Friday, 1 May 2020

தருமச்சாலை தொண்டர்களுக்கு ஓர் அறிவிப்பு

சென்னையில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றுநோய்

தற்போது தீபம் அறக்கட்டளை செய்து கொண்டிருக்கும் தினசரி உணவு கொடுக்கும் திருப்பணி ஒரு தெய்வீக பணி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

இருப்பினும் நித்ய தீப தருமச்சாலையில் தங்கி இருப்பவர்களும், தர்ம சாலைக்கு தினசரி தொண்டு செய்ய வரக்கூடிய தொண்டர்களும், தேடிச் சென்று உணவு கொடுக்க கூடிய அன்பர்களும்,
முழு பாதுகாப்புடனும், கவனத்துடனும், விழிப்புணர்வுடனும், அரசு ஆணையை மதித்து முகக் கவசங்கள் அணிந்து தொண்டு செய்யுமாறு தீபம் நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. 

உணவு கொடுக்கும் பொழுது சமூக இடைவெளி மிக மிக மிக அவசியம். அதை தீபம் தொண்டர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குறைந்தது மணிக்கு ஒருமுறை கைகளை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

நம் தனிப்பட்ட பாதுகாப்பு, நம்மை சார்ந்தவர்களின் பாதுகாப்பு, நம் பகுதியின் பாதுகாப்பு, நம் சமுதாய பாதுகாப்பு குறித்து, நாம் முழு கவனம் செலுத்த வேண்டும்.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...