Friday 11 December 2020

11.12.2020 - தீபத்தின் கல்வி உதவி 1051வது மாணவி

 தீபத்தின் கல்வி உதவி பெறும் 1051வது மாணவி-Ms M தீபிகா

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு அறப்பணிகளில் ஒன்றான ஏழை மாணவ மாணவிகளின் உயர்கல்விக்கு (டிப்ளமோ, டிகிரி, என்ஜினீயரிங், மருத்துவம் பயிலும் 100 மாணவர்களுக்கு) வருடந்தோறும் கல்வி உதவி வழங்கி வருகிறது.
இன்று சென்னை மணலி சேர்ந்த மாணவி செல்வி M தீபிகா அவர்களுக்கு காயிதே மில்லத் கல்லூரியில் BSc கல்லூரி கட்டணமாக ரூபாய் 5,510 கல்லூரி பெயரில் காசோலையாக செலுத்தி இருக்கிறது. மாணவி தீபிகா, தந்தையை இழந்தவர். *தாயார் பார்வையற்றவர். ரயிலில் வியாபாரம் செய்து அதன்மூலம் வாழ்க்கை நடத்துபவர்.* செல்வி தீபிகா அவர்களின் ஆன்லைன் நேர்காணல் மனதை நெகிழ வைத்தது.


ஏழை மாணவ மாணவிகளின் உயர்கல்விக்கு தொடர்ந்து பேராதரவு தந்து, நன்கொடைகளை வாரி வழங்கும் தீபம் நன்கொடையாளர்களுக்கு கோடான கோடி நன்றி.
இதுவரை தீபம் அறக்கட்டளை, ஏழை மாணவ மாணவிகளின் உயர் பயில *கல்வி உதவியாக ₹57,20,326/-* வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறோம்.
கொரோனா காலத்தில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 110 பார்வையற்ற குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 1,000 வீதம் ₹1,10,000/- நிவாரண உதவியை அவரவர் வங்கிக் கணக்கில் வங்கி பரிமாற்றமாக வழங்கப்பட்டது என்பதை தெரிவித்து மகிழ்கிறோம்.
தயவுடன் ...
என்றென்றும் சன்மார்க்க திருப்பணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635
Registered Office:
Deepam Trust
No.30, Droupathi Amman Koil Street
Next to Mosque
Velachery, Chennai 42
044-22442515 / 9444073635
Nithya Deepa Dharumachalai
No.7/8, Putherikarai Street
(Near Dandeeswaram Temple)
Gandhi Road stopping
Velachery, Chennai 42
Mobile: 9444073635
Landline No.: 04443358232

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...