சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் 100 ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
இதுவரை கடந்த பத்தாண்டுகளில் 1107 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹60,95,165/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 12 ஆண்டுகளில் ₹60 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.
மேலும் வரும் 2022-23 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏழ்மை தகுதியின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்கு பிறகு "தீபம் கல்வி உதவி குழு" பரிந்துரை செய்த மாணவ மாணவிகளுக்கு, கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பயிலும் கல்லூரிக்கு நேரடியாக காசோலையாகவோ அல்லது வங்கி பரிமாற்றமாகவோ செலுத்தப்படும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும். தீபம் அறக்கட்டளையின் கல்வி உதவி குழுவின் முடிவே இறுதியானது.
கல்வி உதவி குழு பரிந்துரை செய்யும் மாணவர்களுக்கு அதிகப்படியாக, ரூபாய் 10,000 வரை உதவித் தொகை வழங்கப்படும். நிதி நிலையை பொருத்து கல்வி உதவி அதிகரிக்கக்கூடும்.
தீபத்தின் வெள்ளி விழா ஆண்டு, இந்த வருடம் தமிழகத்தின் ஏதாவது ஒரு கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் கல்லூரி படிப்பு படிக்க வரும் மாணவர்களுக்கு இலவச தங்கும் அறை மற்றும் உணவு வழங்கி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்த தீபம் தயாராக உள்ளது. நல்வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளலாம்.
விண்ணப்பிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்:
பதிவு செய்ய கடைசி நாள்:
முதல் வருட மாணவ மாணவியர்களுக்கு - 31.07.2022
இரண்டு - நான்காம் வருட மாணவ மாணவியர்களுக்கு - 15.07.2022
குறிப்பு:
1) பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
2) தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3) முதல் தலைமுறை பட்டதாரி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், அரசு கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு, கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு, முன்னுரிமை தரப்படும்.
No comments:
Post a Comment