Monday, 28 January 2019

சுத்த சன்மார்க்கம் & நடராஜர் | வள்ளலார் | தயவுமிகு இராஜவேல் | தீபம் அறக்...

மூளையும் ஆயிரம் கால் தூண்களும்? | தயவுமிகு இராஜவேல் | தீபம் அறக்கட்டளை

மூளை1008, உயிர் உருவாதல், கடவுள் | தயவுமிகு இராஜவேல் | தீபம் அறக்கட்டளை

சன்மார்க்க கொடி? | வள்ளலார் | தயவுமிகு இராஜவேல் | தீபம் அறக்கட்டளை

வள்ளலார் ஏற்றுகொண்ட நூல்கள்? | தயவுமிகு இராஜவேல் | தீபம் அறக்கட்டளை

வள்ளலார் எதற்கு வருவிக்கவுற்றார்? | இராமலிங்க அடிகளார் | தயவுமிகு இராஜவே...

Friday, 25 January 2019

தீபநெறி 2019- ஜனவரி மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.


அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.

Sunday, 20 January 2019

21.01.2019 - வடலூர் தைப்பூச ஜோதி

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் சத்திய தருமச்சாலையில் தொண்டாற்றும் தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள்.
Sunday, 6 January 2019

05.01.2019 - மார்கழி மாத பனிக்குளிரில் நடுங்கும் சென்னை மாநகர சாலையோரத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் போர்த்தி மகிழ்விக்கும் நிகழ்வுதிருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மார்கழி மாத பனிக்குளிரில் நடுங்கும் சென்னை மாநகர சாலையோரத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் போர்த்தி மகிழ்விக்கும் நிகழ்வு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து பத்தாம் ஆண்டாக சென்னை மாநகர் வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள இரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் சாலையோரங்களில் மார்கழி மாத கடுங்குளிரில் பரட்டை தலையுடன் சுருண்டு படுத்து உறங்கும், ஆதரவற்றவர்களை வறியவர்களை தேடிச் சென்று நேற்று (05-01-2019) நள்ளிரவு 12-30 மணி முதல் இன்று (06-01-2019) அதிகாலை 4-30 மணிவரை போர்வைகளை போர்த்தி சிறப்பு அன்னம் தந்து மகிழ்வித்த அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.

இந்த அருட் பணிக்கு  நிதியாகவும், போர்வைகளாகவும் வாரி வழங்கிய தயவாளர்களுக்கு,
அருளாளர்களுக்கு, தீபம் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

இந்நிகழ்வில் போர்வைகள் மட்டுமல்லாது, பசியால் படுத்து இருந்தவர்களுக்கு  உணவு தந்து காலை 3 மணி அளவிலும் 4 மணி அளவிலும் பசியோடு அவர்கள் உணவை எடுத்துக்கொண்ட காட்சி நெஞ்சை நெகிழ வைக்கிறது.
எண்ணற்ற ஆதரவற்றவர்கள் உணவை எடுத்துக்கொண்ட விதம், அவர்கள் முதல் நாள் இரவு உணவை சாப்பிடவில்லை அல்லது முதல் நாள் இரவு அரைவயிறு உணவோடு படுத்து இருக்கிறார்கள்  என்பதை உணர முடிகிறது.

இந்த அற்புதமான அருட்பணியில் தீபம் அறக்கட்டளையின் நடமாடும் தருமச் சாலை வாகனத்தில் 22 சேவடிகள் இரவு முழுவதும் கண்விழித்து இந்த அற்புத சமுதாயப் பணியை செய்திருக்கிறார்கள். அவர்களை தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

தொண்டு செய்வோம் !
ஆனந்தமாய் வாழ்வோம் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற சமுதாய அற தொண்டு நிறுவனம்

அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், தொண்டு செய்ய விரும்புவோர் தொடர்புக்கு;
9444073635

05.01.2019 - தீபம் அறக்கட்டளையின் சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதாந்திர முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நேற்று (05-01-2019) மாலை 6-30 மணியளவில் 13 மாத சொற்பொழிவாக சாகாவரமளிக்கும் சுத்த சன்மார்க்கம் என்கிற தலைப்பில் விருகம்பாக்கம்  சன்மார்க்க முரசு தயவுமிகு இராஜவேல் அவர்கள் உரையாற்றினார்கள். திரளான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பசியாற்றுவித்தல் நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் தீபம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சொற்பொழிவு நடைபெறும் நாள்: 02-02-2019(சனிக்கிழமை)
தலைப்பு: வள்ளல்பெருமான் பெற்ற பெருவெளி

உரை நிகழ்த்துபவர்:
மலைகளின் தென்றல், இயற்கை மூலிகைகளின் தங்கம், கள்ளக்குறிச்சியின் சன்மார்க்க சிங்கம்
தயவுமிகு பொதிகைப் ப்ரியன் (எ) கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
கள்ளக்குறிச்சி

அனைவரும் வருக!
அருளமுதம் பெறுக!

Saturday, 5 January 2019

05.01.2019 - வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!

இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் மார்கழி மாதம் குளிரில் போர்வை இல்லாமல் சாலையோரங்களில், பஸ் நிறுத்தங்களில், பாலங்களுக்கு அடியில், ஆதரவற்று படுத்து உறங்கும் ஏழைகளுக்கு தீபம் அறக்கட்டளை, போர்வைகளை போர்த்தி விடியற்காலை 5 மணி வரை இந்த அற்புத சமுதாய நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த தெய்வீக பணியில் தீபம் அறக்கட்டளையின் வேண்டுகோளை ஏற்று, கீழ்கண்ட அருளாளர்கள் போர்வைகளும் நிதியும் வழங்கியிருக்கிறார்கள்.

1)சிந்துஜா அவர்கள் 40 போர்வைகள்
2) V ஜானகிராமன் அவர்கள் 20 போர்வைகள்
3) ஆத்ம ஞான யோகாவின் ஆசிரியர் ராஜாராம் அவர்கள் ஆயிரம் பொற்காசுகள்
4)TAFE நிறுவனத்தின் லட்சுமி நாராயணன் அவர்கள் ஆயிரம் பொற்காசுகள்
5) திருநெல்வேலி சசிதரன் ஐயா அவர்கள் ஆயிரம் பொற்காசுகள்

வஸ்திரதானம் ரோக நிவாரணம் என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட  அருட்பணியில் தெய்வீக பணியில் நிதியாகவும் போர்வைகளாகவும் அள்ளிக்கொடுத்த வள்ளல்களை அருளாளர்களை மாமனிதர்களை  தீபம் அறக் கட்டளை மனதார உளமார வாயார வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்க தங்களுடைய தர்ம குணம் !
வாழ்க தங்களுடைய அன்பு குடும்பம்!
வாழ்க தங்களுடைய சந்ததிகள் !
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று நீடூடி வாழ்க என்று தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்க தர்மம்
வளர்க தர்மம்

தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம்

தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற சமுதாய அற தொண்டு நிறுவனம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

04.01.2019 - அரிசி உதவி

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையினால் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரத்தை  சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசந்தர்  குடும்பத்தினரின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  கடந்த 8 ஆண்டுகாலமாக மாதந்தோறும் 25Kg அரிசி (1 சிப்பம்)  மற்றும் மளிகை பொருட்கள் இன்று வழங்கப்பட்ட காட்சி.


Friday, 4 January 2019

04.01.2019 - அரிசி உதவி

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையினால் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரத்தை  சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலசந்தர்  குடும்பத்தினரின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு  கடந்த 8 ஆண்டுகாலமாக மாதந்தோறும் 25Kg அரிசி (1 சிப்பம்)  மற்றும் மளிகை பொருட்கள் இன்று வழங்கப்பட்ட காட்சி.


04.01.2019 - மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை பம்மல் அனகாபுத்தூரை டில்லிபாய் அவர்களின் மகன் சேகர் என்பவரின் டயாலிஸிக் மருத்துவ உதவியாக  கடந்த 6 ஆண்டுகாலமாக மாதந்தோறும் ₹5000/- நிதியுதவி இன்று வழங்கப்பட்ட காட்சி.வாழ்க தர்மம் 
வளர்க தர்மம்

தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம்

தீபம் அறக்கட்டளை
-இது ஓர் அரசு பதிவு பெற்ற சமுதாய அற தொண்டு நிறுவனம்

Tuesday, 1 January 2019

2019 ஆம் ஆண்டு மாத பூசம் - ஞானசபை நாட்குறிப்புகள்

வடலூர் ஞானசபை மாத பூச நாட்குறிப்பு 


2019 - வள்ளல்பெருமான் புகைப்படத்துடன் கூடிய தினசரி காலண்டர்

உள்ளத்திலும் இல்லத்திலும் வள்ளல்பெருமான் அருளாட்சி புரிய
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் புகைப்படத்துடன் கூடிய 2019-ம் ஆண்டு விலையில்லா தினசரி காலண்டர்  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் அச்சாகி தயாராக உள்ளது.
சென்னையில் உள்ள தீபம் நன்கொடையாளர்கள் மற்றும் சன்மார்க சங்கங்களுக்கு காலண்டர் தேவைப்படுவோர்

நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை

என்ற முகவரியில் வந்து நேரில் பெற்றுச் செல்லலாம்.

அனைத்து தீபம் நிர்வாகிகள் மற்றும் சேவடிகள் உடனே அழகிய காலெண்டரை பெற்றுச்செல்லுமாறு அன்போடு  வேண்டுகிறோம்.

வாழ்த்துக்களுடன்
தீபம்

2019 - காலெண்டர்

தீபத்தின் அழைப்பை ஏற்று அசுர வேகத்தில் காலெண்டர் பணியை முடித்துத்தந்த 16 சேவடிகளுக்கும், தலைமை ஏற்று 
காலெண்டர் பணியை வருடந்தோறும் செவ்வனே செய்யும் தயவு நாராயணமூர்த்தி அய்யா அவர்களுக்கும் தீபம் நன்றியினை பதிவு செய்கிறது.தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...