சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்ம சாலையில் வழக்கமாக தினசரி நண்பகல் 12:00 மணிக்கு பசியாற்றுவித்தல் நடைபெறும். ஆனால் பசியின் காரணமாக வயதானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து காலை 11:00 மணிக்கே தர்ம சாலைக்கு வந்துவிடுகிறார்கள். சொந்த பந்தங்கள் யாருமற்ற தனிமையின் துயரம், முதுமையின் இயலாமை என கசப்பான வாழ்க்கையுடன் நாட்களை கழிக்கும் ஏழ்மையில் வாழும் முதியவர்களின் இயலாதவர்களின் வறுமையில் வாழ்பவர்கள் தர்ம சாலைக்கு பசியோடு வரும் பலரது கதையும் சோகத்தின் உச்சமாகும்.
தர்ம சாலையில் ஒருவேளை பசியாறியவர்கள் இரவு சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்?
"இரண்டு வேளையும் பட்டினி கிடப்போம்."
"நித்ய தீப தர்மசாலை வழங்கும் மதிய உணவு சாப்பிடும்போதே கூடுதலாக சாப்பிடுவோம்."
"தீபத்தல குடுக்குற வள்ளலார் சாப்பாடுதான் எங்கள பல மாசமா வாழ வச்சிட்டு இருக்கு. நாங்க இங்க கொடுக்கிற அருள் உணவுக்காக ரெண்டு கிலோமீட்டர் நடந்தே வரோம்"
"நீங்க கொடுக்கிற சாப்பாடு சுவையாகவும் சுகாதாரமும் சூடாவும் ரொம்ப நல்லா இருக்கு. தினசரி ஒரு பொறியல் அல்லது கூட்டு கொடுக்குறீங்க. வயிறு நிறையுது."
என்ற வெவ்வேறு பதில்கள் கிடைத்தது.
இதன் பிறகே அற்றார் அழிபசி தீர்த்தல் - இரவு உணவு வழங்கும் திட்டம் கொரோனா ஊரடங்கு காலத்தில் உதயமானது.
"இரவு உணவு" பார்சலில் கொடுக்கிறோம். கடந்த 9 மாத காலமாக இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. தர்ம சாலையில் ஏறக்குறைய 'மாதம் 3 டன்' அரிசி வீதம் இதுவரை எட்டு மாதங்களில் 24 டன் அரிசி மூலம் உணவாக சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மசாலையில் மக்களின் பசியை போக்கி இருக்கிறது. தற்போது தர்ம சாலையை தேடி வருபவர்களின் இரவு பசிப்பிணியும் போக்கப்படுகிறது.
மேலும் டாட்டா ஏஸ் நடமாடும் தர்மசாலை வாகனம் மூலம் ரோட்டோரம், பாலங்களுக்கு அடியில், பஸ் நிறுத்தங்களில், சுரங்கப் பாதைகளில், மரநிழலில், ஆதரவற்று வாழும் மக்களுக்கு, வறியவர்களுக்கு, உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்படுகிறது.
ஓரிரு காட்சிகளை மட்டும் தங்கள் தெய்வீக பார்வைக்கு இணைத்துள்ளோம்.
ஏழைகளின் பசித்துயரத்தைப் போக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அவரை தொழும் அடியார்களையும் வேண்டி விண்ணப்பிக்கிறோம்.
நித்திய தீப தருமச்சாலையில் நாள் முழுவதும் மக்களின் பசி போக்க அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது.
மக்களின் பசி போக்க தர்ம சாலைக்கு அருள்நிதியாகவும், அரிசி, மளிகை பொருட்களாகவும் வழங்க விரும்பும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பர்கள் தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.
1000 ரூபாய் நன்கொடையில் 100 பேர் பசி ஆறுகிறார்கள்.
5000 ரூபாய் நன்கொடையில் 500 பேர் பசி ஆறுகிறார்கள்.
10,000 ரூபாய் நன்கொடையில் 1000 பேர் பசி ஆறுகிறார்கள்.
நன்கொடையளிக்க: http://deepamtrust.org/donate-now/
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
தயவுடன்
என்றென்றும் சன்மார்க்க சமுதாயப் பணியில் ...
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Nithya Deepa Dharumachalai
No.7/8, Putherikarai Street
(Near Dandeeswaram Temple)
Gandhi Road stopping
Velachery, Chennai 42
Mobile: 9444073635
Landline No.: 04443358232
www.deepamtrust.org
No comments:
Post a Comment