Friday, 29 December 2017

திருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல்

ஆன்மநேய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் இனிய வந்தனம்.

எல்லாம் வல்ல எம்பெருமான் பெருங்கருணையால் சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் வருகிற 30-12-2017 சனி மாலை 5-00 மணிமுதல் மறுநாள் 01-01-2018 திங்கள் மாலை 5-00 மணிவரை திருஅருட்பா ஆறாம் திருமுறை தொடர் முற்றோதல் நடைபெற உள்ளபடியால் ஆன்மநேய உடன்பிறப்புகள் அனைவரும் கிடைப்பதற்கரிய வாய்ப்பாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆன்மலாபம் பெற்றுய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்வுகள்:
30-12-2017 சனிக்கிழமை
மாலை 5-00 மணிமுதல்  அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

31-12-2017 ஞாயிறு 
காலை 8-00 To மதியம் 1-00  மணிவரை 
திருஅருட்பா ஆறாம் திருமுறை முதல்நிலை பாராயணம்
மாலை 4-00 To இரவு 8-00 மணிவரை திருஅருட்பா ஆறாம் திருமுறை இரண்டாம் நிலை பாராயணம்

01-01-2018 திங்கள் 
காலை 8-00 To மதியம் 1-00 மணிவரை 
திருஅருட்பா ஆறாம் திருமுறை மூன்றாம் நிலை பாராயணம்
மாலை 4-00 மணிமுதல் 
திருமுறை விண்ணப்பம்
ஜோதி வழிபாடு & தரிசனம்

வெளியூரில் இருந்து வருகைதரும் சன்மார்க்க சொந்தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தங்கும் வசதி, அறுசுவை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் வருக...
அருள்ஜோதி அருள் பெறுக..

இங்ஙனம்
நிறுவனர்...
நிர்வாக அறங்காவலர்கள்...
நிறுவன காப்பாளர்கள்...
நிறுவன உறுப்பினர்கள்...
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை-42
தொடர்ப்புக்கு:
9444073635/8939376652

Thursday, 21 December 2017

தீபநெறி 2017 - டிசம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இருப்பினும் அனைவரும் படித்து பயனடையும் வண்ணம் 2017 டிசம்பர்   மாத தீபநெறி மின்னிதழை linkல் இணைத்துள்ளோம். 
https://goo.gl/XFH8nJ

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 9444073635-க்கு Whatsapp அனுப்பினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.


Helpful Links
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

Sunday, 3 December 2017

ஒகி புயலில் தீபத்தின் நேரடி உதவிக்கரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் நிவாரண முகாமில் உள்ள குடும்பங்களுக்கு நேற்று இரவு (2.12.17) வழங்கப்பட்ட
நிவாரண உதவியின் சில காட்சிகள் ...

எங்கெங்கிருந்துயிர் ஏதேது வேண்டினும் அங்கெங்கிருந்து அருள்புரி அருட்பெருஞ்ஜோதி...Helpful Links
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

Saturday, 2 December 2017

தீபத்தின் சமுதாயப்பணி

வணக்கம், நேற்று 02.12.2017 சென்னை பெரும்பாக்கம், எழில் நகர், அவுஸிங் பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் முதியவர் ஒருவர் பெயர் திருமதி.லோகநாயகி, என்பவர் பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆதரவற்று இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று சமூக சேவகர்களான அகல் பௌண்டேஷன் திரு வெங்கடேஷ் மூலம்  மேற்சொன்ன இடத்திற்கு சென்று பிறகு ஆதரவற்று இருக்கும் அந்த நபரிடம் பேசினார். பிறகு அவரை நல்ல முறையில் மீட்டுக் கொண்டு சம்பந்தப்பட்ட எஸ்11 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் ஒப்புதல் கடிதம ( general memo) பெற்று மேற்சொன்ன முதியவரை சென்னை போரூரில் உள்ள லிட்டில் டிராப்ஸ் முதியோர் இல்லத்தில் நல்ல முறையில் சேர்த்து அவரின் பாதுகாத்து பராமரித்திட மேற்சொன்ன இல்லத்தில் சேர்த்து விடப்பட்டார்.இந்த மாதிரியான காரியங்கள் செய்ய முடிகிறது என்றால் தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்தினாலும் ஆதரவினாலும் தான் நடக்கின்றன என்பதனை தங்களுக்கு நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி நன்றி வணக்கம்.

தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை

ஒகி புயல் - நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கடும் மழையால்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நிவாரண உதவி வழங்கும் ஏற்பாடு.


முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க நிலை அடைக !
ஓங்குக !! உயர்க !!!
- வள்ளலார்Helpful Links
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street,Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...