01.08.2020 (சனிக்கிழமை) - அன்று மதுராந்தகம் அருகிலுள்ள ஐந்து கிராமங்களில் (ஜல்லிமேடு, கழனிபாக்கம், எண்டத்தூர், தாயந்தப்பாக்கம், சின்ன காலனி கிராமங்கள்) கூலி வேலை இல்லாமல், வறுமையில் வாடும் குடிசைகளில் வாழும் 110 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10கிலோ முதல் தர அரிசி, மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தீபம் அறக்கட்டளை வாகனம் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டன. அனைவருக்கும் பசி போக்க உணவு வழங்கப்பட்டது.
சமுதாயப் பணிக்கு நிதி வழங்கிய 24 நன்கொடையாளர்களையும், பொருட்களாக வழங்கிய 6 தனவான்களையும், நாள் முழுவதும் தொண்டு செய்த 18 (6+12) சேவடிகளையும் தீபம் அறக் கட்டளை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது!
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமம் காட்டுப்பகுதிகளில் மிக மிக ஏழ்மையில் வாடும் 100 குடும்பங்களுக்கு முதல்தர 10 கிலோ அரிசி சிப்பங்களுடன், 12 வகையான மளிகைப் பொருட்கள் இன்று நேரில் சென்று உணவுடன் வழங்கப்பட்டது.
மிக மிக ஏழ்மை நிலையில் உணவுக்கே வழி இல்லாமல் வேலை இல்லாத மக்கள் உணவாக இறந்துபோன ஈசலை உட்கொண்டு வாழ்வதைக் கண்டு மனம் மிக மிக வேதனை அடைந்தது.
தங்களைப் போன்ற ஒருசில நல் உள்ளங்களின் பேராதரவினால் பெருங்கருணையினால் இன்று 100 ஏழை இந்திய குடும்பங்களுக்கு அரிசியும் மளிகைப் பொருட்களும் மற்றும் ஏறக்குறைய ஏழ்மை நிலையில் வாடும் 500 இந்தியர்களுக்கு உணவு வழங்கப்பட்டதை நன்கொடையாளர்களுக்கு தெரிவித்து மகிழ்கிறோம்.
இப்படி ஒரு ஏழ்மை நிலையிலுள்ள பசியோடு வாழக்கூடிய மக்களை அடியேன் இதுவரை கண்டதில்லை.
இன்று நாள் முழுவதும் அற்புதமான மனதை நெகிழ வைத்த சமுதாயப் பணிக்கு நல் ஆதரவு தந்த நல் உள்ளங்களை மனதார போற்றி வாழ்த்தி மகிழ்கிறோம். காலை முதல் மாலை வரை தொண்டு செய்த தீபம் சேவதாரிகளை தீபம் வாழ்த்துகிறது.
தொடரட்டும் தங்கள் தொடர் தர்மம். வளரட்டும் இச்சமுதாயம்.
மீண்டும் மக்களின் பசி போக்கும் தொடர் அன்னதான பணிகளுக்கிடையே வரும் சனிக்கிழமை அன்று 25.7.20 காலை 8 மணி அளவில், சென்னை வேளச்சேரி கல் குட்டை பகுதியிலுள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல்தர 10 கிலோ மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்களும் நேரில் சென்று வழங்க இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
செல்லுமிடம் : மெய்யூர் கிராமம் திருவள்ளூர் மாவட்டம்
அதிகபட்ச தொண்டர்கள்: 6 முதல் 8
மேற்கண்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டிய பொறுப்பு:
திரு குமரேசன் அவர்கள்
திரு ஆனந்த் அவர்கள்
திரு சுப்பையா அவர்கள்
விருப்பம் உள்ள மற்ற சேவதாரிகள்.
*குறிப்பு: மேற்கண்ட சமுதாய பணியில் இக்குழுவில் உள்ள தீபம் நிர்வாகிகள் மற்றும் தீபம் சேவதாரிகளின் பாகம் (நிதியாக ...பொருளாக... தொண்டாக ...) இருக்க வேண்டும்.*
மீண்டும் ரூபாய் 2000 நிவாரண உதவி : தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு B கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் தங்களுடைய பெற்றோர்களுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை இன்று மேலும் திரு கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ருபாய் இரண்டாயிரத்து வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கியிருக்கிறது என்பதை பதிவு செய்து மகிழ்கிறோம். Rs.2000 உபயம் : பேராசிரியை S மீனா பாபு அம்மையார் அவர்கள். தொடர்ந்து தர்மம் செய்யும் மீனா பாபு அம்மையார் அவர்களை தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.
திருவொற்றியூர் மாற்றுத்திறனாளி திரு B நந்தகோபால் குடும்பத்திற்கு தீபம் அறக்கட்டளையில் சார்பாக ரூபாய் இரண்டாயிரத்துக்கான ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி. உபயம் திரு தேசிங்கு ஐயா அவர்கள், திருவல்லிக்கேணி
விழுப்புரம் அருள் மாளிகை மூலம் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை இன்று 10 அரிசி சிப்பங்களுக்கான உபயம் Rs.10,000 வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கியிருக்கிறது என்பதை தீபம் பதிவு செய்கிறது.
ஏழ்மையில் வாடும் சென்னை அனகாபுத்தூரரை சேர்ந்த திருமதி டெல்லி பாய் அவர்களுடைய மகன் திரு சேகர் அவர்களுக்கு மருத்துவ உதவியாக இன்று வங்கி பரிமாற்றம் மூலம் ₹ 5,000/- வழங்கப்பட்டது.