Thursday 23 November 2017

தீபநெறி 2017 - நவம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இருப்பினும் அனைவரும் படித்து பயனடையும் வண்ணம் 2017 நவம்பர்  மாத தீபநெறி மின்னிதழை linkல் இணைத்துள்ளோம். 

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 9444073635-க்கு Whatsapp அனுப்பினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.























Helpful Links
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

Wednesday 15 November 2017

பசியாற்றுவித்தல் பரம புண்ணியம்

பசியாற்றுவிக்க நினைப்பவன் -மனிதன் 
பசியாற்றுவிப்பவன் -மாமனிதன் 
பசியாறியவர்களை கண்டு மகிழ்பவன் -மகான் 
பசியாறியவர்களால்  பாராட்டப்படுபவன்- கடவுள் 

சென்னை வேளச்சேரி,
தீபம் அறக்கட்டளையின் 19 தருமச்சாலைகளில்  திருஅருட்பிரகாச வள்ளலாரின் பேரருள் பெருங்கருணையினால் ஜீவகாருண்யப்பணியாகிய நித்ய பசியாற்றுவித்தல் (கஞ்சி வார்த்தல்)- காட்சி...






தருமம் செய்வோம் !!
தயவுடன் வாழ்வோம் !!!

வாழ்க தருமம் !!!
வளர்க தருமம் !!!

Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org


Friday 10 November 2017

09.11.2017 - வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை சேவை

வடலூர் சத்திய தருமச்சாலையில், இன்று மாத பூச நாளில் தீபம் அறக்கட்டளை சேவடிகளின் சேவை...தொடர்ந்து 48 மாதங்களாக...







Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org


Tuesday 7 November 2017

தீபத்தின் ஒருநாள் இன்பச் சுற்றுலா

நாள்: 19-11-2017 (ஞாயிற்றுக்கிழமை)
அதிகாலை 4-00 மணி முதல் இரவு வரை

பார்க்கவேண்டிய இடங்கள்:

1.ஜவ்வாது மலை:


சிறப்பு:  திருஅண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையானது கடல்மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில், 80 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த கிழக்கு தொடர்ச்சி மலையாகும். மலையின் கிழக்குப்புறம் பாலாற்றின் கிளையான செய்யாறு நதியும், மேற்குப்புறம் அகரம் ஆறும் பாயும் இரம்யமான மலைவாசஸ்தலம். இங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சி இயற்கை சூழலில் அற்புதமாக காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
அருவியில் குளிக்க விருப்பம் உள்ளவர்கள் மாற்று உடை கொண்டு வர வேண்டும்.

2. அமிர்தி காடுகள்:


சிறப்பு: வேலூரிலிருந்து 27-வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அமிர்தி பாரஸ்ட் பயணம் மிக அற்புதமாக இருக்கும். மலையை ஒட்டிய 27 கிலோமீட்டர் பஸ் பயணம் இயற்கையை இரசிப்போரை கட்டாயம் கவரும். இயற்கை மலையேற்றம் (Trekking)  உண்டு. விருப்பம் உள்ளவர்கள் மலையேற்றம் செய்யலாம்.

3. சிங்கிரி கோவில்:



சிறப்பு: மலைநடுவில் ஆற்றங்கரை மீது அமைதியான இயற்கை சூழலில் அமைந்துள்ள ஶஸ்ரீநரசிம்மஸ்வாமி திருக்கோவில்.


4.ஸ்ரீபுரம் பொற்கோவில்:



சிறப்பு: தற்போது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற  பொற்கோவில் (Golden Temple)  ஸ்ரீநாராயணி அம்பிகா வீற்றிருக்கும் திருத்தலம்.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் சுற்றலா ஸ்தலம்.

இந்த இன்பச்சுற்றலாவின்
சிறப்பம்சம்:

  • இதுவரை தாங்கள் கண்டிராத மலைவாசஸ்தலம் & காட்டுப்பயணம்.
  • பேருந்தில் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகல  கொண்டாத்துடன் பயணம்.
  • முன்பணம் செலுத்தி பதிவு செய்பவர்களுக்கு முன்சீட் கொடுத்து ( சீட் நம்பர்) முன்னுரிமை தரப்படும்.
  • குடும்பத்துடன் வருபவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.
  • 5 To 10 வயது குழந்தைகளுக்கு பாதி கட்டணம்
  • மூன்று வேளை சுத்தம்,  சுகாதாரம் நிறைந்த சைவ உணவு. (பாக்குமட்டை தட்டில்)
  • தேவைப்பட்டால் இரண்டு பஸ் ஏற்பாடு செய்யப்படும்.
  • தங்களின் மனமகிழ்ச்சிக்கு நாங்கள் முழு உத்தரவாதம்.


கட்டணம்:
பெரியவர்:₹750/-
சிறியவர் (10 வயது):₹400/-

மகிழ்ந்து மகிழ, மகிழ்ச்சி பொங்க வருக! வருக! என அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு:
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை.

முன்பதிவிற்கு:
தயவு.ஜோதீஸ்வரி பாண்டுரங்கன்
9884871803
தயவு.ஆனந்த்
9884997545
தயவு.நாகேஸ்வரி ரங்கராஜ்
9952044504
தயவு.ஜானகி ஜெயசேகர்
9444629404

Sunday 5 November 2017

05.11.2017 - Annadhanam at Good life Home, Tambaram

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய அறப்பணிகளில் ஒன்றான மகிழ்வித்து மகிழ்வோம் நிகழ்வை தாம்பரம் குட்லைப் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மனநலம் குன்றிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை நேற்று (05-11-2017)  ஆடிப்பாடி மகழ்வித்து மகிழ்ந்து இரவு உணவாக 1000 மசால் தோசை வழங்கி மகிழ்வித்த காட்சியை படத்தில் காணுங்கள்.








Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

Friday 3 November 2017

03.11.2017 - சென்னையில் ஓர் உண்மையான மஹா அன்னாபிஷேகம்

இன்று 03-11-2017 அதிகாலை 3-00 மணிமுதல் தற்போது இரவு 11-30 வரை சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான  வறியவர்களுக்கு வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் பசியாற்றுவித்தல் என்னும்  மஹா அன்னாபிஷேகம் மிக சிறப்பான முறையில் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் பெருங்கருணையினால் நடைபெற்றது. வேளச்சேரி, குரோம்பேட்டை, ஜமீன் பல்லாவரம், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை, அடையார், தரமணி, கல்குட்டை போன்ற பல பகுதிகளில் சாலையெங்கும் ஓடிய மழை வெள்ளத்தில் தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள் நீந்திக்கொண்டும், வேன் மூலமாகவும், இடுப்பளவு தண்ணீரில் தவித்தோருக்கு சிரமம் பார்க்க்காமல், கொட்டும் மழையையும பொருட்படுத்தாமல் மஹா அன்னாபிஷேகம் (அன்னதானம்)  செய்து வறியவர்களின் உள்ளத்தை ஊக்கப்படுத்தியுள்ளனர். 








ஆடுகின்ற சேவடிக்கு ஆளானேன் ஆளாக மாக்கையெல்லாம் பெற்றேன் என்ற எம்பெருமானின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப செயலபட்ட தீபத்தின் ஆடுகின்ற, ஓயாது உழைக்கின்ற சேவடிகளுக்கு கோடானு கோடி நன்றி! நன்றி! நன்றி!


Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

Thursday 2 November 2017

அன்னதான அற்புதங்கள்


உணவின்றி உயிரில்லை!
உயிரின்றி உலகில்லை!

அன்னதானமானது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.
தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது  அன்னதானம் மட்டுமே.

அன்னதானம் செய்பவர்களுக்கு இம்மையிலும் மறுமை இல்லை என்றும்,  உலகிலேயே மனிதனானவன் அறியாமல் செய்யும்  பாவங்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த பரிகாரமே அன்னதானம் மட்டுமே என உலகம் தோன்றிய முதல் இன்றுவரை வாழ்ந்த அருளாளர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் பின்னாளில் சமயமதவாதிகளும், போலி ஆன்மீகவாதிகளும், ஜோதிடர்களும் இவைகளை எல்லாம் மறைத்து ஒரே கடவுளை பல உருவப்பட்ட விதத்தில் காட்டி பரிகாரம் என்கின்ற பெயரில் அன்னதானத்தை மறைத்து,  தவறான ஆன்மீக தகவல்களை மக்களிடம் பரப்பி மூடநம்பிக்கைகளை வளர்த்து வந்துள்ளனர்.

எல்லாம் வல்ல இறைவனால் 1823 ம் ஆண்டு இந்நிலவுலகிற்கு வருவிக்கவுற்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் 1867-ம் ஆண்டு வைகாசித் திங்கள் 11-ம் நாள் பார்வதிபுரம் எனும் வடலூரில் பசியால் வாடும் வறியவர்களின் பசிப்பிணியை போக்க தன் திருக்கரங்களால் அக்னியை மூட்டி இன்று வரை 150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையா அடுப்பாக இருந்து சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவைகளை கடந்து அனைத்து உயிர்களையும் அரவணைத்து ஓர் சமரசப் புரட்சியை நிலைநாட்டினார் எம்பெருமான்.

"பசியோடு வந்தாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சியாயினும் வழங்கவும் நினையீர் "

என்ற திருஅருட்பா பாடல்கள் மூலமாக மரணமில்லா பெருவாழ்விற்கு முதல்படியாக அமைவது ஜீவகாருண்யம் எனும் பசியாற்றுவித்தல் மாத்திரந்தான் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.மேலும்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் 
          தம்உயிர்போல் எண்ணி உள்ளே 
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் 
யாவர்அவர் உளந்தான் சுத்த 
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் 
இடம்எனநான் தெரிந்தேன் அந்த 

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் 
          சிந்தைமிக விழைந்த தாலோ.

இப்படி பல பாடல்களின் வாயிலாக பசியாற்றுவித்தலின் மகத்துவத்தை நமக்கு எடுத்துரைத்து இயம்புகிறார். 

மண் திணி ஞாலத்து 
உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே

என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.

இன்றைக்கு நமது நாட்டில் குறிப்பாக சித்தர்களும், மாமுனிவர்களும், எண்ணற்ற அறவோர்களும் அவதரித்த செந்தமிழ்நாட்டில் நீதி தவறிய அரசும், குற்றச்செயல்களும் நிறைந்து இயற்கைக்கு மாறான வகையிலே ஆன்மீகத்தை தவறாக பயன்படுத்தி கள், காமம், பொய், கொலை, களவு போன்ற பஞ்சமாபாதக செயல்களை செய்து வருவதால்தான் இயற்கை பேரிடர்களான சுனாமி, தானே புயல், வார்தா புயல், பெருமழை, கடும் வெயில்,  வெயில் காலத்தில் மழை பெய்வதும், மழைகாலத்தில் வெயில் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது.  காரணம்  இயற்கைக்கு மாறாக நாம் நடந்து கொண்டால் நமக்கு மாறாக இயற்கை நடக்கும். இனியாவது உணர்ந்து சிந்தித்து தர்மத்தின்படி அன்னதானத்தின் மகத்துவத்தை அறிந்து அன்னதானம் செய்து இன்புற்று வாழ்வோம்.

உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் பசியாறுபவர்களின் வாழ்த்துக்கள் வீண் போலதில்லை. எவ்வித பிரதிபலனும் பாராமல்  அன்னதானம் செய்வோருக்கு ஊழ்வினையாலும், அஜாக்கிரதையினாலும், துன்பத்தாலும் சத்தியமாக எவ்விதமான ஆபத்துகளும் அண்டாது என்பதை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் இறைவன் மீதே ஆணையிட்டு கூறுகிறார். அதளால் ஆன்மலாபம் அடைந்து. புண்ணிபலமும் கிடைக்கின்றது. அன்னதானத்தில்  பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!


தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேளச்சேரியில்  1997-ம் ஆண்டு முதல் பசியால் வாடும் துயர் அறிந்து சிறுசேவையாக  தொடங்கி 2007- ம் ஆண்டு ஓர் அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாக தீபம் அறக்கட்டளை கடந்த 11 ஆண்டுகாலமாக நாளொரு  மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி
நித்ய தீப தருமச்சாலை வாயிலாகவும், 


நடமாடும் தருச்சாலை வாயிலாகவும்,


1.கொஞ்சிமங்கலம்
2.கேணிப்பட்டு
3,சென்னை கல்குட்டை
4,சென்னை அம்பேக்தார் நகர்
5,சென்னை கந்தன் சாவடி
6, தேவதாளம்பேட்டை
7,கெங்கவரம்
8, நெய்வேலி பெரியகுறிச்சி
9, மாங்குடி
9, சிவனாகரம்
10,திருவீழிமிழலை
11,கோவிந்தகுடி
12,சக்கர படித்துறை
13,ஸ்வாமிமலை
14,ஏழூர்குறிச்சி
15,மதுராந்தகம்
16,இருங்கூர்

உள்பட தமிழகம் முழுவதும் 19 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும்,  தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற ஆடுகின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. கிடைப்பதற்கரிய இநீத மாசில்லா தொண்டில் தாங்களும் பங்கு பெற்று உழைப்பாகவோ, நிதியாகவோ, பொருளாகவோ வாரி வழங்கி ஆன்மலாபம் பெற்று இன்புற்று வாழ அன்புடன் அழைக்கின்றோம்.


Helpful Links

-- 
With Regards
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...