Thursday, 22 October 2020

கொரோனா ஊரடங்கு காலங்களில் தீபத்தின் சேவை

கொரோனா காலங்களில் தீபம் அறக்கட்டளையின் நிவாரணப்பணிகள்:
கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலங்களில், ஆதரவற்று சாலையோரம் வசிப்பவர்கள், தினக்கூலி அடிப்படையில் வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் என தினசரி தருமச்சலையை தேடி பசியுடன் வருபவர்களுக்கு, உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது. அன்னதானப்பணிகள் மேலும் விரிவாக்கப்பட்டு வேளச்சேரி தண்டீஸ்வரம் கோயில் அருகில் தினசரி மதிய உணவு வழங்கப்பட்டது, டாட்டா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மைலாப்பூர், லஸ் கார்னர், கச்சேரி சாலை, லைட் அவுஸ், மெரினா கடற்கரை, சாந்தோம், பட்டினப்பாக்கம், விவேகானந்தர் இல்லம், கஸ்தூரிபாய் மருத்துவமணை பகுதிகளில் உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது மற்றும் தீபத்தின் தன்னார்வத் தொண்டர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் சாலையோரம் உணவில்லாமல் பசியோடு இருப்பவர்களை தேடிச்சென்று தினசரி நூற்றுக்கணக்கான நபர்களின் பசியாற்றினர் முகாம்களில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தருமச்சலையில் தினசரி காய்கறிகள் வழங்கப்பட்டது.





09-07-2020 நிவாரண உதவி :

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பார்வையற்ற திரு. கருணாமூர்த்தி ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை அறிந்து தீபம் அறக்கட்டளை திரு. கருணாமூர்த்தி அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.2000 வங்கி பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வறுமை நிலையை உணர்ந்து மீண்டும் 14-07-2020 அன்று ரூபாய் 2000 நிவாரண உதவி வழங்கப்பட்டது.

09-07-2020 அன்னதான அரிசி உதவி :

விழுப்புரம் அருள் மாளிகை மூலம் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு தீபம் அறக்கட்டளை 10 அரிசி சிப்பங்களுக்கான உபயம் ரூ. 10,000 வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கியது.

குழந்தைகளுக்கு தீபம் கட்டளையின் சார்பாக தினசரி மதிய உணவு :

10-07-2020 முதல் திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் உள்ள 100 ஏழை குழந்தைகளுக்கு தீபம் கட்டளையின் சார்பாக தினசரி மதிய உணவு வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உணவு தயாரிக்க புதிய அடுப்பும், பாத்திரங்களும் வழங்கப்பட்டது.




12-07-2020 அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கிய சமுதாயப்பணி

திருவொற்றியூர் மாற்றுத்திறனாளி திரு. நந்தகோபால் குடும்பத்திற்கு தீபம் அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் இரண்டாயிரத்துக்கான ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாக வழங்கப்பட்டது.

101 பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

ரயில்களில் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்தும், கொரோன ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் அற்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் 101 பார்வையற்ற குடும்பங்களுக்கு, வாழ்வாதார உதவியாக, குடும்பத்திற்கு தலா ரூ. 1000/- வீதம் 05-06-2020 மற்றும் 11-06-2020 தேதிகளில் வங்கி பரிமாற்றம் செய்யப்பட்டது. அருள்நிதியை வாரி வழங்கிய வாழும் வள்ளல்களுக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி

18-07-2020 அன்று மெய்யூர் காட்டுப்பகுதிகளில் மிக மிக ஏழ்மையில் குடிசைகளில் வாழும் 100 குடும்பங்களுக்கு முதல் தர 10 கிலோ அரிசி சிப்பங்களுடன் 12 வகையான மளிகைப் பொருட்கள் நேரில் சென்று உணவுடன் வழங்கப்பட்டது.







25-7-20 அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குதல்

கல்குட்டை பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு 1ஞிஞி குடும்பங்களுக்கு அவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நேரில் சென்று வழங்கப்பட்டது.






மதுராந்தகத்தில் தீபம் அறக்கட்டளையின் நிவாரணப் பணி

01-08-2020 அன்று மதுராந்தகம் அருகிலுள்ள ஐந்து கிராமங்களில் (ஜல்லிமேடு, கழனிபாக்கம், எண்டத்தூர், தாயந்தப்பாக்கம், சின்ன காலனி கிராமங்கள்) கூலி வேலை இல்லாமல், வறுமையில் வாடும், குடிசைகளில் வாழும் 110 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ முதல் தர அரிசி  மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தீபம் அறக்கட்டளை வாகனம் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டன. அனைவருக்கும் பசி போக்க உணவு வழங்கப்பட்டது.







ஏழை மாணவ மாணவிகளுக்கு11ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை

தீபம் அறக்கட்டளை வருடம் தோறும் 100 ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. 2020 - 21 ஆம் கல்வி ஆண்டு 147 விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டது. அதில் 91 மாண, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இணையவழியில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.

30-08-2020 அன்று முதற்கட்ட இணையவழி நேர்காணல் மற்றும் 06-09-2020 அன்று இரண்டாம்கட்ட இணையவழி நேர்காணல் நடைபெற்றது. இறுதியாக 52 மாணவ மாணவியர்கள் நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்டு 20-09-2020 அன்று மாணவர்கள் பயிலும்  கல்லூரின் பெயரில் காசோலை வழங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை 1047 மாணவ மாணவியர்களுக்கு 56,99,216/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளது.






---------------------------------------------------------------------

https://youtu.be/tvopu3hGc60


கொரோனா ஊரடங்கு காலங்களில் தீபம் பல லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கியுள்ளது. பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்கள் என பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் தந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளது. ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலும், நிதியாகவும் பொருளாகவும் தந்து உதவிபுரிந்த தீபத்தின் நன்கொடையாளர்களாகிய அருளாளர்களுக்கும், அன்னதானப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் முக்கியமாக தினசரி சாலையோரம் பசியுடன் இருப்பவர்களைத் தேடித்சென்று உணவளித்த தீபத்தின் தன்னார்வ தொண்டர்களுக்கும் தீபம் அறக்கட்டளை தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...