Monday, 15 April 2019

இன்று, 12.4.19, ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கலைக் கல்லூரியில் BCA பயிலும் ஏழை மாணவி பவித்ரா அவர்களுக்கு கல்வி உதவி


 Balakrishnan Sir Deeapm: இன்று, 12.4.19, ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கலைக் கல்லூரியில் BCA பயிலும் ஏழை மாணவி பவித்ரா அவர்களுக்கு
Rs.17,250 பொற்காசுகள் கல்வி உதவியாக காசோலை வழங்கப்பட்டது.

ஏழை மாணவி பவித்ரா அவர்களின் கல்வியை தொடர உதவித்தொகை அளித்து, உதவி செய்த, 
நன்கொடை வழங்கிய,
கொடைவள்ளல் 
தர்மப்பிரபு 
நிரந்தர அன்ன புரவலர் தயவு ராஜாராம் அவர்களை தீபம் வாயார வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

பூமி தர்ம பூமியாக மாறட்டும்... மலரட்டும்...

ஆதரவற்ற நிலையில் இருந்த மாணவி உதவி பெற்றதும், மாணவியும் அவருடைய தாயாரும் கண்ணீர் விட்ட காட்சிகள் நன்றியின்  உச்சத்தை உணர்த்தியது. தீபத்தை தொடர்ந்து பிரகாசமாக வைத்திருக்கக் கூடிய அனைத்து நன்கொடையாளர்களுக்கு
இந்த நன்றி சமர்ப்பணம்.

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

Balakrishnan Sir Deeapm: நீங்களும் இதுபோல் ஓர் ஏழை மாணவன் அல்லது மாணவியின் கல்விக்கு உதவ விரும்புகிறீர்களா ?

தங்கள் நன்கொடைகளை வங்கிப் பரிமாற்றம் ஆகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம். 
ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும் 

Bank Transfer 

Let Dharma Spread from Door to Door.

For Donation thro Bank Transfer: SBI, IIT Madras, Current A/C No.30265475129, DEEPAM Trust, IFS:SBIN0001055;

by cheque i.f.o. DEEPAM TRUST Velachery

Regds.Office :
Deepam Trust
No.30 Droupathi Amman Koil Street, Velachery, Chennai 42.

After transfer, pl send your details such as address, email ID, purpose, date of AD etc.9444073635

இதுவரை தீபம் அறக்கட்டளை 881 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஏறக்குறைய அரை கோடி ரூபாய் கல்வி உதவியாக வழங்கியது மிகவும் பெருமைப்பட வைக்கிறது.
வாழ்வில் பேரானந்தத்தை உணர்த்துகிறது. இதோ இந்த கல்வியாண்டில் (2019 ஜூன் மாதத்தில்) நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி உதவி செய்து 1000 மாணவர்களுக்கு உதவி செய்த பெரும் பாக்கியத்தை தீபம் அறக்கட்டளை பெற இருக்கிறது. இந்த செய்தியை கண்ணுறும் அனைத்து தீபம் அறக்கட்டளையை சேர்ந்த நன்கொடையாளர்கள், 
நலம் விரும்பிகளும்,
தீபம் மாணவர்களும்,
தீபம் நிர்வாகிகளும், பங்குகொண்டு இறைவனுடைய அருள் பெற்று வாழ்வாங்கு வாழ தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவ மாணவிகளின் கல்வி உதவுக்கு அள்ளிக் கொடுக்கின்ற அருளாளர்களை இத்தருணத்தில் வணங்கி மகிழ்கிறோம்.

குறிப்பாக லட்சங்களாக அள்ளிக் கொடுக்கக் கூடிய கொடை வள்ளல்கள் IIT பேராசிரியர் M S சிவகுமார் அவர்களையும், தணிக்கையாளர் தயவாளர் ராமச்சந்திர ராவ் அவர்களையும் 
தீபம் இத்தருணத்தில் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து மகிழ்கிறது. 

வாழ்க வாழ்க  தர்மம் வாழ்க!!! 

நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை
-தீபம் ஓர் அரசு பதிவு பெற்ற 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட ஓர் அற தொண்டு நிறுவனம்

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...