திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை யின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.சென்ற வருடம் 6 மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
வாரி வழங்கும் கல்விச் செம்மல்களாகிய தங்களின் பெருந்தயவோடு தீபம் அறக்கட்டளையின் சார்பில் இதுவரை கடந்த 9 ஆண்டுகளாக 881 - மாணவ, மாணவியர்களுக்கு ரூ.48,31,668/- (ஏறக்குறைய அரை கோடி) கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
8 ஆம் ஆண்டு:
கடந்த வருடங்களில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்:
9 ஆம் ஆண்டு:
8 ஆம் ஆண்டு:
இறையருள் சம்மதித்தால், இவ்வருடம் 119 மாணவர்களுக்கு உதவுகின்ற வாய்ப்பு கிடைத்தால், இவ்வருடமே ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கிய பெருமை தீபம் அறக்கட்டளைக்கும் தீபா அறக்கட்டளையை தாங்கி நிற்கும் தூண்கள் ஆகிய நன்கொடையாளர்களுக்கு பெருமை சேர்க்கும்.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்." - பாரதி
இந்த ஆண்டும் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகைக்காக தீபம் அறக்கட்டளையின் உதவியை நாடி படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற நூற்றுக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விரைவில்( ஜூன் முதல் வாரத்தில்) அவர்களிடம் தகுந்த கல்வி பேராசிரியர்களின் குழுக்கள் மூலமாக மாணவர்களுடன் பெற்றோர்களுடன் நேர்காணல் நடத்த உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவச் செல்வங்களுக்கு விரைவில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தீபம் அறக்கட்டளை வழங்கும் 10-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.
கல்வி உதவி வேண்டி வந்த ஓர் ஏழை மாணவியின் தாயின் கண்ணீர் கடிதம்
"எனது பெயர் தனலட்சுமி. எனக்கு ஒரே மகள் பத்மபிரியா. சென்னை Maduvankarai வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகை ரூபாய் 3000. என் மகள் அப்போலோ காலேஜில் BCA படித்து வருகிறாள். அவள் இரண்டாம் ஆண்டு படித்து, மூன்றாம் ஆண்டு படிப்பை தொடங்கியிருக்கிறார்.
எனது கணவர் S முத்துசாமி அவர்கள் வெல்டிங் வேலை வேலை செய்து எங்களை காப்பாற்றி வந்தார். அவரது உடல்நிலை 2016ஆம் ஆண்டு முதல் சரியில்லாமல் இருந்ததால் 2017 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.எனது கணவர் இறந்ததால் நாங்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்துள்ளோம். எனது கணவர் வேலையில் இருந்து வந்த ஒரே வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் பசி பட்டினியை இல்லாமல் இருந்தது.
தற்சமயம் நான் வீட்டு வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறேன். எனக்கு எந்த சொந்தமும் பந்தமும் உதவவில்லை. உதவுகின்ற நிலையிலும் இல்லை. நாங்கள் சொல்ல முடியாத வேதனையுடன் இருந்து வருகிறோம். நான் வீட்டு வேலை பார்த்து எனக்கு வரும் வருவாய் எங்களது சாப்பாட்டுக்கும் வாடகைக்கும் கூட போதவில்லை. வீட்டில் வயதான மாமியார். கஷ்டமான சூழ்நிலையில் குடும்பம் உள்ளது.
எனது மகளை BCA இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்து விட்டு, இன்னும் ஓராண்டு பீஸ் கட்ட வேண்டி உள்ளது. உடனே கட்டவில்லையென்றால் படிப்பை நிறுத்திக் கொள்ள சொல்கிறார்கள். எனது மகள் டிகிரி படிக்க, முடிக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறாள்."
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவி கேட்டு விண்ணப்பங்கள், கடிதங்கள். தாயை இழந்த, தந்தை இழந்த அல்லது தாய் தந்தை இல்லாத, பார்வை இல்லாத, ஆதரவில்லாத மாணவ மாணவிகள் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கு உதவி கரம் நீட்டினால் அனைத்து ஏழை மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவி கிடைக்கும். படித்து சமுதாயம் நலம் பெற பயனடைவார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் நன்கொடையாளர்களுக்கு இறை இன்ப நிறை வாழ்வு கிட்டும்.
நேர்காணலில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை கல்லூரியின் பெயரில் காசோலையாக மட்டுமே அளிக்கப்படும் என்பதை நன்கொடையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
ஒவ்வொரு வருடமும் ஏழை மாணவ மாணவிகளின் இலவச கல்வி உதவிக்கு பெருமளவில் நிதி தந்து, சமுதாயத்தின் ஒரு பகுதி ஏழை மாணவ மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றும்... ஏற்றுக் கொண்டிருக்கின்...ஒளி ஏற்ற போகின்ற... மனித தெய்வங்கள் ஐஐடி பேராசிரியர் M S சிவகுமார் அவர்களையும், தணிக்கையாளர் திரு ராமச்சந்திர ராவ் அவர்களையும், தீபம் நன்றியோடு நினைவு கூறுகிறது.
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு.
ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்:
Donations by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of 'DEEPAM TRUST' with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donation by Bank Transfer:
Account Name: Deepam Trust
Account No : 30265475129
Bank :State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055
வங்கிப் பரிமாற்றம் செய்தபின் நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை 9444073635 என்ற எண்ணிற்கு SMS அல்லது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப வேண்டுகிறோம்.
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற அற தொண்டு நிறுவனம்
(சமுதாயப் பணியில் 22 ஆண்டுகளாக...)
மேலும் தீபம் அறக்கட்டளையின் மற்ற சமுதாயப்பணிகளை அறிய விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க் ஐ பயன்படுத்தவும்: http://deepamtrust.org/social-activities/
சார் நான் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ஊரில் வசிக்கிறேன் எனது பெயர் சாந்தாகௌரி நான் ஒரு மாற்றுத்திறனாளி சார் எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் எனது கனவர் ஒரு கூலி தொழிலாளி மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளோம் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்யுங்கள் சார்
ReplyDelete9952920804
ReplyDeleteRespected sir please help me my son education fees please help me sir
ReplyDeleteSir my son +2 marks 92 percentage any help for medical
ReplyDeleteSir, கணவனால் கைவிடப்பட்டு, 2 குழந்தைகளுடன் தவிக்கும் எனது அக்கா குழந்தைகளுக்கு கல்வி (School)உதவித்ெதாகை கிடைக்க உதவி கிடைக்குமா?
ReplyDeleteவணக்கம் ஐயா.
ReplyDeleteஎனது மகள் ஞானப்பூங்கோதை 11ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் ரூ.32,000 த்தில் ரூ.10,000 செலுத்தி விட்டேன். மீதமுள்ள தொகையை செலுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். தங்களது உதவி எங்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கும்.தங்களது பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம்.
நன்றி
வணக்கம்
S.சரவணன்
7010562325
Respected Sir/Mam, I have completed my 12th in the year 20202 , and since I have due in my school fees they are holding my marksheets , and I am unable to pay my clg fees , my father is an auto driver after COVID we are suffering a lot financially pls help me to continue my education .
ReplyDeleteI'm AAKASH MARSHAL ARAVIND RAJ S
SCHOOL- EVERWIN.MAT.HR.SEC.SCHOOL KOLATHUR, CHENNAI 600099
COLLEGE- AGURCHAND MANMULL JAIN COLLEGE MEENAMBAKKAM
CONTACT NUMBER-9150405494