Monday, 22 April 2019

19.04.2017 - சித்ரா பௌர்ணமி அன்னதான விழா







சென்னை அயனாவரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வள்ளலார் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஆடுகின்ற சேவடிகள் பங்கு கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நாள் முழுவதும் அன்னவிரயம் செய்வதற்தாக தொடர்ந்து 18 மணிநேரம் உணவை தயாரித்த அற்புதமான காட்சியையும், பசியாற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாங்கிச் செல்வதையும் படத்தில் காணுங்கள். 
~~~~~~~~
முன்னதாக காலை அகவல் பாராயணத்துடன் தொடங்கி சன்மார்க்க சொற்பொழிவாளர்களான 
தயவுமிகு மு.பாபு சென்னை
தயவுமிகு அருட்பா அருணாசலம் புதுச்சேரி
தயவுமிகு ஜோதி வேதாசலம் திருவொற்றியூர் போன்ற சன்மார்க்க பெருமக்களின் அமிர்தமான அருட்பாவின் சொற்பொழிவுகள் இடம்பெற்றிருந்தன.
இராமபுரம் பச்சையப்பன் அவர்களின் அருட்பா பாடல்களும் அருமையாக அமைந்தது. விழாவில் நூற்றுக்கணக்கான சன்மார்க்க சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
~~~~~~~~
 விழாவிற்கான ஏற்பாடுகளை அயன்புரம் சன்மார்க்க சங்கத்தின் பொறுப்பாளர் சன்மார்க்க அருணகிரி அவர்கள் மிக சிறப்பான முறையில் செய்திருந்தார். 

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...