Wednesday, 31 October 2018

மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில்.
மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு.

நாள்: 03-11-2018
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு:
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
உரையாற்றுபவர்: 
ஆன்மநேய அன்பு சகோதரி,
சன்மார்க்க மௌன போராளி   தயவுமிகு பிரபாவதி அம்மையார் அவர்கள், நிறுவனர், A.P.J. கருணை அறக்கட்டளை, கொளத்தூர், சென்னை.
சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

Sunday, 28 October 2018

28.10.2108 - இன்று 10 இடங்களில் தீபாவளி இனிப்புகளும், உணவும் தரப்பட்டன.
Food & Diwali sweets were distributed at the following homes:

1) Annals Childran home
2) Roshini home
3) Idhya Vasal Elders home
4) Love care center
5) Sri Sathyanarayana charitable trust
6) Karuani illam
7) Jeroham Children home
8) Ramalinga home
9) Annai parvi aatror Sangam
10) Ganapathy Sachidanandam Ashram

Total 10 homes

Tuesday, 23 October 2018

தீபநெறி 2018 - அக்டோபர் மாத மின்னிதழ்


சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவுசெய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம் அல்லது 94440 73635 / 044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை  வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பவும்.
Monday, 22 October 2018

22.10.2018 - கல்வி உதவித்தொகை

சென்னை திருவான்மியூர் அருகில்  சிறிய குப்பத்தில் வசிக்கும் A செல்வி என்பவர் கணவனால் கைவிடப்பட்டு வீடுகளில் பாத்திரங்களை அலம்பி மிகவும் கடினமான சூழ்நிலையில் தனது மூன்று பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார். இதில் 23 வயதான மூத்த பெண் பிள்ளை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுவதை அறிந்து கடைசி பெண் பிள்ளையின் (சந்தியா, 10 வயது, இதுவரை பள்ளிக்கு சென்றதே இல்லை). தீபத்தின் உதவியால் இப்போது தான் பள்ளி செல்ல உள்ளார். படிப்பு செலவை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் ₹10,000/- க்கான காசோலையை வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருப்பாதங்களுக்கு அனந்தங்கோடி நன்றி. உதவிக்கரம் நீட்டியவர் தயவு இரவி அவர்கள் மகன் சந்தோஷ், ஐ.ஐ.டி.

23.10.2018 - தேவதானம்பேட்டை தருமச்சாலை
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன்  சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 20 தருமச்சாலைகளில் ஒன்றான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்தில் தினசரி பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு மூலிகை கலந்த அன்னக்கஞ்சி வழங்கும் அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள். 
கொல்லா விரதம் குவலயம் ஓங்குக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 

Wednesday, 17 October 2018

தீபாவளி திருநாளில் மகிழ்வித்து மகிழ வாருங்கள்!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 9வது  ஆண்டாக தீபாவளி (06-11-2018) திருநாளில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளையும் மற்றும் முதியோர்களையும் ஊக்கப்படுத்தி ஸ்வீட்ஸ், காரம் மற்றும் பட்டாசுகளை வழங்கி மகிழ்வித்து மகிழ தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கடந்த வருட நிகழ்ச்சி வீடியோ பதிவாக காண இங்கே கிளிக் செய்யவும் https://youtu.be/GdT-01W3WVA
வருகிற 26-10-2018 வெள்ளிக்கிழமை  இரவு முழுவதும் பலகாரங்களை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் தயாராகிறது. ஆதரவற்ற இல்லங்களுக்கு தேடிச்சென்று வழங்க உள்ளோம். 5,000 லட்டு மற்றும் காராபூந்தி, மிக்ஸர் போன்றவை தயாரிக்க முழு செலவாக Rs.25,000/- வரை ( பலகார செய்ய தேவையான பொருட்களுக்கு மட்டும்) செலவாக உள்ளது

சென்னையில் உள்ள 10 முக்கிய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு ஸ்வீட்ஸ் & காரம் மற்றும் பட்டாசுகளை வழங்கி அவர்களை மகிழ்வித்து அவர்களுடன் இணைந்து தீபாவளி திருநாளை கொண்டாட விரும்பும் அன்பர்கள், தயவாளர்கள், சன்மார்க்க சொந்தங்கள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டு பலகாரங்கள் செய்வதற்கு உண்டான பொருளை அருளாகவோ, நிதியை மதியாகவோ வாரி வழங்கி தாங்களும் இப்புண்ணிய தொண்டில் பாகம் பெற்று ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

இது ஓர் 80G வருமான வரி விலக்கு பெற்ற, அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு
வேளச்சேரி, சென்னை-600042
www.deepamtrust.org
22442515/9444073635

Tuesday, 16 October 2018

09.10.2018 - ஏலக்குறிச்சி தருமச்சாலை
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 20 தருமச்சாலைகளில் ஒன்றான அரியலூர் மாவட்டம், ஏலக்குறிச்சி தருமச்சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு அன்னக்கஞ்சி வழங்கப்படும் அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.
அன்னதருமத்திற்கு வாரி வழங்கிய வள்ளல்களுக்கு கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி ...


Monday, 15 October 2018

14.10.2018 - தேனாம்பேட்டை வள்ளல்பெருமான் வருவிக்கவுற்ற பெருநாள் விழா
இன்று நமது தீப தருமச்சாலையில் 2200 அன்பர்களுக்கு பசியாற்றுவிப்பதற்தாக அன்னதான சமையல் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று தேனாம்பேட்டை வள்ளல்பெருமான் வருவிக்கவுற்ற பெருநாள் விழாவுக்கு அனுப்பப்பட்டது. மூன்று வேளையும் விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த அன்னதான பொறுப்பினை ஏற்று திறம்பட நடத்தி தரும்படி  நமது தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளான 

1, ஆனந்த் (பொருளாளர்)
2, செந்தில் (செயலாளர்)
3, வெங்கடேஷ் (உறுப்பினர்) ஆகியோர்களிடம் சில நாட்களுக்கு முன்பு  பொறுப்புக்களை ஒப்படைத்து இருந்தோம். 

வெங்கடேஷ் அவர்கள் நேற்றிரவே வருகை தந்து மீண்டும் இன்று அதிகாலையில் வருகை தந்து பணிகள் முடியும்வரை (மாலை 6-00 மணிவரை) முழுநேரமும் தன்னை அர்ப்பணித்து திறம்பட சேவைகளை செய்தார்.

தீபம் அறக்கட்டளை இட்ட பணியினை காலம் தாழ்த்தாது முன்கூட்டியே வருகைதந்து ஒத்துழைப்பு நல்கி, நாள் முழுவதும் தன் கடமையை திறம்பட நடத்தி தந்த தயவுமிகு. வெங்கடேஷ் அவர்களை தீபம் வாயார, உளமார, இதமார, மனமார வாழ்த்தி அவர்தம் தொண்டிற்கும் சேவைக்கும் தலை வணங்குகிறது.


இன்றைய சேவைக்கு அர்ப்பணித்திருக்கின்ற சேவடிகளை தீபம் வாழ்த்தி தலை வணங்குகிறது.

Sunday, 7 October 2018

07.10.2018 - கொளத்தூரில் அன்னதானம்

சென்னை கொளத்தூரில் உள்ள ஓர் சன்மார்க்க விழாவில் பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற அற்புதமானகாட்சியை படத்தில் காணுங்கள்
தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...