Wednesday 26 December 2018

25.12.2018 - கஜா புயல் மூன்றாம் கட்ட சேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிட
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்களாகிய மூன்று  டன் அரிசி, மற்றும் வேதாரண்யம் தருமச்சாலைக்கு தேவையான ₹28,000/- மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் நேற்று (25-12-2018) நேரில் வழங்கப்பட்டது.

முன்னதாக கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதிவாசி கிராமமான கோடியக்கரை பகுதி மக்களுக்கும், வேதாரண்யம் கடற்கரை பகுதி மக்களுக்காக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 25 Kg அரிசியை வீதி வீதியாக, வீடு வீடாக குடிசைகளில் வாழும் மிக மிக பின் தங்கிய குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட காட்சியை படத்தில் காணுங்கள். 

மூன்றாம் கட்ட சேவை வீடியோ பதிவு: https://youtu.be/5mMjdVzt1R8




மூன்று கட்ட சேவைகளையும் காண புகைப்பட தொகுப்பு:
http://deepamtrust.org/gaja-cyclone-2018/

தீபத்தின் சேவைகளுக்கு நிதியளிக்க:
http://deepamtrust.org/donate-now/

மூன்றாம் கட்டமாகவும் பொருட்களை அருளாக மாற்றி மூன்று டன் அரிசியை  உபயமளித்த தீபத்தின் பொற்கரங்களுக்கும், வாரி வழங்கிய ஈர நெஞ்சினர்களுக்கும், தயா உள்ளம் தயவாளர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த நன்றியினை காணிக்கை ஆக்குகிறோம்.

மூன்றாவது கட்டமாக கஜா புயல் நிவாரணப் பணிக்கு வருகை தந்த 
1, தயவு தீபம் பாலா
2, ஜோதி சதுரகிரியார்
3, தயவு   T.V.ரமேஷ்
4, தயவு இரவிச்சந்திரன்
5, தயவு தமிழ்தூதன்
6, தயவு D.சிவா
7, தயவு வெங்கடேஷ்
8, தயவு ஜெயதீஷ் 
9, தயவு குட்டி சாரதி
10, தயவு கணேஷ் ஆகிய ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபம் தனது கோடானு கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

தொடர்ச்சியாக 33 மணி நேரமாக (இரண்டு இரவு, ஒரு பகல்)கஜா புயல் மூன்றாம் கட்ட தீபத்தின் வாகனத்தை இயக்கிய தயவுமிகு வெங்கடேஷ் அவர்களின் தளராத சேவைக்கு நெஞ்சுருகி உளமாற வாழ்த்தி தலைவணங்குகிறோம்.

--
www.deepamtrust.org

Monday 24 December 2018

அரசு பதிவு பெற்ற நிறுவனமா?

அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.
---

தீபத்தின் நன்கொடையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்ட ஓர் சமுதாய தொண்டு நிறுவனம் என்பது தாங்கள் அறிந்ததே.

கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் அறப்பணிகளுக்கு பொருளாக, நிதியாக, சேவதாரிகளாக உடல் உழைப்பை தந்து சேவை செய்பவர்கள் ஏராளம். 

அறக்கட்டளையின் எண்ணிலடங்கா அறப்பணிகளுக்கு, சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள பதிவு அலுவலகத்திலும், புத்தேரிக்கரை தெருவில் உள்ள நித்ய தீப தருமசாலையிலும், நன்கொடைகள் நேரில் பெறப்படுகிறது.
பெறப்பட்ட நன்கொடை தகவலை உடனே sms செய்தி அனுப்பி, மறுநாள் ரசீதை தபாலில் அனுப்புகிறோம்.

நேரில் வரமுடியாதவர்கள் வங்கியின் மூலம் பண பரிமாற்றம் செய்கின்றனர். பண பரிமாற்றம் செய்தவர்கள், தங்கள் விபரங்களை அனுப்பவில்லை என்றால் யார் அனுப்பியது என எங்களுக்கு தெரியாது.  தங்களுடைய தகவலை (பெயர்,முகவரி,கைபேசி எண். ஈமெயில்,) எங்களுக்கு 9444073635 என்ற எண்ணிக்கோ கீழ்கண்ட வெட்சைட் லிங்கிலோ தெரிய படுத்தினால் மட்டுமே உங்களுக்கு உடனே ரசீது அனுப்ப இயலும். 

Thanking you in Advance !

மேலும் விபரங்களுக்கு http://deepamtrust.org/donate-now/

Saturday 22 December 2018

தீபநெறி 2018 - டிசம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.






















அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.
---
www.deepamtrust.org

Wednesday 19 December 2018

மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 3-ம் கட்ட கஜா புயல் நிவாரணம்

பேரன்புள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்களே கடந்த மாதம் 15-11-2018 அன்று இயற்கை சீற்றமான கஜா புயலினால் சோழவள நாட்டையே பதம் பார்த்து டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே புரட்டி போட்டு ஒரு மாதம் காலம் கடந்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே  கேள்விக்குறியாக்கி, சொந்த மண்ணில் அகதிகளாக, ஆதரவற்றவர்களாக இன்றும் நம் கண் முன்னே காட்சி அளிப்பது சொல்லொண்ணா துயரமாக  இருக்கிறது. 

டெல்டா மாவட்ட மக்களின் துயரத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்டு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை தீபம் அறக்கட்டளையின் மூலமாக வாரி வழங்கிய ஆன்மநேய உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கடந்த 20-11-2018 அன்று முதல் கட்டமாகவும், 01-12-2018 அன்று இரண்டாம் கட்டமாகவும் சென்று கிராமம், கிராமமாக பயணித்து பல்லாயிரக்கணக்கான ஜீவர்களின் பசிப்பிணியை போக்கி நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு சென்னை திரும்பினோம்.









முதல் கட்ட நிவாரண பணிகளை காண https://deepamtrustvelachery.blogspot.com/2018/11/blog-post_25.html

இரண்டாம் கட்ட நிவாரணம் பணிகளை காண https://deepamtrustvelachery.blogspot.com/2018/12/02122018.html

வீடியோ பதிவை காண



தற்போது தீபம் அறக்கட்டளையின் மூலமாக மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக டெல்டா நோக்கி பயணிக்க உள்ளோம். டெல்டாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் வேண்டி தீபத்திற்கு விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து மூன்றாம் கட்ட நிவாரணமாக பசியால் வாடிக் கொண்டு இருக்கும் குறைந்தது 200 குடும்பங்களுக்கு 25Kg அரிசி சிப்பம் வழங்க திருவுள்ளம் கொண்டோம்.

புறப்பாடு: 22.12.18 (சனி இரவு)
அரிசி தருமம் குறைந்தது : 5 டன்

தயா உள்ளம் கொண்ட கொடை வள்ளல்களே, ஈரநெஞ்சினர்களே, கடந்த முறை வாரி வழங்கியது போல் டெல்டா மாவட்ட மக்களின் தயரத்தை மனதில் கொண்டு அவர்களின் வயிற்றுப் பிணியாகிய பசிப்பிணியை போக்க 25Kg அரிசி சிப்பங்களை  வேண்டி தங்கள் அனைவரிடமும் விண்ணப்பிக்கிறோம்.

மூன்றாம் கட்டமாக, 5 டன் அரிசி சிப்பங்களை மட்டுமே எதிர்நோக்கி தங்களின் மேலான தயவை நாடும் ...

சமுதாயப்பணியே
இறைபணி
என உயிர்மூச்சாக,
இரவு பகல், ,
மழை, வெயில், புயல், ஜாதி, மதம் பாராது,
புகழ் விரும்பாது 
உழைக்கும்
உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை

தொடர்புக்கு:
தீபம் பாலா
9444073635
www.deepamtrust.org

Sunday 2 December 2018

02.12.2018 - கஜா பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது

இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க  பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018 ம்தேதி முதல் கட்டமாக சென்று தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.



நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான டெல்டா மாவட்ட மக்களின் பசிப்பிணி நீக்கிய தீபம் அறக்கட்டளை மீண்டும்  இரண்டாம் கட்டமாக பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 6-டன் பொருட்களை எடுத்துக் கொண்டு 02-12-2018 டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டம், வண்டல் எனும் தீவில் கடந்த 16 நாட்களாக அங்கு வாழும் மீனவ குடும்பத்தினர் நிவாரணம் பெறாமல் படும் துன்பத்தையும், துயரத்தையும் கண்டு 3- முறை படகில் 6-டன் எடையுள்ள பொருட்களை சுமந்து 2- கிலோ மீட்டர் கடல் நேரில் மிதந்து சென்று பார்த்து அறப்பணிகளை ஆற்றி, களப்பணியில் இறங்கியபோது வீடின்றி, உடையின்றி, உடமைகளின்றி, உறக்கமின்றி தவித்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ₹2500/- மதிப்புள்ள  பொருட்களான 

1.மெத்தை விரிப்பு
2.தலையணை
3.20 லிட் பிளாஸ்டிக் பக்கெட்
4. பிளாஸ்டிக் டப்பா
5. 10 கிலோ அரிசி
6. ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய மூட்டை
7. தார்ப்பாய்
8. தொடர்ந்து பத்து நாட்கள் எரியக்ககூடிய மெகா சைஸ் மெழுதுவர்த்தி
9. கொசுவலை
10. சர்ட், போர்வை, டவல் அடங்கிய புத்தாடைகள்
11. மினரல் வாட்டர்
12.பள்ளிக்கூட குழந்தைகளுக்கான ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, சாமண்ட்ரி பாக்ஸ் அடங்கிய பொருட்களை வழங்கி வந்தோம்








எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
 தம்உயிர்போல் எண்ணி உள்ளே
 ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
 யாவர்அவர் உளந்தான் சுத்த
 சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
 இடம்எனநான் தெரிந்தேன் அந்த
 வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
 சிந்தைமிக விழைந்த தாலோ

என்ற திருஅருட்பாவின் வைர வரிகளுக்கு ஏற்பவும், 

"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க"

"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி" 

என்ற  அகவலின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட முடிவு செய்த தீபம் அறக்கட்டளையின் மூலம் தானேபுயல், சென்னை பெருமழை வெள்ளம், வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்களுக்கு பொருளாகவும், கருணை நிதியாகவும் வாரி வழங்கியது போல்  தற்போது கஜா புயலையும் எதிர் கொண்டு தீபம் அறக்கட்டளையின் மூலம் பொருளாகவும், கருணை நிதியாகவும் வாரி வழங்கிய மனிதநேய காவலர்களையும், இரக்கமே குணமாக கொண்டவர்களையும, உயிர்நேய தொண்டர்களையும், ஆன்மநேய உடன்பிறப்புக்களையும், வாரிவாரி வழங்கிய கொடை வள்ளல்களையும், தொடர்ந்து ஒரு வார காலமாக களப்பணி ஆற்றிய ஆடுகின்ற சேவடிகளையும் மனமார, இதமார, உளமார, வாயார வாழ்த்தி வாழ்த்தி அவர்தம் தொண்டிற்கும், சேவைக்கும், தர்மத்திற்கும் தீபம் தலை வணங்குகிறது.

அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை 
9444073635

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...