Sunday, 10 May 2020

ஊரடங்கு: தேடிச்சென்று அன்னம் அளித்தல்

அன்பார்ந்த தீபங்களுக்கு,

இன்று போல் நாளையும்...

நாளை மகாராஷ்டிரா மாநில தொழிலாளர்களுக்கு பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் முகாம்களில் தங்கியுள்ள 600க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தீபம் வழங்க இருக்கிறது. மேலும் தர்ம சாலையிலும் தேடிச்சென்று அன்னம் தருவதற்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை தயார் செய்ய வேண்டும். 150 கிலோ அரிசியில் தக்காளி சாதம் மற்றும் பட்டாணி உருளைக்கிழங்கு பொரியல் நான்கு வட்டுகளில் தயார் செய்ய வேண்டும்.










வேளச்சேரி பகுதியில் உள்ள சேவகர்கள் காலையில் காய் வெட்டுவதற்கும் உணவு தயாரிக்கவும் உணவு பொட்டலங்கள் தயாரிக்கவும் உணவைக் கொண்டு சென்று கொடுக்கவும் விருப்பமுள்ள நல் உள்ளங்கள் வரலாம்.

சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்து பணிபுரிய வேண்டும்.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...