Sunday, 27 May 2018

இரண்டு நாட்கள் புனித யாத்திரை


03-06-2018 (ஞாயிறு) & 04-06-2018 (திங்கள்)
நபர் ஒன்றுக்கு கட்டணம்: 1500/- மட்டும்.

பார்க்க வேண்டிய இடங்கள்:

1, பூம்புகார்
சிறப்பு: காவேரி ஆறு கடலில் சங்கமிக்கும் ஓர் இயற்கை எழில்சூழ்ந்த சுற்றுலா ஸ்தலம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2, சீர்காழி
அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி ஸமேத சட்டைநாதர்
சிறப்பு: திருஞானசம்பந்தருக்கு பார்வதிதேவி ஞானப்பால் வழங்கிய ஸ்தலம். மூலஸ்தான விமானத்தில் மூன்று மூலவர்கள் கொண்ட பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓர் புண்ணிய ஸ்தலம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3, திருக்கடவூர்
அருள்மிகு ஸ்ரீஅபிராமி அம்மன் ஸமேத அமிர்தகடேஸ்வரர்
சிறப்பு: எமதர்மனை சிவபெருமான் எட்டி உதைத்த திருத்தலம். அஷ்டவீரட்டு ஸ்தலங்களில் மிக முக்கியமானது.
ஷஷ்டியப்தபூர்த்தி, ஸதாபிஷேகம், மணிவிழா, ஆயுஷ்ய ஹோமம் போன்றவற்றிற்கு உலகப்புகழ் பெற்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4, திருவாரூர்
அருள்மிகு ஸ்ரீகமலாம்பிகை ஸமேத தியாகராஜஸ்வாமி
சிறப்பு: இப்பிறவியில் பிறப்பவர்க்கு மறுமை இல்லை என்ற திருத்தலம். சிதம்பரம் மற்றும் காசிக்கு ஈடுஇணையான திருத்தலம். உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் உள்ள ஒரே ஸ்தலம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5, வேளாங்கண்ணி
இயேசுபிரானை ஈன்றெடுத்த அன்னை வேளாங்கண்ணி மாதா வீற்றிருக்கும் திருத்தலம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவு நாகப்பட்டினத்தில் தங்குதல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மறுநாள் (04-06-2018) காலை நாகப்பட்டினத்தில் பழமை வாய்ந்த  வள்ளலார் ஒளி ஆலயம்    கும்பாபிஷேகம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6, அருள்மிகு ஸ்ரீஒப்பிலியப்பன் புண்ணிய ஸ்தலம்
சிறப்பு : துலுக்க நாச்சியாரை மணம்புரிந்த ஸ்தலம். இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் அனைத்து பிரசாதங்களும் உப்பில்லாமல் படைக்கப்படுகிறது. உப்பில்லா பண்டங்களை விரும்புவதால் இறைவன் ஒப்பிலியப்பன் என்று அழைக்கப்படுகிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7, கும்பகோணம்
அருள்மிகு ஸ்ரீமங்களாம்பிகை ஆதிகும்பேஸ்வரர்
சிறப்பு : பிரளயம் ஏற்பட்ட காலத்தில் உலகழிவில் இருந்து ஜீவராசிகளை காப்பாற்றிய உலகின் முதல் திருத்தலம். ஸ்ரீஅகஸ்திய மாமுனிவர் உறையும் ஸ்ஷேத்திரம் மகாமகம் தீர்த்தத்திற்கு பெயர் பெற்ற ஆதி திருத்தலம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நேரம் இருந்தால் திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை ஸமேத மேகநாதஸ்வாமி ஆலயமும், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க நாதஸ்வாமியையும் தரிசிக்கலாம்.

புறப்படும் நாள்: 02-06-2018 சனி இரவு 7-00 மணியளவில்
புறப்படும் இடம்:
 நித்ய தீப தருமச்சாலை 
7/8, புத்தேரிக்கரை தெரு 
வேளச்சேரி சென்னை 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏமாற்றத்தை தவிர்க்க முன்பதிவு அவசியம்.

தொடர்ப்புக்கு: 04422442515/9444073635
தீபம் அறக்கட்டளை
www.deepamtrust.org

தேவதானம்பேட்டை தருமச்சாலை


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 19  கிளை தருமச்சாலைகளில் ஒன்றான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம்  தேவதானம்பேட்டை கிராமத்தில் தினசரி காலை நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு அன்னக்கஞ்சி வழங்கப்படும் அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.
25.05.2018 நுங்கம்பாக்கம் ஸ்ரீசத்ய சாய் ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல்


திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ​வடலூர் சத்திய தருமச்சாலை 152-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு​ சென்னை நுங்கம்பாக்கம் கல்வித்துறை அலுவலக வளாகத்திலுள்ள ஸ்ரீசத்ய சாய் ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான  அன்பர்களுக்கு பசியாற்றுவிக்கப்பட்ட அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.Saturday, 19 May 2018

தீபநெறி 2018 - மே மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.

Friday, 18 May 2018

கல்வி உதவி தொகை விண்ணப்பம்


2018-2019 கல்வி ஆண்டிற்குரிய விண்ணப்பம் தீபம் அறக்கட்டளை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
விண்ணப்பம் வழங்கப்படும் நேரம்:
மாலை 3 முதல் 9 மணி வரை (திங்கள்-சனி)
நல்ல மதிப்பெண்கள் பெற்றும் வறுமையினால் தனது உயர்கல்வியை தொடரமுடியாதவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள், கிராமப்புற மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்லூரிகளில் சேரும்/பயிலும் மாணவ மாணவியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுகிறோம். பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
தகுதியான மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும், மற்றவர்கள் தயவு செய்து விண்ணபிக்க வேண்டாம்.
இதை படிக்கும் நீங்கள் மேற்கூறிய தகுதி உடைய மாணவ மாணவியர்கள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவர்களுக்கு இந்த செய்தியை பகிரலாம்.

Sunday, 6 May 2018

06.05.2018 சிறப்பு நீர்மோர் & ரஸ்னா பந்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த 
01-04-2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 35 நாட்களாக சுட்டெரிக்கும் கடும் வெய்யிலில் வாடும் அன்பர்களின் தாகம் தணிக்கும் பொருட்டு கோடை கால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினசரி பல நூற்றுக்கணக்கானோருக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று  (06-05-2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00 மணிமுதல் வேளச்சேரி காந்தி ரோடு பஸ் ஸ்டாப் அருகிலுள்ள தங்கநாராயணா சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் சிறப்பு கோடை கால நீர் மோர் & ரஸ்னா பந்தல் அமைத்து ஜீவகாருண்ய செம்மல்,  
தயவாளர். ஸ்ரீமான் செல்வராஜ் (உரிமையாளர்:தங்கநாராயணா சூப்பர் மார்க்கெட்) அவர்களின் உபயத்தில்  பல்லாயிரக்கணக்கானோருக்கு நீர்மோர் ரஸ்னா வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்:
என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில் உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை
www.deepamtrust.org

Saturday, 5 May 2018

05-05-2018-மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் நித்ய தீப தருமச்சாலையில் இன்று (05-05-2018) மாதாந்திர முதல் சனிக்கிழமை  சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. 
கருணையும் சிவமும் என்கிற தலைப்பில் கிராமிய பாரம்பரிய  சன்மார்க்க சீலருமான தயவுமிகு. அண்ணாமலை அய்யா  அவர்கள்  சொற்பொழிவாற்றினார்கள். திரளான ஆன்மநேய அன்பர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த மாதம் முதல் சனிக்கிழமை சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும் நாள்:02-06-2018

தலைப்பு: கொல்லாமையே விரதம்

சொற்பொழிவாற்றுபவர்:
ஜீவகாருண்ய செம்மல், சன்மார்க்க முரசு
தயவுமிகு சன்மார்க்க அருணகிரி அய்யா அவர்கள் 
அயனாவரம், சென்னை. 

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...