Sunday, 11 October 2020

மாத பூசம் & நடமாடும் தர்மசாலை

ஞாயிற்றுக்கிழமைகளில் நடமாடும் தர்மசாலை:

11.10.20: மாத பூசம்

1) திரு V பாரதி தலைமையில் தீபம் அறக்கட்டளையின் தொண்டர்கள் வடலூர் சத்திய தருமசாலை மாத பூச அன்னதான சேவைக்கு இன்று இரவு புறப்படுகிறார்கள். நாளை நாள் முழுவதும் வடலூரில் அன்னதான தொண்டு. இரண்டு இரவுகள் பயணம்.
உண்மை தொண்டர்கள் இறைவனுடைய செல்லபிள்ளைகள்.

 2) தீபம் அறக்கட்டளையின் மற்றுமோர் தொண்டர் படை நாளை ஞாயிற்றுக்கிழமை டாட்டா ஏஸ் வாகனம் மூலம் சென்னை பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் பாலங்களுக்கு அடியில் மரத்தடியில் சுரங்க பாதைகளில் பசியோடு இருப்பவர்களை தேடி நாடி
டாட்டா ஏஸ் வாகனம் மூலம் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வாழைப்பழம் வழங்குவார்கள். 

11.10.20, நாளை ஞாயிற்றுக்கிழமை டாட்டா ஏஸ் வாகனம் மூலம்  அன்னதான தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள் தருமச் சாலைக்கு நேரில் வரவும்.

தொண்டர்களின் பெருமையை இறைவன் பேசிக் கொண்டிருக்கிறான்.

தொண்டு செய்வோம் ! 
நீண்டு வாழ்வோம் !

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...