Thursday 26 September 2019

தீபநெறி 2019 - செப்டம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும்சன்மார்க்கிகளுக்கும்நலம் விரும்பிகளுக்கும்ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர்கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.





















Tuesday 24 September 2019

மாத பூச நன்னாள் வாழ்த்துக்கள் !!!

மாத பூசத்தை முன்னிட்டு இன்று தீபம் அறக்கட்டளையின் சார்பாக வடலூர் சத்திய தருமச்சாலையில் தொண்டு செய்யக் கூடிய 16 அருளாளர்களை, சேவடிகளை  தீபம் பாராட்டி மகிழ்கிறது.







வடலூர் தருமச்சாலையில் தீபம் சேவடிகளின் சேவையை ஒரு சில காட்சிகளாக கண்டு மகிழுங்கள்...

வடலூர் தருமச்சாலை அடுப்பின் நெருப்பை பார்பதே பரவசமென்றால், நெருப்பின் பக்கத்திலேயே நாள் முழுவதும் தொண்டு செய்பவர்களின் உணர்வு எப்படி இருக்கும் ?

கீழ்காணும் தொண்டு உள்ளங்களில் பாதகமலங்களுக்கு ஒரு கோடி வந்தனம் வந்தனம் வந்தனம்!!!

Deepam Bharathi
Deepam Gopal
Deepam Ganapathy
Deepam Krishnamurthy
Deepam Siva
Deepam Ramesh
Deepam Barathi
Deepam Guru Karthik
Deepam Gandhi
Deepam Tamil Gandhi
Tamil Sister
Deepam Praveen
Deepam Karthik
Nishaba Viswanathan
Viswanathan Wife
Ganesan

சாதாரண சோறு அருளுணவா மாறனும்னா தொண்டு செய்ற கையாலதான் சோறு சாப்டணும்.

இரண்டு இரவுகள் பயணம்! நாள் முழுவதும் அன்னதானம் திருத்தொண்டு! அற்புதம் அற்புதம் அற்புதம்!!!

தீபம் தொண்டர்களின் 73 மாத தொடர் தொண்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.


நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Saturday 7 September 2019

06.06.2019 - மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர வாழ்வாதார உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் பலருக்கு வழங்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி
 தயவு பாலசந்திரன் குடும்பத்தினருக்கும்,
சென்னை, பெரம்பூரை சேர்ந்த பார்வையற்ற
தயவு செல்வம் குடும்பத்தினருக்கும்,
ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி
தயவு பாலாஜி குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.





மேலும் அனகாபுத்தூரை சேர்ந்த நோயினால் வருந்துகின்ற சமுசாரி
தயவு சேகர் என்பவருக்கான டயாலிஸிக் மருத்துவ சிகிக்கைக்காக ₹5000/- க்கான காசோலை வழங்கப்பட்டது.

Friday 6 September 2019

தயாராகிக் கொண்டிருக்கும் லட்டு வகைகள்

நாளை மறுநாள் 8.9.19 அன்று சென்னை வேளச்சேரியில் நடைபெறக்கூடிய தீபம் அறக்கட்டளையின் 12 வது  ஆண்டு விழாவை முன்னிட்டு நித்ய தீப தர்மசாலை தருமச்சாலையில் தயாராகிக் கொண்டிருக்கும் லட்டு வகைகள் காராபூந்தி மற்றும் பாதுஷா.






இனிப்பு காரங்களுக்கு உபயம் செய்த நன்கொடையாளர் களையும் 20க்கும் மேற்பட்ட தொண்டு உள்ளங்கள் இரவு முழுவதும் தூக்கத்தை தியாகம் செய்து தொண்டு செய்த தொண்டு உள்ளங்களையும் தீபம் அறக்கட்டளை வாழ்த்தி மகிழ்கிறது.

சென்னையில் உள்ள  சென்னைக்கு அருகிலுள்ள  தமிழகத்திலுள்ள  ஆன்மநேய அன்புள்ளங்கள் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Thursday 5 September 2019

05.09.2019 - வ உ சி அவர்களின் பிறந்தநாள் அன்னதானம்

செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்களின் பிறந்தநாள்
🎂💐🎂💐🎂💐🎂💐🎂💐
சுதந்திர போராட்ட வீரர், மொழிபெயர்பாளர், நூலாசிரியர், பத்திரிகையாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் வா உ சிதம்பரம்.
சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் அவர் அரசியல் கைதியாக நடத்தப்படவில்லை. செக்கு இழுத்தல் உள்ளிட்ட கடும் சித்ரவதைக்கு ஆளானர். 1912ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் அவரது கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரால் முடக்கப்பட்டது. அப்படிப்பட்ட அற்புதமான சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்கள்.
அவர்களின் பிறந்த தினம் இன்று.








வா உ சி பிறந்த நாளை முன்னிட்டு வருடந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னம் தரக்கூடிய தீபம் அறக்கட்டளையின் நிரந்தர அன்ன புரவலர்,
தீபம் அறக்கட்டளையின் பாதுகாவலர்
*S மாதவன் ஐயா அவர்கள்* இன்று முழு அன்னதான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு இன்று சிறப்பு அன்னம் தந்து மகிழ்கிறார்.
அவரை தீபம் அறக் கட்டளை மனதார வாயார உளமார வாழ்த்தி மகிழ்கிறது.
வாழ்க அவருடைய திருத்தொண்டு.
வாழ்க அவருடைய தர்ம குணம்.
வாழ்க அவருடைய அன்பு குடும்பம் .
வாழ்க அவருடைய தொழில்.
வாழ்க அவருடைய ஆரோக்கியம்.
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று
நீடூடி வாழ்க !!!
பல்லாண்டு வாழ்க
என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக் கட்டளை வாழ்த்தி மகிழ்கிறது.


திருச்சிற்றம்பலம்
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Tuesday 3 September 2019

3000 லட்டு, பாதுஷா மற்றும் காராபூந்தி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு  விழாவில் கலந்து கொள்ளக்கூடிய நன்கொடையாளர்கள்,
சன்மார்க்க அருளாளர்கள், அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், இனிப்புகளும்,
காரமும் மஞ்சள் பையில் (உபயம் திரு கோபால் அவர்கள்)  போட்டு அருளாளர்களுக்கு தருவது நம்முடைய வழக்கம், பழக்கம்.

ஆண்டுவிழாவில் நடைபெறும் அன்னதானத்தில் இனிப்புகள் வழங்குவதற்கு பாதுஷா நம் தருமச்சாலையில் செய்ய இருக்கிறோம்.

5-9-201 வியாழக்கிழமை  இரவு  பலகாரங்களை  நித்ய தீப தருமச்சாலையில் தயார் செய்ய உள்ளோம். 

3,000 லட்டு, காராபூந்தி மற்றும் பாதுஷா  போன்றவை தயாரிக்க முழு செலவாக Rs.25,000/- வரை ( பலகார செய்ய தேவையான பொருட்களுக்கு மட்டும்) செலவாக உள்ளது.

பலகாரங்கள் செய்வதற்கு உண்டான பொருளை அருளாகவோ, நிதியை மதியாகவோ வாரி வழங்கி தாங்களும் இப்புண்ணிய தொண்டில் பாகம் பெற்று ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

Sponsors are Welcome!
Sugar 100 kgs
Bengalgram 100 kgs
Oil 5 tin (15 kgs × 5)
Cashewnut 5 kgs
Ghee 5 kgs
Volunteers are Welcome!

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
நித்ய தீப தர்மசாலை
புத்தேரி கரைத்தெரு தண்டீஸ்வரர் கோவில் அருகில்
வேளச்சேரி, சென்னை-600042
www.deepamtrust.org
22442515/9444073635

Monday 2 September 2019

01.09.2019 - வானுவம் பேட்டை பெருமாள் கோவில் அன்னதானம்

இன்று வானும் பேட்டையில் நடைபெற உள்ள 1500 க்கும் மேற்பட்ட அன்பு உள்ளங்களுக்கு அன்னம் அளிப்பதற்காக நித்ய தீப தருமச்சாலையில் இதோ நள்ளிரவு வேளையில் காய்கறிகளை தயார் செய்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களை பயனுள்ள பண்பு உள்ளங்களை தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.




வாழ்க தங்கள் திருத்தொண்டு!!!

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

வானுவம் பேட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் சார்பில் அன்னர் பிரசாதம் வழங்கிய அற்புத காட்சி...



அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...