மனிதனாக பிறப்பதே ஓர் அதிசயம், ஓர் ஆனந்தம், ஓர் அற்புதம், ஓர் அரிது என்று உணர்வதே ஞானம் ஆகும். மனித உடம்பில் மட்டுமே கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் உள்ளது.ஆதலால் மனித தேகம் மட்டுமே கடவுளை அடைய முடியும். மனித தேகத்தில் மட்டுமே உயிர், சாமானிய ஜீவன், விசே ஜீவன் என்று இரண்டு வகை உயிர்கள் உள்ளது. இறப்பின் போது ஒரு ஜீவன் தான் இறக்கும் மற்றொரு ஜீவன் என்றும் இறக்காது.
மனிதன் மட்டுமே தானம், தவம் செய்து தனக்கு மேலாக இருக்கும் இறைவனை அடையவும் உணரவும் முடியும்.
மனித பிறப்பினால் மட்டுமே, எக்காலத்திலும் எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும், தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வு அடைய முடியும்.
மனிதன் மட்டுமே தெய்வ வழிபாடுகள் செய்ய இயலும்.
ஆன்மா என்றால் என்ன?
1. இயற்கை உண்மை ஒரு தேசமாக இருக்கிறது.
2. இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கு
அறிவாகிய ஒற்றுமை உரிமைக்குரிய இடம்ஆகும்.
3. சுக-துக்கம் அதுக்கு கிடையாது ஆனால் அது
ஜீவர்களாகி சுக-துக்கம் அனுபவிக்கும்.
இதற்கு உபகார கருவிகள் (உதவிக்கு)
மனம் முதலான கரண கருவிகள்,
இந்திரயங்கள் (தேகம்)
4. ஆன்மா எக்காலத்தும் உள்ளதால் இருக்கிறது தோன்றுதலும், அழிதலும் இல்லை, அதை அழிக்கவும், ஆக்கவும் முடியாது புண்ணிய பாவங்களை அனுபவிக்காது.
5. இது நூதன நூதனமாக செய்யப்படும்.
6. இது கன்ம பேதத்தால் வேறு வேறு தேகத்திற்கு செல்லும்.
மனித தேகம்!
1. இது தத்துவம் சடம், சுக துக்கங்களை சடங்கள் அனுபவிக்க அறியாது. ஆன்மாவே மனம் முதலான அந்தகரணங்களாக அனுபவிக்கும்.
2. ஜீவ வாழ்க்கைக்கு கடவுளால் கட்டி கொடுக்கப்பட்ட தேகம் ஒரு வீடாகும். (அதில் இயங்கும் நடம் வேறு)
3. ஆன்மாவுக்கு உபகார கருவியே தேகம் ஆகும்
4. பூதங்களின் காரியங்களால் ஆக்கப்பட்டதுஆதலால் இந்தேகம் ஐம்பூதங்களுக்கு உரிமையாகிறது.
5. இதில் ஆன்மவிளக்கே மறைப்பட்டு இருக்கிறது அருள் விளக்கம் இல்லை, மூடம் உண்டாகும் எனவே இது பந்ததிற்கு உட்பட்டது.
6. இது மாயையால் பூதகாரியத்துக் கொண்டு செய்யப்பட்ட தேகம்.
7. ஆதலால் இதற்கு பசி, கொலை, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம் என்பவைகளால் அடிக்கடி
அபாயம் ஏற்படும். மேலும் ஊழ்வினைகளாலும், அஜாக்கிரதையாலும் இதற்கு அபாயம் ஏற்படும்.
- ஜீவகாருண்யம் பகுதி - 1 (பக்கம் 106)
ஆன்மநேய பொதிகைப்ரியன்
கள்ளக்குறிச்சி
9789788198
No comments:
Post a Comment