Thursday 22 October 2020

பயம் பூஜ்ஜியம்!

    திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் உபதேசக் குறிப்புகளில் நமக்கு எப்படியெல்லாம் பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாக இருந்து பாதுகாவலராக இருக்கிறார் எனில்

ஆனந்தம்:

    ஆனந்தம் என்பது சதாகாலமும் சந்தோ­த்தோடு எதிரில் காணும் ஜீவர்களை திருப்தியால் சந்தோ­ப்படுத்தி தான் மட்டும் எதனைக் கண்டும் அதிசயப்படாமல் நிற்றல். (உரைநடை பக்கம் 419)

    இன்றைய சூழ்நிலையில் உலகிலுள்ள 850 கோடி மக்களும் ஆனந்தமாயிருக்க முடியாமல், ஒரு கொடிய கிருமியால் பரவும் நோய் கண்டு நடுங்கி, சிகிச்சை செய்யக்கூட முடியாமல் திணறிக்-கொண்டிருக்கின்றனர். சன்மார்க்கத்தை தெரிந்து வாழ்பவர்கள் இதைக் கண்டு நடுக்கமுறமாட்டார்கள் என்பது திண்ணம். காரணம் வள்ளலார் காட்டிய ஒழுக்கத்துடன் வாழ்வதால் அவர்கட்கு இதைக் கண்டு பயமில்லை. ஏதோ பக்தி என்று எண்ணவேண்டாம்.

    பெருமானாரின் உபதேசக் குறிப்பின்படி ஆகாரம் அரை, நித்திரை கால், மைதுனம் (உடலுறவு) வீசம், பயம் பூஜ்ஜியம் என்று வாழ்ந்தால் நம் தேகத்தை பூமி, காற்று, கனல், புனல், கதிர்வீச்சு, பிணி போன்றவை தாக்காது என்பதை நடைமுறையில் கொண்டு வந்ததால் இவர்களின் பயம் பூஜ்ஜியம் ஆகிவிட்டது! இன்னும் என்னவெல்லாம் பெருமானார் சொன்னார் எனப் பார்க்கும்போது Š

1. இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கக்கூடாது. அது பிராண நஷ்டம் செய்யும். (பக்கம் 420)

(இப்போதுள்ள பிணி வைரஸ் கிருமி உருவானது இருட்டில் மட்டுமே வாழும் வெளவால், பாம்பு போன்றவற்றையே உணவாகக் கொண்ட மக்களுக்கு இது நோயாய் விளைந்தது. வெளிச்சம் என்பது வெப்பத்துடன் கூடியது. 20°C வெப்பத்திற்கு கீழ்தான் இந்தக் கிருமியால் உயிர் வாழ முடியும். இருட்டான இடத்தில் மட்டுமே இந்தச் சூழல் இருக்கும்)

2. நமது தேகத்தில் பத்தில் ஒன்பது பங்கு 90% ஆகாரத்தால் நஷ்டமடைகிறது. (பக்கம் 424)

(ஆகார வி­யத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை, அசாதாரணம் Š இப்படிப்பட்ட உணவு கூடாது. வெளவால், பாம்பு, பல்லி, தவளை, செய்யான், பூரான் போன்றவைகளை உண்பது அக்கிரமம், அசாதாரணம் அல்லவா?)

3. சுத்த, சத்துவ, ஆகாரங்களை புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு 

( பக்கம் 424 )

4.இளம் வெந்நீரில் குளிக்கவேண்டும். (பக்கம் 116)

5.வெந்நீர் குடிக்கவேண்டுமேயன்றி குளிர்ந்த நீர் குடிக்கக் கூடாது. (396)

    நமது பெருமானார் கூறியதில் இது கோடியில் ஒரு பங்கு மட்டுமே காலங்களால் குறிப்பெடுக்க முடியாத அளவுக்கு சன்மார்க்கம் துலங்கும் என்பது உண்மை. எனவே இப்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் 850 கோடி மக்களையும் பயத்தில் ஆழ்த்தியிருந்தாலும் நம்மை அது நெருங்க வாய்ப்பு இல்லை. காரணம் ஒழுக்கம். பிற உயிர்களை வஞ்சித்து நாம் வாழவில்லை.

    அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே” வஞ்சமில்லா நாம் வருந்திடில் அப்போதே அஞ்சேல் என்பார் இதோ அம்பலத்தில் (நம் சிற்சபையில்) இருக்கிறார். இவ்வுலகம் இன்னும் எத்தனையோ அச்சங்களையும் சந்திக்கலாம். ஆனால் சன்மார்க்கம் சார்ந்தவர்களை இது இம்மியளவும் நெருங்காது. இது சிறிய பிணிதான். பெரும் பிணியான மரணத்தைக் கண்டுகூட சன்மார்க்கம் சார்ந்தவர் அஞ்சமாட்டார்கள் என்பதைத் தான் பயம் பூஜ்ஜியம் என்கிறார் பெருமானார். அது எப்படி?

    சன்மார்க்கம் சார்ந்தவர்கள் தவிர, மரணம் என்பதைக் கண்டு அஞ்சாதவர் உலகில் இல்லை. சன்மார்க்கத்தவர்கட்கு “பயம் பூஜ்ஜியம்” ஆன ரகசியம் எது?

    எல்லா ஞானிகளும், சித்தர்களும், அருளாளர்களும் பிறவாமைதான் கேட்டார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் பிறக்கவில்லை என்பதற்கு சாட்சிகள் இல்லை. எனவே அறிவில் (சிற்சபையில்) வெளிப்பட்ட சன்மார்க்கம் மட்டுமே இந்த இறவாமை கேட்டது, அறிந்தது, பெற்றது. மற்ற மார்க்கங்கள் எல்லாம் இந்திரிய, கரண, ஜீவனில் தோன்றியதே என்பதை “சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளியெனும் அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி” (அகவல் 29/30) என்கிறார் பெருமானார்.

    அதற்கு ஆதாரமாக அறிவு பூர்வமாக அந்த சிற்சபை என்ன சான்றுகளை காட்டியது என்பதை “மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி” (அகவல் 843/844) என்கிறார்.

    அதாவது நான் இதற்கு முன்பு வரையிலான பிறவிதனில் எதைச் செய்தேனோ என்பதெல்லாம் தெரியாமல் மரணமுற்று கொண்டேயிருந்தேன். பல காலம் ஆன்மா கேவலப்பட்டு பிறவியெடுக்க தகுதியின்றியும் இருந்தேன். அப்போது இறைவன் மறைப்பில் கிடந்தவற்றை யெல்லாம் கூட்டிக் கழித்து தருமத்தின்படி (குணம் நாடி, குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க கொளல் என்பதற்கிணங்க) எனக்கு வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க ஆடல் செய்தருளும் அரும் பெரும் பொருளே (917/918) என்ற வரிகட்கு இணங்க இந்த உடம்பைக் கொடுத்து அதற்குத் தக்க நெறிகாட்டி வாழச் செய்து என்னுள் ஆடல் செய்து இறைவன் மரணப் பெரும் பிணி வாராவகை மிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே (1327/1328) எனஅக, புற கரணங்களால் அவற்றின் பெருந்திரளால் அரிய அற்புத குணங்களால் இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்கத்துடன் கூடிய தயவால் Š அந்த மரணம் என்பதை எதிர்த்து என்னிடம் எப்போதும் வராமல் செய்தேன் என்கிறார். (ஒரு மனிதன் எதிரியைப் பார்த்து எப்போது பயப்படுவான்? எதிரி நம்மைவிட பலமுள்ளவனாயிருந்தால் பயப்படுவான். தன்னையும் எதிரியின் அளவுக்குப் பலசாலியாக்கிக் கொண்டால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லையல்லவா? அப்படி நம்மை பலசாலியாக்கிக் கொள்ளத் தரப்பட்ட இந்திரிய கரணங்களை ஒழுக்கமின்றி அவைகளைத் தினந்தோறும் விற்று மூவாசைகளை வாங்கியதால் மரணம் (எமன்) வரும்போது கெட்டுப்போன உடலில் வலுவில்லாததால் அவனை எதிர்க்க முடியாமல் மிகச் சுலபமாக அவனால் மாய்க்கப்படுகிறோம்.)

    சன்மார்க்கம் சார்ந்தோர் இந்திரிய, கரணங்கள் கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்வதால் மரணத்தைக் கண்டு நடுங்காமல், சிறிதும் பயப்படாமல். பயம் என்பதைப் பூஜ்ஜியமாக்கி வாழ்ந்த நிலைதான் பெருமானாரின் வழி Š சொன்னார் Š செய்தார். மரணத்தை எதிர்க்கும் அளவுக்கு நமது கரணங்களை வளமானதாக, வலுவானதாக, சிறிதும் தாழவொட்டாது, தளர வொட்டாது, வாழப் பழகிக் கொண்டால் நிச்சயம் உலகம் தானாகவே சன்மார்க்கிகளைப் பார்த்து ஒப்புக் கொள்ளப் போகும் ஒரே வி­யம்  இவர்கட்கு பயம் பூஜ்ஜியம் !

--
K.N. உமாபதி
KK நகர், சென்னை
9551849757




No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...