சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளையும்,முதியோர்களையும் மகிழ்விக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வழங்கி மகிழ்விப்பது வழக்கம்.
Celebrate Diwali with poor
ஆதரவற்ற இவர்களோடு இணைந்து தீபாவளி திருநாளை கொண்டாடுவதில் தீபம் உண்மையான மகழ்ச்சி அடைகிறது. திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்களித்த மரணமில்லா பெருவாழ்வை அடைவதற்கு முதல்படியான ஜீவகாருண்யம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் ஒன்றையே தன் தாரக மந்திரமாக கொண்டு ஆன்மநேய அறப்பணிகளை செய்துவருவதில் எல்லையில்லா பேரானந்தம் கொள்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு 14-10-2017 சனிக்கிழமை இரவு 9-00 மணிமுதல் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5-00 மணிவரை நித்ய தீப தருமச்சாலையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆடுகின்ற சேவடிகளால் பல்லாயிரக்கணக்கான லட்டுகளும் ஆயிரக்கணக்கான காரா பூந்தி பாக்கெட்களும் தயார் செய்யப்பட்ட காட்சிகள்.
15-10-2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2-00 மணிமுதல் இரவு 8-00 மணிவரை சென்னையை சுற்றியுள்ள பல்வேறு ஆதரவற்ற காப்பகங்களுக்கு சென்று வழங்கியுள்ளது.
கிடைப்பதற்கரிய இந்த அரும்பெருந்தொண்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வள்ளல்பெருமானின் வாக்காகிய ஆடுகின்ற சேவடிகளுக்கு ஆளானேன்...ஆளாக மாக்கையெல்லாம் பெற்றேன் என்ற பொன்னான வரிகளுக்கு ஏற்ப உடலாலும், உள்ளத்தாலும் உழைப்பை நல்கிய ஆடுகின்றசேவடிகளின் பாதம் பணிந்து வேண்டி வள்ளல்பெருமான் நமக்கு காட்டிய அறநெறிப்படி வாழ்ந்து இன்பமுற இறைவனை வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.
9444073635
|
Helpful Links
|
Really heart fully happy
ReplyDeleteNextyear we will aviod sugar uusage ngive. A sweet like name i have forgotten. Using rice jaggery elachifried in oil can be given as sugar is white poison