Monday, 25 June 2018

24.06.2018 - கல்வி உதவித்தொகை நேர்காணல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 9-ம் ஆண்டாக கல்வி உதவித்தொகை வழங்குவதை முன்னிட்டு நேற்று (24-06-2018) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவங்களிடம் நேர்காணல் நடந்த போது எடுத்த படங்களை காணுங்கள்.தேர்ந்தெடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பிற்தான கல்வி உதவித்தொகை வருகிற 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்படுகிறது.

மிகவும் பின்தங்கிய நிலையில் வறுமையால் மேற்படிப்பு தொடர முடியாத மாணவ செல்வங்களின் வாழ்வில் ஒளியேற்றடவும், ஓர் ஏழை மாணவனின் எதிர்கால வாழ்வாதாரத்திற்தாக கல்விக்கான நிதி உதவியினை வாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.

கற்றோர் நெஞ்சம் நிமிர செய்வோம்
கல்லாதோர் இல்லாத பாரதம் படைப்போம்

தீபம் அறக்கட்டளை வழங்கும் 9-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு 
Donate by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of 'DEEPAM TRUST' with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donate by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055

இங்கு உதவ நினைப்பவர்கள் ஒரு புறமும்,
உதவி தேவைப்படுவோர் மற்றொரு புறமும்,
தொடர்பின்றி இருகின்றனர்.
இரு தரப்புக்குமான பாலமாக இருந்து
தீபம் அறக்கட்டளை உதவி செய்து வருகிறது.
நன்கொடை அளிக்க
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
Copyright © 2018 Deepam Trust, All rights reserved.
www.deepamtrust.org
Our mailing address is:
admin@deepamtrust.org

Friday, 22 June 2018

தீபநெறி 2018 - ஜூன் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.

Wednesday, 20 June 2018

DEEPAM TRUST Educational HELP Project - 2018:

தாய் தந்தை இழந்து நல்ல மதிப்பெண் பெற்று கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் 100 கிராமப்புற / நகர்புற ஏழை மாணவ மாணவிகளை (Diploma/Degree/Engg.) தீபம் அறக்கட்டளை தேர்ந்தெடுத்து, அவர்களின் மேற்படிப்பிற்க்கான
கல்விக்கட்டணத்தை கல்லூரியின் பெயரில் காசோலையாக கடந்த 9 வருடங்களாக இதுவரை 776 மாணவர்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்த ஆண்டு 112 மாணவ மாணவிகளுக்கு,
24.6.18 அன்று நேர்காணல் நடத்தி,
01.7.18 அன்று கல்வி உதவித்தொகையை
காசோலையாக வழங்கவுள்ளோம்.

இந்த சமுதாய அறப்பணியில் தாங்களும் பங்குகொண்டு ஓர் ஏழை மாணவன் அல்லது மாணவியின் கல்விக்கு உதவுமாறு அன்போடு விண்ணப்பிக்கிறோம்.

நன்கொடை அளிக்க
விரும்புவோர்,
தொடர்புகொள்க:
9444073635
04422442515
தீபம் அறக்கட்டளை
www.deepamtrust.org

Compassion is God !!!

தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

Thursday, 14 June 2018

16.6.18 - வடலூர் மாத பூசம்

16.6.18 (சனி)- வடலூர் மாத பூசம் & ஜோதி தரிசனம்:

வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில் நாள் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதான அறப்பணி செய்ய விருப்பமுள்ள சேவடிகள் தீபத்தை தொடர்புகொள்ளவும்.

வேன் புறப்படும் நாள்: 15.6.18
நேரம்: இரவு 9 மணி

இடம்: நித்ய தீப தருமச்சாலை, வேளச்சேரி

தீபம்
9444073635

Thursday, 7 June 2018

100 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.


வாரி வழங்கும் கல்விச் செம்மல்களாகிய தங்களின் பெருந்தயவோடு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இதுவரை கடந்த 8 ஆண்டுகளாக 776 - மாணவ, மாணவியர்களுக்கு ரூ.41,46,948/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்."    - பாரதி

இந்த ஆண்டும் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகைக்காக தீபம் அறக்கட்டளையின் உதவியை நாடி படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விரைவில் அவர்களிடம் தகுந்த கல்வி பேராசிரியர்களின் குழுக்கள் மூலமாக நேர்காணல் நடத்த  உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவச் செல்வங்களுக்கு விரைவில் கல்வி  உதவித்தொகை வழங்கப்படும். கடந்த வருடம் நடைபெற்ற கல்வி உதவிதொகையின் காணொளி தொகுப்பு 
தீபம் அறக்கட்டளை வழங்கும் 9-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு 
Donate by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of 'DEEPAM TRUST' with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donate by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055

இங்கு உதவ நினைப்பவர்கள் ஒரு புறமும்,
உதவி தேவைப்படுவோர் மற்றொரு புறமும்,
தொடர்பின்றி இருகின்றனர்.
இரு தரப்புக்குமான பாலமாக இருந்து
தீபம் அறக்கட்டளை உதவி செய்து வருகிறது.
நன்கொடை அளிக்க
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
Copyright © 2018 Deepam Trust, All rights reserved.
www.deepamtrust.org
Our mailing address is:
admin@deepamtrust.org

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...