Sunday, 12 July 2020

12.07.2020 - தினசரி 100 குழந்தைகளுக்கு மதிய உணவு

தீபம் அறக்கட்டளையின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் உள்ள 3 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை மதிய உணவு தினசரி கொடுப்பது தாங்கள் அறிந்ததே.


நேற்று (11.7.20) தீபம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் அவர் துணைவியார் நேரடியாக மெய்யூர் கிராமத்துக்குச் சென்றோம். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் இனிப்புகள் நேரடியாக வழங்கப்பட்டது.

குழந்தைகளின் தினசரி உணவு தேவைகளுக்கான 

▪️ஒற்றை கேஸ் அடுப்பு 
▪️உணவு தயாரிக்க புதிய பாத்திரம் (மூடியுடன்)
▪️மூன்று சிப்பங்கள் அரிசி 
▪️காய்கறிகள் 
▪️இனிப்புகள் 
▪️சாக்லெட்கள்
(உபயம் திரு குமரேஷ் அவர்கள்)
▪️சேமியா பாக்கெட்டுகள் 
(உபயம் திரு சுப்பையா அவர்கள்) 
நேரடியாக வழங்கப்பட்டது என்பதை தீபம் அறக்கட்டளை குழுவிலுள்ள தீபம் நிர்வாகிகளுக்கும் தீபம் தொண்டர்களுக்கும்  தெரிவித்து மகிழ்கிறோம்.
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
Food to 100 Children daily.
Proj. Cost: ₹ 1,000/- per day.
Sponsors are Welcome
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தர்மம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம்!
🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️
தயவுடன் ...
நிறுவனர் 
*தீபம் அறக்கட்டளை*

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...