உள்ள 3 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை மதிய உணவு தினசரி கொடுப்பது தாங்கள் அறிந்ததே.


நேற்று (11.7.20) தீபம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் அவர் துணைவியார் நேரடியாக மெய்யூர் கிராமத்துக்குச் சென்றோம். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் இனிப்புகள் நேரடியாக வழங்கப்பட்டது.

குழந்தைகளின் தினசரி உணவு தேவைகளுக்கான 

▪️ஒற்றை கேஸ் அடுப்பு 
▪️உணவு தயாரிக்க புதிய பாத்திரம் (மூடியுடன்)
▪️மூன்று சிப்பங்கள் அரிசி 
▪️காய்கறிகள் 
▪️இனிப்புகள் 
▪️சாக்லெட்கள்
(உபயம் திரு குமரேஷ் அவர்கள்)
▪️சேமியா பாக்கெட்டுகள் 
(உபயம் திரு சுப்பையா அவர்கள்) 
நேரடியாக வழங்கப்பட்டது என்பதை தீபம் அறக்கட்டளை குழுவிலுள்ள தீபம் நிர்வாகிகளுக்கும் தீபம் தொண்டர்களுக்கும்  தெரிவித்து மகிழ்கிறோம்.
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
Food to 100 Children daily.
Proj. Cost: ₹ 1,000/- per day.
Sponsors are Welcome
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தர்மம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம்!
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️
தயவுடன் ...
நிறுவனர் 
*தீபம் அறக்கட்டளை*

12.07.2020-அற்புத "அன்னம் அளிக்கும்" சேவை:

12.7.20 - இன்று சென்னையில் முழு ஊரடங்கு முன்னிட்டு சென்னையும், சென்னை சாலைகளும் வெறிச்சோடி அமைதிகாக்கும் வேலையில், ரோடோரம் பசியால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு, டாடா ஏஸ் வாகனத்தில் உணவு பொட்டலங்களை தேடிச்சென்று வழங்கிய 
*தீபத்தின் தொண்டர்படை*
திரு ஆனந்த் 
திரு குமரேஷ் 
திரு வெங்கடேஷ் 
திரு ரமேஷ் 
திரு சுப்பையா 
திரு சுதாகர் 
அவர்களின் சேவையை, சமுதாய அக்கறையை,
தீபம் அறக்கட்டளை பாராட்டி மகிழ்கிறது.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*தீபம் நிர்வாகம்*

12.07.2020- அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி

திருவொற்றியூர் மாற்றுத்திறனாளி திரு B  நந்தகோபால் குடும்பத்திற்கு  தீபம் அறக்கட்டளையில் சார்பாக ரூபாய் இரண்டாயிரத்துக்கான ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி. உபயம் திரு  தேசிங்கு ஐயா அவர்கள், திருவல்லிக்கேணி

Friday 10 July 2020

10.07.2020 - குழந்தைகளுக்கு தீபம் கட்டளையின் சார்பாகஒரு வேளை மதிய உணவு

இன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் செய்யூர் கிராமத்தில் உள்ள 75 முதல் 100 குழந்தைகளுக்கு தீபம் கட்டளையின் சார்பாகஒரு வேளை மதிய உணவு வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday 9 July 2020

09.07.2020 - அன்னதான அரிசி உதவி

விழுப்புரம் அருள் மாளிகை மூலம் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை இன்று 10 அரிசி சிப்பங்களுக்கான  உபயம் Rs.10,000 வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கியிருக்கிறது என்பதை தீபம் பதிவு செய்கிறது.

தீபம் நிர்வாகம்

09.07.2020 - நிவாரண உதவி


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு B கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் தங்களுடைய பெற்றோர்களுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை இன்று திரு கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ருபாய் இரண்டாயிரத்து வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை பதிவு செய்து மகிழ்கிறோம்

Wednesday 8 July 2020

மருத்துவ உதவி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஏழ்மையில் வாடும் சென்னை அனகாபுத்தூரரை சேர்ந்த திருமதி டெல்லி பாய் அவர்களுடைய மகன் திரு சேகர் அவர்களுக்கு மருத்துவ உதவியாக இன்று வங்கி பரிமாற்றம் மூலம் ₹ 5,000/- வழங்கப்பட்டது.

தீபம் அறக்கட்டளை 
வேளச்சேரி சென்னை
9444073635

அரிசி உதவி


வறுமையில் வாடும் மாற்று திறனாளி ஊரப்பாக்கம் திரு பாலாஜி அவர்களின் குடும்பத்திற்கு இன்று தருமச்சாலையில் இரண்டு சிப்பங்கள் அரிசி வழங்கப்பட்டது

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...