Wednesday 22 May 2019

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பொருள் பெற்றான் வைப்புழி














தானம் , தருமம்

             தானம் என்பது,
ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து செய்வது தானமாகும்.
அதாவது தமது ஊழ் வினைகளைகளால் படும் அவத்தையைப் போக்குவதற்காக செய்யும் பரிகாரம் நிமித்தமோ !
அல்லது அடுத்தப் பிறவிக்கான புண்ணியத்தை சேர்த்திட வேண்டும் என்று புண்ணியபலனை எதிர்பார்த்தோ !
மற்றைய உயிர்களுக்கு செய்கின்ற செய்கை தானம் என்பதாகும்.
   
         தருமம் என்பது எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் கடவுளால் சிருட்டிக்கப்பட்ட எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் கண்டு அவ்வுயிர்களின் துன்பத்தை தனது துன்பமாகக்கண்டு, அவற்றின்மீது காருண்யம் கொண்டு, உயிர்இரக்க ஆன்மதயவோடு மற்றைய உயிர்களுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் இயற்கை கருணையோடு உபகாரம் செய்கின்றது தருமம் ஆகும்.
   
 நமது வள்ளல் பெருமானின் வருகைக்கு முன்பு இவ்வுலகம்  "அன்னதானம்" செய்கின்ற பல்வேறு சத்திரங்களையும் சாலைகளையும் கண்டிருந்தது .
       
ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு வருவிக்கவுற்ற நமது வள்ளல் பெருமான்  இவ்வுலக உயிர்களின் துயர்தவிர்க்க அவதரித்த மகாபுருஷர் என்பதால் முதன்முதலில் இவ்வுலகில் அற்றார் அழிபசிதீர்த்திட "அன்னதருமம்" செய்வதற்கு தருமசாலை அமைத்தார்கள்.

சென்னை வேளச்சேரி தீபம் அறக் கட்டளை சார்பாக நடைபெறும் 20 தரும சாலைகளில் தினமும் அருட் கஞ்சி அன்போடு பரிமாறப்படும் அற்புத காட்சி ...

கொடுப்பதும் இறைவன் ...
அதை குடிப்பதும் இறைவன்...

வாழ்க வாழ்க தர்மம் வாழ்க!!! வாழ்க வாழ்க தொண்டு வாழ்க!!!

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...