Monday, 17 February 2020

16.02.2020 - நித்ய தீப தர்மசாலையில் ஜோதி தரிசன விழா

16.2.20 - இன்று நித்ய தீப தர்மசாலையில்  நடைபெற்ற ஜோதி தரிசன திருவிழாவில் கலந்துகொண்டு, விழாவை  எள்ளளவு குறையும் இல்லாமல், சீரும் சிறப்புமாக மிக மிக அற்புதமாக நடத்திக் கொடுத்த தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளையும், விடியற்காலை 2 மணி முதல் காய்கறிகளை நறுக்கி, நாள் முழுவதும் மாலை பாத்திரங்கள்  கழுவி முடிக்கும்வரை, சிறப்பு அன்னம் வடை பாயாசத்துடன் மிக மிக சுவையாக தயார் செய்த, நளபாக சக்கரவர்த்திதிரு பாரதி தலைமையில் 
திரு வேல்முருகன் ஐயா  
திரு  ஆனந்த் அவர்கள்
திரு கோபால் அவர்கள்  
திரு நாராயண மூர்த்தி அவர்கள்
திருமதி மின்னல் அம்மா அவர்கள்
திரு  ஓம் பிரகாஷ் அவர்கள் 
திரு காந்தி அவர்கள் 
திரு சிவா அவர்கள்  
திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள்  
திரு கணபதி அவர்கள்  
திரு செந்தில் அவர்கள் 
திரு மனோ அவர்கள் 
திரு T V ரமேஷ் அவர்கள்
திரு M பாண்டியன் அவர்கள் மற்றும் ஜோதி தரிசன விழாவில் கலந்துகொண்டு, விழாவினை  சிறப்பித்த தீபத்தின் நன்கொடையாளர் களுக்கு கோடான கோடி நன்றி.

தயவுடன் ...
நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

Tuesday, 11 February 2020

ஜோதி தரிசன விழா மற்றும் ஒளிநெறி திருவிழா

தீபம் அறச்சாலையில் -வள்ளலார் ஜோதி தரிசன விழா மற்றும் ஒளிநெறி திருவிழா

நாள்: 16.2.20 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை

அனைவரும் வாரீர்! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பெருவீர்!

வரும் ஞாயிறன்று 16.2.2009 சென்னை வேளச்சேரி  தண்டீஸ்வரம்  கோவில் அருகில்  அமைந்துள்ள  நித்ய தீபத்  தர்மசாலை வளாகத்தில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் மற்றும் சிறப்பு அன்னம் பாலித்தல் (பசியாற்றுவித்தல்) நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த அற்புத நிகழ்வில் 
தீபம் நிர்வாகிகள்,
தீபம் நன்கொடையாளர்கள்,
தீபம் சேவடிகள்,
தீபத்தில் பயின்ற மாணவ மாணவிகள்,
சன்மார்க்க சம்பந்திகள்,
வேளச்சேரி பகுதியில் வாழும் தீபம் நன்கொடையாளர்கள், குடும்பத்தோடு கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்குமாறு  தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

நிகழ்வு

16.2.2020(ஞாயிறு)

காலை 5 மணி : அகவல் பாராயணம்
தலைமை - அயன்புரம் அருணகிரி ஐயா அவர்கள்

7 மணி : கொடியேற்றம்
திரு S டில்லிபாபு ஐயா அவர்கள், செயலாளர் திரௌபதி அம்மன் கோவில், வேளச்சேரி.

8 மணி காலை அருளமுது

9 மணி: தேவதானம் பேட்டை திரு அண்ணாமலை ஐயா அவர்கள் தலைமையில் தேனென தித்திக்கும் அருட்பா பஜனை பாடல்கள்.

12 மணி : 7 திரை விளக்கம்
திரை விளக்கவுரை - திரு மகாதேவன் ஐயா அவர்கள்,
ஸ்தாபகர் உயிர்க்கொலை
தடுப்பு இயக்கம், ஜமின் பல்லாவரம்.

12.30 மணி: 7 நீக்கி ஜோதி தரிசனம்

1 மணி : சிறப்பு அன்னம் பாலித்தல் (பசியாற்றுவித்தல்)

சென்னை வேளச்சேரி நித்ய தீபத் தருமச்சாலையில் ஜோதி தரிசனம் கண்டு அகம் மகிழுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.


ஜோதி மலர் அலங்காரம் காலை, மதியம் அன்ன உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.


தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

நித்திய தீப தர்மசாலை வளாகம்
No.7/8, புத்தேரி கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி சென்னை 42.
094440 73635 / 04422442515
https://maps.app.goo.gl/ZBsNm8FeZAdt5TZL9

சோறு போடுபவர் சொக்கநாதனாக ஆவார் !!!

சாதம் போடுபவர் சாமியாக ஆவார்!

உணவு கொடுப்பவர் உத்தமன் ஆவார்!

கஞ்சி கொடுப்பவர் கடவுளாக ஆவார்!

தைப்பூசம் 2020 | வடலூரில் தீபம் அறக்கட்டளையின் சேவை

Sunday, 9 February 2020

தைப்பூசம் 2020 | வடலூரில் தீபம் அறக்கட்டளையின் சேவை

தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மனித பிறப்பின் பெருமையே நாம் வாழும் பயனுள்ள வாழ்க்கையில் தான் இருக்கிறது. மனிதர்களாக பிறந்தவர்கள் மாமனிதர்கள் ஆவதும், மாமனிதர்கள் மகான்கள் ஆவதும், மகான்கள் தெய்வங்கள் ஆவதும், தெய்வங்கள் கடவுள் நிலையை அடைவதும், மனிதராகப் பிறந்து இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக் கூடிய ஓர் அரிய அற்புத வாய்ப்பு. *அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது;* ..... *தான தர்மம் செய்தல் அரிது.* *தான தர்மம் செய்வாராகில்* *வானவர் நாடு வழி விடுமே* என்பார் அவ்வைப் பிராட்டி. தீபம் அறக்கட்டளையின் அனைத்து அறப்பணிகளுக்கும் தொடர்ந்து நன்கொடைகளை மாதம்தோறும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் அரிதினும் அரிதான மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களை வணங்கி மகிழ்கிறோம். 8.2.2020 அன்று வடலூரில் நடைபெற்ற தைப்பூச திருவிழா நிகழ்விற்கு ஜோதி தரிசனம் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற தொடர் அன்ன தர்மத்திற்கு அருள்நிதி ஆகவும், பொருளாகவும் வாரி வாரி வழங்கிய தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை வாயார வாழ்த்தி மகிழ்கிறோம்.


வடலூர் தைப்பூச விழாவின் அன்னதானத்திற்கு தீபம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கிய *36 நன்கொடையாளர்களையும்,* தொடர்ந்து மூன்று நாட்களாக வடலூரில் இரவு பகலாக தொடர்ந்து அன்னதான திருத்தொண்டு செய்த *தீபம் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டு உள்ளங்களையும்,* வடலூர் சத்திய தருமச்சாலையில் கடந்த மூன்று தலைமுறைகளாக ஏறக்குறைய 111 ஆண்டுகளுக்கும் மேலாக சத்திய தருமச்சாலையில் மாத பூச நாட்களில் அன்னதர்மப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கக் கூடிய *நாகப்பட்டினம் அகல்விளக்கு மன்றம்* கடந்த ஒரு வாரமாக வடலூரில் முகாமிட்டு, பந்தலிட்டு, தேவையான மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள் (டன் கணக்கில்), பாத்திரங்கள், அடுப்புகள், விறகு, கேஸ் சிலிண்டர் முதலானவற்றை திட்டமிட்டு, அமைதியாக, மிக அற்புதமாக மிக மிக நேர்த்தியாக, எவ்வித ஆடம்பரம் இல்லாமல், அன்போடு, தயவோடு, கருணையோடு, வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் காண வருகின்ற ஆயிரக்கணக்கான, லட்சோப லட்சம் மக்களுக்கு தொடர்ந்து பசி ஆற்றும் அரும் பணியில், தீபம் அறக்கட்டளைக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, நல்வாய்ப்பை, நல் ஆதரவை, நல்லாசியை, உற்சாகத்தை தொடர்ந்து தீபம் அறக்கட்டளைக்கும், தீபம் சேவடிகளுக்கும் கொடுத்து கொண்டிருக்கக்கூடிய, ஆன்மிகப் பண்புகளை, ஆன்மீக அற்புதங்களை, நல்லறம் போற்றும் மா மனிதர்களாகவும் மகான்களாகவும் ஜீவகாருண்ய வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று உணர்த்திக்கொண்டும், வாழ்ந்து கொண்டும், பிறரை வாழ வைத்துக் கொண்டும் இருக்கக்கூடிய *திருவாளர்கள் சைவமணி ஐயா அவர்களுக்கும்,* *திரு ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கும்* சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் ஒரு கோடி வந்தனங்கள். 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் மூலம் அவரவர் பகுதியில் தீ மூட்டி அன்பான அன்னம் தயாரித்து பசியாற்றிய சன்மார்க்க அன்பு உள்ளங்களை தீபம் அறக்கட்டளை வணங்கி மகிழ்கிறது. 🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚 தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களின் வருகையால், ஞான சபையைச் சுற்றிலும், தர்மசாலையை சுற்றிலும், இறைந்திருக்கும், நிறைந்திருக்கும், டன் கணக்கில் குவிந்திருக்கும், குப்பைகளை தன்னுடைய 500க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மூலம், தொண்டர்கள் மூலம் சுத்தம் செய்யக்கூடிய அருளாளர், பேச்சாளர், அருட்பா பாடகர், இசை அமைப்பாளர், சமூக சேவகர் என்று பல்வேறு நாமதேயங்களை *வடலூர் சேவை மையம் நிறுவனர், திருக்கோவிலூர் தயவு திரு ஜீவ சீனிவாசன் ஐயா,* அவர்களின் தொண்டை கண்டு அகம் மகிழ்கிறோம். அருமையான பணியை கண்டு பெருமைப்படுகிறோம். இறைப்பணி வாழ்க என்று திருவருட்பிரகாச வள்ளலார் இடம் பிரார்த்திக்கிறோம். வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க ! தயவுடன் ... நிறுவனர் *தீபம் அறக்கட்டளை* 9444073635 தீபம் அறக்கட்டளையின் அனைத்து செயல்பாடுகளை காண: www.deepamtrust.org

Friday, 7 February 2020

07.02.2020 - வடலூரில் தைப்பூச சேவை

தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் சேவை செய்வதற்காக அரிசி மற்றும் மளிகை பொருட்களுடன் நேற்று சென்ற தீபத்தின் சேவதரிகள் இன்று காலை முதல் சேவையை தொடங்கினர்.
Thursday, 6 February 2020

06.02.2020 - தைப்பூச சேவைக்கு வடலூர் பயணம்

வடலூர் அன்னதான சேவைக்கு சேவதாரிகளுடன் மளிகைப்பொருட்களுடன்  வாகனம் புறப்பட்ட காட்சி...

07.02.2020 முதல்  09.02.2020 வரை மூன்று நாட்கள் தொடர் சேவை 
Wednesday, 5 February 2020

தீபநெறி - 2020 ஜனவரி மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும்சன்மார்க்கிகளுக்கும்நலம் விரும்பிகளுக்கும்ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர்கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.


Wednesday, 29 January 2020

29.01.2020 - சன்மார்க்க அன்பர்களுக்கு உணவு

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு நன்றி நன்றி நன்றி

இன்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்ற அகவல் பாராயணம் நிகழ்விற்கு
சென்னை மற்றும் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த 1500க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களுக்கு, நடமாடும் தெய்வங்களுக்கு, திருஅருட்பிரகாச வள்ளலாரின் பேரருள் பெரும் கருணையினால்,
தீபம் அறக்கட்டளையின் சார்பாக காலை உணவு அன்போடு பரிமாறப்பட்டது.
இந்த அருள் உணவு தயாரிக்கும் பணியில் விடியற்காலை இரண்டு மணிக்கு அடுப்பேற்றி ஓயாது தொண்டு ஆற்றிய தீபம் சேவகர்களுக்கு குறிப்பாக
தீபம் பாரதி
தீபம் வேல்முருகன் அய்யா
தீபம் கணபதி
தீபம் கிருஷ்ணமூர்த்தி ஐயா
தீபம் பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு அனந்தகோடி வந்தனம் வந்தனம் வந்தனம்.

தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Monday, 27 January 2020

29.01.2020 - கருணை இல்லம் குழந்தைகளுக்கு உணவு

மகிழ்வித்து மகிழ்தல்

ஓடி ஓடி உழைக்க வேண்டும்
ஊருக்கெல்லாம் கொடுக்கவேண்டும்
ஆடி பாடி நடக்கவேண்டும்
அன்பை நாளும் வளர்க்க வேண்டும்.

என்ற அற்புத வரிகளுக்கேற்ப தீபம் அறக்கட்டளையானது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள குழந்தைகள் காப்பகம்
முதியோர் காப்பகங்கள்
மாற்று திறனாளி இல்லங்களுக்கு
உடைகள் தந்து
உணவு தந்து,
அரிசி தந்து
ஆடி பாடி மகிழ்விக்க கூடிய அருட்பணியை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாடம்பாக்கம் கருணை இல்லம் குழந்தைகளுடன் ஆடிப்பாடி உணவு தந்து மகிழ்வித்த தருணம்... ஓரிரு காட்சிகளை ஒரு நிமிட பதிவாக கண்டு மகிழுங்கள்...
இந்த சமுதாய நிகழ்விற்கு உபயம் செய்த வேளச்சேரி எக்ஸலண்ட்  மருத்துவமனை நிறுவனர் டாக்டர் B செந்தில் நாதன் ஐயா அவர்களையும் ஓயாது சேவை செய்து வரும் தீபத்தின் சேவதாரிகளையும் தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

அடுத்த நிகழ்வு அடையாறு ஆந்திர மகிள சபா குழந்தைகளுக்கு உணவு தந்து அரசி கொடுத்து ஆடைகள் கொடுத்து ஆடிப்பாடி மகிழ்விக்க... வாருங்கள் மகிழ்வித்து மகிழ்வோம்!!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

தயவுடன்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு வழங்குதல்

நாள் : 29 1 2020 புதன்கிழமை
நேரம் :காலை 7 மணி
இடம் : குருநானக் கல்லூரி வேளச்சேரி

வரும் புதன்கிழமை 29 1 2020 அன்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய திரு அகவல் ஓதுதல் என்ற பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நிகழ்ச்சிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு தருவதற்கு இறையருள் நமக்கு கட்டளையிடுகிறது.
பாக்கு தட்டில் உணவு தர இருக்கிறோம். நிதி பொருள் உழைப்பு மூன்றும் தேவைப்படுகிறது.

காலை உணவு:
1) Sakkarai Pongal
2) Ven pongal
3) Sambar
4) Cocount Chutney
5) Idili

இந்த அற்புதமான சமுதாயப் பணிக்கு உணவு தயாரித்து கொடுப்பதற்கு தீபம் சேவடிகள் நேரில் வந்து உதவுமாறு தீபம் கேட்டுக்கொள்கிறது.

திருஅகவல் நிகழ்வில் தீபம் நிர்வாகிகள் மற்றும் தீபம் சேவகர்கள் கலந்துகொண்டு ஆன்மலாபம் பெறுமாறு தீபம் அழைத்து மகிழ்கிறது.

இட்லி மாவு அரைத்தல்
இட்லி தயாரித்தல் மிகப்பெரிய பணி.
புதன்கிழமை விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி அளவில் அடுப்பு ஏற்ற வேண்டும்.

சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் நாளை இரவே தர்ம சாலைக்கு வந்து விடவும்.

எதிர்பார்ப்புடன்...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Sunday, 26 January 2020

குளிரால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்குதல்

இன்று(26.1.20) நள்ளிரவு 12.10 முதல் அதிகாலை 4.10 மணி வரை கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் ரோட்டோரம்,
பஸ் நிறுத்தங்களில் ரயில் நிலையங்களில் பாலங்களுக்கு அடியில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் சூடான உணவு பாக்குதட்டில் பசித்தவர்களுக்கு குடி தண்ணீருடன் பிரார்த்தனையோடு தரப்பட்டது.


இந்த அற்புதமான சமுதாயப் பணியில் இரவு முழுவதும் தொண்டு செய்த இறைவனுடைய செல்ல பிள்ளைகளாகிய தீபத்தின் கண்மணிகளையும், நூற்றுக்கணக்கான போர்வைகளுக்கு நிதியாகவும், போர்வைகளாகவும், அள்ளிக்கொடுத்த தர்மவான்களை,
வாழும் வள்ளல்களை
தீபம் அறக்கட்டளை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

16.02.2020 - நித்ய தீப தர்மசாலையில் ஜோதி தரிசன விழா

16.2.20 - இன்று நித்ய தீப தர்மசாலையில்  நடைபெற்ற ஜோதி தரிசன திருவிழாவில் கலந்துகொண்டு, விழாவை  எள்ளளவு குறையும் இல்லாமல், சீரும் சிறப்புமா...