Monday, 8 April 2019

தீபத்தின் மாதாந்திர சமுதாயப் பணிகள் (05/04/2019)







அன்புடைய நம்மவர்களே நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில்
டயலிஸிஸ் மருத்துவ உதவியும்; அரிசி உதவியும் பிரதி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பார்வையற்ற அயனாவரம் செல்வம் குடும்பத்திற்கும்,  மாற்றுத்திறனாளி பெரம்பூர் பாலச்சந்தர் குடும்பத்திற்கும், ஊரப்பாக்கம் பாலாஜி குடும்பத்திற்கும், தீபம் மாதந்தோறும் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அரிசி மளிகை பொருட்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மற்றும் இரண்டு சிறுநீரகம் செயலிழந்த அனகாபுத்தூர் ஏழை மூதாட்டி மகன் சேகர் (வயது 32) அவர்களுக்கு டயாலிசிஸ் மருத்துவ உதவியாக கடந்த 5 ஆண்டுகளாக மாதந்தோறும்  5000 பொற்காசுகள் தீபம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் கும்பகோணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கணேசன் அய்யா அவர்களுக்கும்  டயாலிஸிஸ் மருத்துவ சிகிச்சைக்கு மாதந்தோறும் தீபம் ₹5000 அனுப்பிக்கொண்டிருக்கிறது.

இன்று மதியம் மேற்படி அனைவருக்கும் எதிர்கால வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அற்புதமான சமுதாய பணியில்,
ஜீவகாருண்ய பணிக்கு நன்கொடைகள் அள்ளித்தரும் அருளாளர்களை  தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

வாழ்க தர்மம்!
வளர்க தர்மம் !!!
தர்மம் செய்வோம்
தயவுடன் வாழ்வோம் !!!

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...