Thursday 27 August 2020

கல்வி உதவி 2020 - முதற்கட்ட இணையவழி நேர்காணல்

 முதற்கட்ட நேர்காணலுக்கு 53 மாணவ மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் கீழ்க்கண்ட படிவத்தை (Google Form) பூர்த்தி செய்ய வேண்டுகிறோம். (29.08.2020 - காலை 9 க்குள் பூர்த்தி செய்ய வேண்டும்)


சந்தேகங்களுக்கு 044-22442515 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


1) நேர்காணல் நடைபெறும் நாள்: 30.08.2020 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் தங்களுடைய அலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் (SMS) மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SMS பெறவில்லை என்றால் மேலே உள்ள WhatsApp எண்ணை தொடர்புகொள்ளவும். 

2) தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும்.

3) மாணவ மாணவியர்கள் இணையவழி நேர்காணலின் போது பெற்றோர் / பாதுகாவலர் உடன் இருக்க வேண்டும்.

4) Google Meet மூலம் நேர்காணல் நடைபெறும். கீழ்கண்ட இணைப்பில் சென்று தங்களுடைய அலைபேசியில் நிறுவி கொள்ளவும். https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.meetings

நேர்முக தேர்வில் இணைவதற்கு லிங்க் தங்களுடைய வாட்ஸ்ஆப் / மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். எனவே, மாணவ மாணவியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் இணைய இணைப்புடன் இருக்க வேண்டுகிறோம்.

Sunday 9 August 2020

தேடிச் சென்று உணவு வழங்குதல்

இன்று நமது தீபம் அறக்கட்டளை சார்பில் வேளச்சேரி, தரமணி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மீயூர் ஆகிய பகுதிகளில் சாலையில் வசிக்ககூடிய ஏழை, எளிய மக்களுக்கு இரவு உணவு & பிரட் பாக்கெட் வழங்கப்பட்டது.

Tuesday 4 August 2020

சாலையோரங்களில் இருப்பவர்களைச் தேடிச்சென்று உணவு வழங்குதல்

முழு ஊரடங்கின் போது ரோட்டோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு பசிப்பிணி போக்கும் பணி...தொடர்ந்து நான்கு மாதங்களாக...








தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை



----
கீழுள்ள இணைப்புகளை கிளிக் செய்வதின் மூலம் கரோன காலத்தில் தீபம் செய்துள்ள பணிகளை விரிவாகக் காணலாம்:

கொரோனா காலத்தில் தீபத்தின் சேவைகளைக் காண: https://bit.ly/dtcovid19

புகைப்படத் தொகுப்பு: https://bit.ly/dtcovidpg

வீடியோ: https://bit.ly/dtcovidvi

Monday 3 August 2020

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு மதிய உணவு

தர்மம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம் !

மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை தினசரி நூறு குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பசியாறும் காட்சியை கண்டு மகிழுங்கள். அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு.




ஒருநாளைக்கு உணவளிக்க 1000 முதல் 1500 வரை செலவாகிறது.

குழந்தைகளின் பசி தீர்க்க ஒவ்வொருவரும் ஒருநாள் உபயம் செய்யுங்கள். தொடர்ந்து உணவளிக்க உபயம் பெற முயற்சியுங்கள்.

தீபம் அறக்கட்டளை நடத்தும் பல்வேறு சமுதாயப் பணிகளில் இது ஓர் அற்புதமான சமுதாயப்பணி. உணர்வோம் உயர்வோம்!

தீபம் நிர்வாகம்

Sunday 2 August 2020

தீபம் அறக்கட்டளையின் நிவாரணப் பணிகள்

ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்



மெய்யூர் - https://deepamtrustvelachery.blogspot.com/2020/07/18072020-100.html

கல்குட்டை - https://deepamtrustvelachery.blogspot.com/2020/07/25072020.html

மதுராந்தகம் - https://deepamtrustvelachery.blogspot.com/2020/08/4.html

தீபம் அறக்கட்டளையின் 4ஆம் கட்ட நிவாரண பணி - மதுராந்தகம்

01.08.2020 (சனிக்கிழமை) - அன்று மதுராந்தகம் அருகிலுள்ள ஐந்து கிராமங்களில் (ஜல்லிமேடு, கழனிபாக்கம், எண்டத்தூர், தாயந்தப்பாக்கம், சின்ன காலனி கிராமங்கள்) கூலி வேலை இல்லாமல், வறுமையில் வாடும் குடிசைகளில்  வாழும் 110 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10கிலோ முதல் தர அரிசி, மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தீபம் அறக்கட்டளை வாகனம் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டன. அனைவருக்கும் பசி போக்க உணவு வழங்கப்பட்டது.








































சமுதாயப் பணிக்கு நிதி வழங்கிய 24 நன்கொடையாளர்களையும், பொருட்களாக வழங்கிய 6 தனவான்களையும், நாள் முழுவதும் தொண்டு செய்த 18 (6+12) சேவடிகளையும் தீபம் அறக் கட்டளை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது! 


தொடரட்டும் தங்கள் தொடர் தர்மம்!!!

தயவுடன்...
என்றென்றும் சமுதாயப் பணியில்...
தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை
(Since 1997...)

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...