Sunday, 24 May 2020

150 ரோட்டோர ஆதரவற்றவர்களுக்கு சிறப்பு அன்னமும், புத்தாடைகளும்

24.5.2020 இன்று ஞாயிற்றுக்கிழமை தீபம் அறக்கட்டளையின் சார்பாக வேளச்சேரி, செக்போஸ்ட், கிண்டி, சைதாப்பேட்டை,  தியாகராஜ நகர்,  நந்தனம்,  கோட்டூர்புரம், பகுதிகளில் ரோட்டோரங்களில் வாழும் ஆதரவற்ற 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அன்னமும் புதிய ஆடைகளும் (புடவைகள், வேஷ்டிகள், லுங்கிகள், டவல்கள், சட்டைகள், சோப்புகள், டூத் பிரஷ், டூத் பேஸ்ட், முகக் கவசங்கள் போன்றவை)  நேரடியாக வழங்கப்பட்டது. 

இந்த அற்புதமான சமுதாயப் பணியில் நாள் முழுவதும்  அயராது தொண்டு செய்த 20க்கும் மேற்பட்ட தீபம் அறக்கட்டளையின் சேவடிகளின் சேவையை தீபம் பாராட்டி மகிழ்கிறது.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை உணர்த்து இந்த அற்புதமான ஜீவகாருண்ய பணிகளுக்கு அருள்நிதியை வாரி வழங்கிய தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களை தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.

இன்று நடைபெற்ற சமுதாயப் பணியில் ஓரிரு காட்சிகளை கண்டு மகிழுங்கள். தங்களின் பயனுள்ள கருத்துக்களை ஆலோசனைகளை எண்ணங்களை தீபம் வரவேற்று மகிழ்கிறது.




அடுத்த வாரம் (29.5.20) 
100 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 1000 வீதம் நிதி உதவி  வழங்குதல்...

தயவுடன் ...
என்றென்றும் சமுதாய சன்மார்க்க பணியில்...
தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை
9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...