Wednesday, 2 December 2020

02.12.2020 - ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்து இன்று தீபம் அறக்கட்டளை கல்வி உதவி வழங்கி இருக்கிறது.

1046) Radhika M,
B.Sc., III (Nursing)
Jeeva College of Nursing Krinagiri
15000/-
வேலூர் அணைக்கட்டை சார்ந்த தந்தையை இழந்த மாணவி செல்வி M ராதிகா அவர்கள் கிரி நகரி ஜீவா காலேஜ் ஆஃப் நர்சிங் BSc மூன்றாம் ஆண்டு நர்சிங் பயில்கிறார். தந்தையை இழந்த ஏழை மாணவி செல்வி ராதிகா அவர்களுக்கு கல்வி உதவியாக ரூபாய் 15,000 கல்லூரியின் பெயரில் வங்கி பரிமாற்றம் செய்யப்பட்டது.
1047) Logeshwari R
B.Com., II (Gen)
Shrimathi Devkunvar Nanalal Bhatt Vaishnav College for Women
6000/-
சென்னை பரங்கிமலை சார்ந்த ஏழை மாணவி செல்வி R லோகேஸ்வரி அவர்கள் ஸ்ரீமதி தேவர் நானாலால் வைஷ்ணவா காலேஜில் B Com இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அவருக்கு தீபம் ₹ 6000 கல்லூரி பெயரில் கல்வி உதவியை காசோலையாக வழங்கி இருக்கிறது.
1048) Sangeetha T
BSc., II (Microbiology)
Mohamed Sathak College of Arts & Science
5000/-
சென்னை கிழக்கு தாம்பரத்தில் கூலி வேலை செய்து தன் மகளை மோகமத் சதக் காலேஜ் BSc Microbiology இரண்டாம் ஆண்டு படிக்க வைக்கும் மாணவி T சங்கீதா அவர்களுக்கு தீபம் கல்வி உதவி ₹ 5000 வழங்கியிருக்கிறது.
1049) Nanthakumar P
B.E., Bio Medical Engineering
Kirupananda Variyar Engineering college
10000/-
நாமக்கல் கல்யாணி காலனியில் வாழும் திரு நந்தகுமார் மிக ஏழ்மை நிலையில் குடிசையில் வாழ்கிறார். அவர் கிருபானந்த வாரியார் இன்ஜினியரிங் காலேஜில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறார்.
ஏழை மாணவன் நந்தகுமார் அவர்களுக்கு தீபம் அறக்கட்டளை ரூபாய் 10,000 கல்வி உதவியாக கல்லூரியின் பெயருக்கு இன்று வங்கி பரிமாற்றம் செய்து இருக்கிறது.
1050) Velmurugan R
Diploma in EEE
Sir Issac Newton Polytechnic College
6000/-
நாகப்பட்டினம் மஞ்சக்கொல்லை பகுதியில் மிக மிக ஏழ்மை நிலையில் வாழும் மாணவர் திரு R வேல்முருகன் அவர்கள் சர் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் காலேஜ் டிப்ளமோ EEE பயில்கிறார்.
மாணவன் வேல்முருகன் அவர்களுக்கு தீபம் அறக்கட்டளை ரூபாய் 6000 காசோலையை கல்வி உதவியாக கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறது என்பதை மகிழ்வோடு பதிவு செய்கிறோம்.
ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு வாரி வழங்கிய/வழங்கும்/வழங்க இருக்கும் வள்ளல்களை வணங்குகிறோம்.



இதுவரை கல்வி உதவியாக தீபம் அறக்கட்டளை பொருளாதாரத்தில் பின் தங்கிய *1050 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு Rs.57,14,716/- கல்வி உதவி வழங்கி இருக்கிறது* என்பதை தீபம் நன்கொடையாளர்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நெகிழ்ச்சி அடைகிறோம்.
தயவுடன் ...
*தீபம் அறக் கட்டளை*
9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...