Saturday, 24 October 2020

24.10.20: நாள் முழுவதும் மெய்யூர் கிராம சேவை

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம். அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்.

தருமச் சாலையில் சிறப்பு உணவு தயாரிக்க ஆரம்பித்த நேரம்: காலை 4 மணி.

மெய்யூர் கிராம சேவை முடித்து விட்டு திரும்பிய நேரம்: இரவு 9 மணி

தீபம் அறக்கட்டளையில் இருந்து மெய்யூர் கிராம பழங்குடி இன மக்களுக்கு நிவாரணப் பொருட்களாகவும்.. சிறப்பு உணவாகவும்... நேற்று லாரியில் தீபம் தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கப்பட்டது.  சிறப்பு உணவாக பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், எண்ணெய் கத்திரிக்காய், வடை, ஸ்வீட் அப்பளம் மற்றும் வாழைப்பழம் பிஸ்கட்டுகள்  வழங்கப்பட்டது. 

மெய்யூர் கிராமத்தை சுற்றிலும் நான்கு காட்டுப் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்கு நாளெல்லாம் தொண்டு செய்தது மட்டற்ற மகிழ்ச்சி. கண்கொள்ளா காட்சி. இறைவனே தீபத்தின் அருட் பணியை.. அறப்பணியை... முன்னிருந்து நடத்துகிறார். 




நேற்று நம்மால் இயன்ற, வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்:

அரிசி  

பருப்பு

சமையல் எண்ணெய்  

கோதுமை மாவு  

ரவை

சேமியா பாக்கெட்டுகள்

அப்பள கட்டுகள்  

மற்றும்  காய் கனிகள் வஸ்திர தானம் வழங்கப்பட்டது. 

மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கும் பழங்குடியினர்  சமூகத்திற்கு அரிசி தானம் அன்னதானம் வழங்கப்பட்டது. கொட்டும் மழையிலும் அன்னம் வழங்கியது மறக்க இயலாத காட்சிகளாய்... இன்ப சாட்சிகளாய்... கண்ணில் நிறைந்து கொண்டிருக்கிறது.


இந்த அறப்பணியில் கலந்துகொண்ட தொண்டர்கள்:

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்

திருவருட்பிரகாச வள்ளலார்

தயவு மின்னல் அம்மா 

தயவு பரணி ஐயா 

தயவு கணபதி ஐயா 

தயவு வேல்முருகன் ஐயா 

தீபத்தின் சாரதி தயவு வெங்கடேசன் ஐயா 

தயவு அருள் குழந்தை  ரிஷி

தயவு திருமதி புஷ்பா பாலகிருஷ்ணன் அம்மா,  

தீபம் நிறுவனர் பாலா.

சேவதாரிகளின் சேவை மிக மிக சிறப்பு. 


"தொழும் கைகளை விட சேவை செய்யும் கரங்கள் இறை கரங்கள்". இரவு முழுவதும் உறங்காமல் அன்னம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட திரு பரணியின் சேவை மிக மிக அளப்பரியது. பாராட்டத்தக்கது. அன்று நாள் முழுதும் அவருடைய சேவை சிறப்பு. அவருக்கு இறைவன் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அள்ளித் தருவார் என்பது உறுதி.  

பிறர் பசி போக்குபவர் கடவுளில் பாதி. நாள் முழுவதும் சேவையில் தங்களை இணைத்துக்கொண்ட சேவதாரிகளுக்கு நன்றிகள். கோடி பொருளாகவும்... பொற்காசுகளாகவும்... அள்ளிக் கொடுத்த நன்கொடையாளர்களுக்கு நன்றிகள் கோடி கோடி. 

சேவை அருமை; பயணம் மிகச் சிறப்பு; இயற்கை அன்னையின் மடியில் வெங்கல் காட்டுப் பகுதியில் உலவிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு,  மந்திகளுக்கும் மந்திகளை கொஞ்சும் கடுவன்களுக்கும் (ஆண் குரங்குகள்) மந்தியின் மடியில் அண்டி கொண்டு இருக்கும் குட்டி குழந்தைகளுக்கும் வாழை கனிகள் கொடுத்து வாய்பிளந்து பார்த்து ரசித்த காட்சிகள் அருமை. இன்னும் கண்ணிலே அந்த காட்சிகள் தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் சிறிது நேரம் இருந்ததே பேரானந்தமாக இருந்தது. பாடும் நிலா பாலு உடல் அடக்கம் பெற்ற தாமரை பாக்கத்திற்கு சென்றது  சிறப்பு. அனைத்தையும் வழிநடத்திக் கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு வந்தனங்கள்; கோடி நன்றிகள்; கோடி  சேவதாரி களுக்கு நன்றிகள் கோடி கோடி. வாழ்த்துக்கள் கோடி கோடி. 

தொடர்ந்து நடைபெறும் தீபத்தின் அனைத்து  அறப்பணிகளுக்கும், அன்னதான பணிகளுக்கும், வாரி வாரி வழங்கும் தீபம் நன்கொடையாளர்கள், தொடர் மாதாந்திர நன்கொடையாளர்கள், ஆண்டு பல நீண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். 

எல்லா  உயிர்களும் இன்புற்று வாழ்க! 

வள்ளல்  மலரடி வாழ்க !!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள் 


தர்மம் செய்வோம் !

தயவுடன் வாழ்வோம் !

தயவுடன் ...

என்றென்றும் சமுதாயப் பணியில்...

தீபம் அறக்கட்டளை

சென்னை வேளச்சேரி

9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...