Saturday, 24 March 2018

பசித்தவர்களுக்கு அன்னம் அளிப்போம் !

இறையன்பர்களே, வந்தனம்.

ஆகாரங் கொடுக்க உண்டு, பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும், கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத்
தேகமுழுவதும் சில்லென்று தழைய,
முகத்தினடமாகப் பூரித்து விளங்குகின்ற, கடவுள் விளக்கத்தையும், திருப்தியின்பமாகிய கடவுள் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.

ஆதலால் அந்த புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும், கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறிய வேண்டும்.

பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப்  புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால், இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறிய வேண்டும்.ஜீவகாருணியமே கடவுள் வழிபாடு ... திரு அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம் ....

பசித்தவர்களுக்கு
அன்னம் அளிப்போம் !
ஆண்டவன் அருள் பெறுவோம் !

தயவுடன்,
தீபம் அறக்கட்டளை
சென்னை, வேளச்சேரி
அன்னதானப்பணியில்...21 ஆண்டுகளாக...

தொண்டு செய்ய வாருங்கள்

தொண்டு செய்ய வாருங்கள்

தொண்டு செய்பவர் கடவுளில் பாதி....

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உணவு தயார் செய்து ஆதரவற்றோருக்கு தேடிச்சென்று உணவளிக்கக்கூடிய அறப்பணிக்கு தொண்டுள்ளம் கொண்ட சேவடிகள் தேவை.

காலை 7-00 மணிமுதல் மதியம் வரை சமையல் பணிக்கும் காய்கறி நறுக்குதல் மற்றும்  நூற்றுக்கணக்கான  அன்பர்களுக்கு அன்னம் தயார் செய்து வேளச்சேரி சுற்றி  உள்ள பகுதிகளான சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, தரமணி போன்ற இடங்களில் வசிக்கின்ற மற்றும் சாலையோரம் பசியால் வாடும் வறியவர்களுக்கு தேடிச் சென்று பசியாற்றுவித்தல் என்கிற அறப்பணி தொண்டிற்கும்  தங்களை  இணைத்துக் கொண்டு தாங்களும் பங்கு பெற்று  ஆன்மலாபம் அடைந்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ப்ரார்த்திக்கிறோம்.

தொண்டார்வமுள்ள தொண்டர்கள் 
தொடர்புகொள்க:
9444073635
04422442515

நித்ய தீப தருமச்சாலை
7/8 புத்தேரிக்கரைத்தெரு
வேளச்சேரி
சென்னை

19 தருமச்சாலைகள்

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உள்ளம் கொண்ட அன்பு சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தீபம் அறக்கட்டளையின் பணிவான வந்தனங்கள் பல.

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் குருவருளாலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளாலும், தயா உள்ளம் கொண்ட தங்களின் பெருந்தயவினாலும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது  கடந்த 21 ஆண்டுகளாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் படிப்படியாக வளர்ந்து, உயர்ந்து  இன்றைக்கு 19 தருமச்சாலைகளிலும் தாங்கள் அளிக்கின்ற அரிசி மளிகை போன்ற  பொருளாலும்,  கிள்ளி தராமல் அள்ளித்தந்த நிதியினாலும் இன்றுவரை அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

மேற்படி 19 தருமச்சாலைகளில் இனி எதிர்வரும் காலங்களிலும் தங்கு தடையின்றி தொடர்ந்து எல்லா நாட்களிலும் அன்ன(மூலிகை)க் கஞ்சி வழங்குவதற்கும், பசியாற்றுவிப்பதற்கும், தேவையான அரிசி மளிகை பொருட்கள் அதிகளவில் தேவைப்படுகிறது.

தயா உள்ளம் கொண்ட கொடை வள்ளல் பெருமக்களே தாங்கள் தங்கள் சக்திக்கேற்ப பொருளாகவோ, அருளாகவோ, நிதியாகவோ, மதியாகவோ, உழைப்பாகவோ வாரி வழங்கி  கிடைப்பதற்கரிய மாசில்லா  இப்புண்ணியத் தொண்டில் பாகம் அடைந்து ஆன்மலாபம் பெற்றுய்ய தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வாரி வழங்கும் கரங்களால் உலகமே வடலூராக வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு  உயிர்களின் பசிப்பிணி நீங்க வேண்டும்


தீபம் அறக்கட்டளை  ஓர் அரசு பதிவு நிறுவனம் என்பதாலும், 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு பெற்றிருப்பதாலும்,
விரும்பி அளிக்கும் நன்கொடைகளை
காசோலை மற்றும் வங்கி பண பரிமாற்றம் ( Cheque or bank transfer) மூலம் மட்டுமே அனுப்புமாறு அன்புடன்
விண்ணப்பிக்கிறோம்.
Rs.2000 மேல் ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்.

அலுவலக முகவரி:
தீபம் அறக்கட்டளை
30,திரௌபதி அம்மன் கோயில் தெரு
வேளச்சேரி, -600042

For Bank Transfer:
DEEPAM TRUST
State Bank of India 
IIT Branch 
Carreent A/c.No:30265475129
IFSC:SBIN0001O55
www.deepamtrust.org


தாங்கள் மனமுவந்து  அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு


தர்மம் செய்வோம்!
தயவுடன் வாழ்வோம் !!!

Thursday, 22 March 2018

மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் இன்று (21-03-2018) மாலை சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த முருகன் திலகவதி தம்பதியினரின் மகளாகிய, 7 வயது ஏஞ்சலினா ரோஷினிக்கு பிறவி முதலே தீராத நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.தற்சமயம் திருநெல்வேலியில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டு இருப்பதால் தீபம் அறக்கட்டளையின் சார்பில் ₹5000/- க்கான காசோலையை வழங்கி அந்த பால்மனம் மாறாத  குழந்தை பூரண நலம்பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் இப்புவியில் வலம் வரவேண்டி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

மருத்துவ உதவிக்கு ₹5000 நன்கொடை அளித்த தயவாளர்  தயவுதிரு செந்தில் அவர்களை தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

Wednesday, 21 March 2018

கூட்டுப் பிரார்த்தனை


சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும், தொழில்வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும், கடன் தொல்லை பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளை சமாளிக்கவும், நோய் நொடியில் இருந்து விடுபட்டு  நிறைவோடும் நிம்மதியோடும் என்றும் ஞானச்செல்வத்துடன் இன்புற்று வாழ வேண்டி 197 வது குருவார அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் மற்றும் ஜோதி தரிசனம் சிறப்பு கூட்டு ப்ரார்த்தனை வழிபாடும் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருட் பெருங்கருணைக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 22-03-2018 வியாழன்
இடம்: நித்ய தீப தருமச்சாலை 
7/8, புத்தேரிக்கரை தெரு வேளச்சேரி சென்னை 
நேரம்: மாலை 6-30 மணிமுதல்
அருட்பெருஞ்ஜோதி அகவல், அஷ்டகம், சமாதி வற்புறுத்தல் பாராயணம் 
நேரம்: இரவு 8-00 மணி 
ஜோதி வழிபாடு, தரிசனம், விண்ணப்பம் 
நேரம்: இரவு 8-15 மணி 
திருஅருட்பிரசாதம் வழங்குதல் 

அனைவரும் வருக!
அருள்ஜோதி அருள் பெறுக!

Tuesday, 20 March 2018

தீபநெறி 2018 - மார்ச் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இருப்பினும் அனைவரும் படித்து பயனடையும் வண்ணம் 2018 மார்ச் மாத தீபநெறி மின்னிதழை linkல் இணைத்துள்ளோம்.
https://deepamtrustvelachery.blogspot.com/2018/03/2018.html

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 9444073635-க்கு Whatsapp அனுப்பினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.Thursday, 15 March 2018

தரமணி கல்குட்டை கிளை தருமச்சாலை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 19 தருமச்சாலைகளில் ஒன்றான சென்னை தரமணி கல்குட்டை கிளை தருமச்சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு அன்னக்கஞ்சி வழங்கப்படும் அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.


தரமணி ஏழுநகர் கிளை தருமச்சாலை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் தருமச்சாலைகளில் ஒன்றான சென்னை தரமணி ஏழுநகர்  கிளை தருமச்சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு அன்னக்கஞ்சி வழங்கப்படும் அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.


பெரியக்குறிச்சி தருமச்சாலை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் தருமச்சாலைகளில் ஒன்றான நெய்வேலி பெரியக்குறிச்சி கிளை தருமச்சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு அன்னக்கஞ்சி வழங்கப்படும் அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.Sunday, 4 March 2018

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லத்தில் இன்று புத்தாடைகள் மற்றும் மசால் தோசை

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை முடிச்சூரில் உள்ள ஆதீஸ்வரர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லத்தில்  இன்று புத்தாடைகள் மற்றும் மசால் தோசை வழங்கி குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்ந்த காட்சியை படத்தில் காணுங்கள். 


இன்றைய அன்னதானத்திற்கும் புத்தாடைகளுக்கும் வாரி வழங்கிய தயவாளர்களுக்கும் மற்றும்  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் வாயார வாழ்த்தி கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...