🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺
📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை
📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் கேள்வி ஞானப் போட்டி!
🌟 வள்ளலார் பெருமானின் வாழ்க்கை வரலாறு, அருள் நெறி, ஜீவகாருண்யம் மற்றும் அவருடைய உயர்ந்த கொள்கைகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பு!
📍 போட்டி நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை,
வேளச்சேரி, சென்னை.
📅 தேதி: 30.08.2026 – ஞாயிற்றுக்கிழமை
📚 A Group
1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை
⏰ காலை 10.00 மணி
📚 B Group
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை
⏰ காலை 11.00 மணி
📝 போட்டியில் வள்ளலார் வரலாறு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
🏆 சிறப்பு பரிசு:
சரியான பதில்களை அளித்து சிறப்பாக பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு மிக உயர்ந்த சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
🎖️ பங்கேற்கும் அனைவருக்கும்:
🏅 பதக்கம்
📜 சான்றிதழ்
🎁 சிறு பரிசு
🌱 வள்ளலாரை அறிந்து கொள்வோம்…
💛 அருளையும் அன்பையும் வளர்ப்போம்…
🙏 ஜீவகாருண்ய நெறியில் பயணிப்போம்…
📝 பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட Google Form-ஐ பூர்த்தி செய்து Submit செய்யவும்:
📞 தொடர்புக்கு: 99947 23635
🌺 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளையும் அன்புடன் அழைக்கிறோம்! 🌺
🙏 தீபம் அறக்கட்டளை
94440 73635
மாதிரி கேள்விகள்:
A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை
1. வள்ளலார் பிறந்த ஊர் எது?
2. வள்ளலார் பிறந்த தேதி எது?
3. வள்ளலாரின் இயற்பெயர் என்ன?
4. வள்ளலாரின் தந்தையின் பெயர் என்ன?
5. வள்ளலாரின் தாயாரின் பெயர் என்ன?
6. வள்ளலார் சிறுவயதில் எங்கு வளர்ந்தார்?
7. வள்ளலார் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்று கூறினாரா?
8. திருவருட்பாவை இயற்றியவர் யார்?
9. வள்ளலார் எந்த உயிரினத்தையும் புண்படுத்தக் கூடாது என்று கூறினாரா?
10. எல்லா உயிர்களையும் நாம் எப்படி பார்க்க வேண்டும்?
11. சென்னையில் வள்ளலார் வழிபட்ட சிவத்தலங்கள் எவை?
12. வள்ளலார் வழிபட்ட முருகன் கோவில் எது?
13. வள்ளலார் வழிபட்ட அம்மன் கோவில் எது?
14. வள்ளலார் கொடியின் நிறம் என்ன?
15. வள்ளலார் அணிந்த ஆடையின் நிறம் என்ன?
16. வள்ளலார் தண்ணீர் இல்லாதபோது உருவாக்கிய ஓடையின் பெயர் என்ன?
17. வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய இடம் எது?
18. அகவல் பாராயணத்தை இயற்றியவர் யார்? அது எத்தனை வரிகளைக் கொண்டது?
19. தீபம் அறக்கட்டளையின் நிறுவனர் பெயர் என்ன?
20. தீபம் அறக்கட்டளை எத்தனையாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது?
21. தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
22. தீபம் அறக்கட்டளை சென்னையில் எங்கு உள்ளது?
23. வள்ளல் பெருமான் எதைச் செய்யக் கூடாது என்று கூறினார்?
24. வள்ளலார் மந்திரத்தைச் சொல்லத் தெரியுமா?
25. வள்ளல் பெருமானுக்கு உணவு ஊட்டிய தெய்வத்தின் பெயர் என்ன?
26. வள்ளலாரின் காலில் சுற்றிய பாம்பு கடிக்காமல் சென்ற இடம் எது?
27. வள்ளலாரின் குடும்பம் சென்னையில் எங்கு தங்கியிருந்தது?
28. வள்ளலாருக்கு முருகன் காட்சி கொடுத்த கோவில் எது?
29. வள்ளலாருக்கு எந்த தெய்வம் காட்சி கொடுத்தது?
30. வள்ளலாரை இறைவன் எந்த வயதில் ஆட்கொண்டார்?
Group B:
1. வள்ளலாரின் மூத்த சகோதரரின் பெயர் என்ன?
2. வள்ளலாருக்கு ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
3. வள்ளலார் சிறுவயதில் எந்த இறை வடிவத்தை வழிபட்டார்?
4. வள்ளலாருக்கு சிறுவயதிலேயே எதில் ஈடுபாடு அதிகம்?
5. வள்ளலார் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் என்ன?
6. வள்ளலாரின் பாடல்கள் தொகுக்கப்பட்ட நூல் எது?
7. வள்ளலார் எந்த உண்மையை மக்களுக்கு வலியுறுத்தினார்?
8. வள்ளலார் இறைவனை எந்த பெயரில் அழைத்தார்?
9. அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தின் பொருள் என்ன?
10. வள்ளலாரின் முக்கிய ஆன்மீகக் கொள்கை என்ன?
11. சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படை என்ன?
12. ஜீவகாருண்யம் என்றால் என்ன?
13. வள்ளலார் எதைத் தவிர்க்க வேண்டும் என்றார்?
14. முக்தி அடைவதற்கு முக்கிய வழி என்ன?
15. வள்ளலார் வலியுறுத்திய மனிதநேயம் என்ன?
16. வள்ளலார் இறைவனை எப்படி காண வேண்டும் என்றார்?
17. வள்ளலாரின் ஆன்மீகப் பாதையின் பெயர் என்ன?
18. சன்மார்க்கம் என்றால் என்ன?
19. வள்ளலார் நிறுவிய முக்கிய தர்ம நிறுவனம் எது?
20. சத்திய தருமச்சாலை எங்கு அமைந்துள்ளது?
21. சத்திய தருமச்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு எது?
22. சத்திய தருமச்சாலையின் முக்கிய நோக்கம் என்ன?
23. வள்ளலார் பசியை எப்படி கருதினார்?
24. வள்ளலார் செய்த முக்கியமான சமூகப் பணி என்ன?
25. வள்ளலார் நிறுவிய ஞான நிலையம் எது?
26. சத்திய ஞானசபை எங்கு அமைந்துள்ளது?
27. சத்திய ஞானசபை திறக்கப்பட்ட நாள் எது?
28. சத்திய ஞானசபையில் எதை தரிசிக்கலாம்?
29. சத்திய ஞானசபையில் எத்தனை திரைகள் உள்ளன? அவை எதைக் குறிக்கின்றன?
30. சத்திய ஞானசபையில் உள்ள ஜோதி எதைக் குறிக்கிறது?
31. வள்ளலாரின் முக்கிய நூல் எது?
32. வள்ளலாரின் உரைநடைப் பகுதியில் முக்கியமானது எது?
33. ஜீவகாருண்ய ஒழுக்கம் எதை வலியுறுத்துகிறது?
34. அருட்பெருஞ்ஜோதி அகவல் எதைப் போற்றுகிறது?
35. வள்ளலார் பாடல்களில் அடிக்கடி வலியுறுத்தும் பண்பு எது?
36. வள்ளலார் போதனைகளில் முக்கியமான ஒழுக்கம் எது?
37. ஆன்மநேய ஒருமைப்பாடு என்றால் என்ன?
38. வள்ளலார் மக்களிடையே எதிர்பார்த்த முக்கிய பண்பு என்ன?
39. வள்ளலார் கூறிய தனிப்பெருங்கருணையின் பொருள் என்ன?
40. வள்ளலார் தனது இறுதிக் காலத்தில் எங்கு தங்கினார்?
41. சித்திவளாகம் எங்கு அமைந்துள்ளது?
42. வள்ளலார் இறுதியாக வலியுறுத்திய ஆன்மீக நிலை என்ன?
43. வள்ளலார் அடைந்ததாகக் கூறப்படும் உயர்ந்த நிலை என்ன?
44. வள்ளலார் உலகிற்கு வழங்கிய மிகப்பெரிய செய்தி என்ன?
45. வள்ளலார் கூறிய “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்” என்பது எதைக் குறிக்கிறது?
46. வள்ளலார் வாழ்க்கையின் முக்கிய லட்சியம் என்ன?
47. வள்ளலார் காட்டிய உண்மையான வழிபாடு என்ன?
48. வள்ளலார் வழியில் உயர்ந்த தர்மம் எது?
49. வள்ளலார் வழியில் வாழ விரும்புபவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்?
50. வள்ளலார் மறைந்த இடம் எது?
51. வள்ளலார் சித்தி பெற்ற ஆண்டு எது?
52. வள்ளலார் சித்தி பெற்ற இடம் எது?
53. வள்ளலார் உலகிற்கு வழங்கிய உயர்ந்த கொள்கை எது?
54. வள்ளலாரின் முழுமையான ஆன்மீகச் செய்தி என்ன?
55. உண்மையான பக்தியின் அடையாளம் என்ன?
56. இறையருள் வளர்க்க வேண்டிய குணம் எது?
57. பக்தி என்பது வெறும் வழிபாடா அல்லது வாழ்வுமுறையா?
58. திருவருட்பா எத்தனை திருமுறைகளைக் கொண்டது?
59. வள்ளலார் சென்னையில் இருந்தபோது வீட்டில் நிகழ்ந்த அற்புதங்கள் என்ன?
60. சென்னை கந்தகோட்டத்து முருகன் மீது வள்ளலார் பாடியது யாது?
No comments:
Post a Comment