Saturday, 18 July 2020

18.07.2020 - ஏழ்மையில் வாடும் 100 குடும்பங்களுக்கு அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது

தீபம் அறக்கட்டளையின் இன்றைய சமுதாயப் பணி:

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமம் காட்டுப்பகுதிகளில் மிக மிக ஏழ்மையில் வாடும் 100 குடும்பங்களுக்கு முதல்தர 10 கிலோ அரிசி  சிப்பங்களுடன், 12 வகையான மளிகைப் பொருட்கள் இன்று நேரில் சென்று உணவுடன் வழங்கப்பட்டது. 

100 குடும்பங்களும் குடிசையில் 

. நிறைய குடிசைகளில் சுற்றிலும் சுவரே இல்லை.
பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை.
தற்போது வேலை இல்லை. வருமானம் இல்லை.
பசியால் வாடுவதை நேரில் கண்டு மிகவும் வருந்தினோம்.




மிக மிக ஏழ்மை நிலையில் உணவுக்கே வழி இல்லாமல் வேலை இல்லாத மக்கள்  உணவாக இறந்துபோன ஈசலை உட்கொண்டு வாழ்வதைக் கண்டு மனம் மிக மிக வேதனை அடைந்தது. 

தங்களைப் போன்ற ஒருசில நல் உள்ளங்களின் பேராதரவினால் பெருங்கருணையினால் இன்று 100 ஏழை இந்திய குடும்பங்களுக்கு அரிசியும் மளிகைப் பொருட்களும் மற்றும் ஏறக்குறைய ஏழ்மை நிலையில் வாடும் 500 இந்தியர்களுக்கு உணவு வழங்கப்பட்டதை நன்கொடையாளர்களுக்கு தெரிவித்து மகிழ்கிறோம்.

இப்படி ஒரு ஏழ்மை நிலையிலுள்ள பசியோடு வாழக்கூடிய மக்களை அடியேன் இதுவரை கண்டதில்லை.

இன்று நாள் முழுவதும் அற்புதமான மனதை நெகிழ வைத்த சமுதாயப் பணிக்கு நல் ஆதரவு தந்த நல் உள்ளங்களை மனதார போற்றி வாழ்த்தி மகிழ்கிறோம். காலை முதல் மாலை வரை தொண்டு செய்த தீபம் சேவதாரிகளை தீபம் வாழ்த்துகிறது. 

தொடரட்டும் தங்கள் தொடர் தர்மம். வளரட்டும் இச்சமுதாயம்.

மீண்டும் மக்களின் பசி போக்கும் தொடர் அன்னதான பணிகளுக்கிடையே வரும் சனிக்கிழமை அன்று 25.7.20 காலை 8 மணி அளவில், சென்னை வேளச்சேரி கல் குட்டை பகுதியிலுள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு முதல்தர 10 கிலோ  மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்களும் நேரில் சென்று வழங்க இருக்கிறோம் என்பதை  தெரிவித்துக்கொள்கிறோம்.

தயவுடன் ...
என்றென்றும் சமுதாயப் பணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...