Monday, 27 January 2020

29.01.2020 - கருணை இல்லம் குழந்தைகளுக்கு உணவு

மகிழ்வித்து மகிழ்தல்

ஓடி ஓடி உழைக்க வேண்டும்
ஊருக்கெல்லாம் கொடுக்கவேண்டும்
ஆடி பாடி நடக்கவேண்டும்
அன்பை நாளும் வளர்க்க வேண்டும்.

என்ற அற்புத வரிகளுக்கேற்ப தீபம் அறக்கட்டளையானது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள குழந்தைகள் காப்பகம்
முதியோர் காப்பகங்கள்
மாற்று திறனாளி இல்லங்களுக்கு
உடைகள் தந்து
உணவு தந்து,
அரிசி தந்து
ஆடி பாடி மகிழ்விக்க கூடிய அருட்பணியை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாடம்பாக்கம் கருணை இல்லம் குழந்தைகளுடன் ஆடிப்பாடி உணவு தந்து மகிழ்வித்த தருணம்... ஓரிரு காட்சிகளை ஒரு நிமிட பதிவாக கண்டு மகிழுங்கள்...








இந்த சமுதாய நிகழ்விற்கு உபயம் செய்த வேளச்சேரி எக்ஸலண்ட்  மருத்துவமனை நிறுவனர் டாக்டர் B செந்தில் நாதன் ஐயா அவர்களையும் ஓயாது சேவை செய்து வரும் தீபத்தின் சேவதாரிகளையும் தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

அடுத்த நிகழ்வு அடையாறு ஆந்திர மகிள சபா குழந்தைகளுக்கு உணவு தந்து அரசி கொடுத்து ஆடைகள் கொடுத்து ஆடிப்பாடி மகிழ்விக்க... வாருங்கள் மகிழ்வித்து மகிழ்வோம்!!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

தயவுடன்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு வழங்குதல்

நாள் : 29 1 2020 புதன்கிழமை
நேரம் :காலை 7 மணி
இடம் : குருநானக் கல்லூரி வேளச்சேரி

வரும் புதன்கிழமை 29 1 2020 அன்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய திரு அகவல் ஓதுதல் என்ற பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நிகழ்ச்சிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு தருவதற்கு இறையருள் நமக்கு கட்டளையிடுகிறது.
பாக்கு தட்டில் உணவு தர இருக்கிறோம். நிதி பொருள் உழைப்பு மூன்றும் தேவைப்படுகிறது.

காலை உணவு:
1) Sakkarai Pongal
2) Ven pongal
3) Sambar
4) Cocount Chutney
5) Idili

இந்த அற்புதமான சமுதாயப் பணிக்கு உணவு தயாரித்து கொடுப்பதற்கு தீபம் சேவடிகள் நேரில் வந்து உதவுமாறு தீபம் கேட்டுக்கொள்கிறது.

திருஅகவல் நிகழ்வில் தீபம் நிர்வாகிகள் மற்றும் தீபம் சேவகர்கள் கலந்துகொண்டு ஆன்மலாபம் பெறுமாறு தீபம் அழைத்து மகிழ்கிறது.

இட்லி மாவு அரைத்தல்
இட்லி தயாரித்தல் மிகப்பெரிய பணி.
புதன்கிழமை விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி அளவில் அடுப்பு ஏற்ற வேண்டும்.

சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் நாளை இரவே தர்ம சாலைக்கு வந்து விடவும்.

எதிர்பார்ப்புடன்...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Sunday, 26 January 2020

குளிரால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்குதல்

இன்று(26.1.20) நள்ளிரவு 12.10 முதல் அதிகாலை 4.10 மணி வரை கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் ரோட்டோரம்,
பஸ் நிறுத்தங்களில் ரயில் நிலையங்களில் பாலங்களுக்கு அடியில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் சூடான உணவு பாக்குதட்டில் பசித்தவர்களுக்கு குடி தண்ணீருடன் பிரார்த்தனையோடு தரப்பட்டது.










இந்த அற்புதமான சமுதாயப் பணியில் இரவு முழுவதும் தொண்டு செய்த இறைவனுடைய செல்ல பிள்ளைகளாகிய தீபத்தின் கண்மணிகளையும், நூற்றுக்கணக்கான போர்வைகளுக்கு நிதியாகவும், போர்வைகளாகவும், அள்ளிக்கொடுத்த தர்மவான்களை,
வாழும் வள்ளல்களை
தீபம் அறக்கட்டளை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Sunday, 19 January 2020

19.01.2020 - ரோட்டோரம் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் -11 ஆம் ஆண்டு

சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும்
ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில்
பாலங்களுக்கு மேல்
பஸ் நிறுத்தங்களில்
ரயில்வே நிலையங்களில் நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு ஆதரவற்றவர்களுக்கு
குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 11 வது ஆண்டாக தேடிச்சென்று போர்வைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்று (19.1.20) நள்ளிரவு
1 மணி முதல் விடியற்காலை வரை தீபம் அறக் கட்டளையின் சார்பாக நள்ளிரவில் மனிதநேய மாண்புடன் போர்வைகள் அளித்த காட்சி.
(1 நிமிட படக்காட்சியாக).



போர்வைகளுக்கு நிதி தந்த அருளாளர்களை
தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

இரண்டாம் கட்டமாக வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி  (சனிக்கிழமை இரவு) டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் உணவு வழங்கக்கூடிய அற்புதமான நிகழ்வு.

இந்த புண்ணிய தொண்டில் ஆன்மநேய அன்பு உள்ளங்கள் கலந்து கொண்டு
ஆன்ம லாபம் அடையுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

தயவுடன் ...
என்றென்றும் இறை பணியில்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
9444073635

Saturday, 18 January 2020

Provisions for Dharumasalai

இன்று தீபம் அறக்கட்டளையின் சார்பாக தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற தர்ம சாலைகளுக்கு திருவமுது அருட் கஞ்சிக்காக Rs.60 ஆயிரத்திற்கு (35 மூட்டைகள்)

குருணை
மிளகு
சீரகம்
வெந்தயம்
பைத்தியம் பருப்பு மற்றும்
ஓமம்





பாரிஸ் சரவணா ஸ்டோரில் வாங்கப்பட்டு இன்று தீபம் அறக்கட்டளையின் மூலம் அனுப்பப்பட்டது.

Wednesday, 15 January 2020

தர்மம் செய்வதால் அடையும் நன்மைகள்

=====================
திருமந்திரம்
====================

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்.

உருமிடி நாகம் உரோகணி               
கழலை தருமம் செய்வார்
பக்கல் தாழாகிலவே.

- திருமூலர்

பொருள்
========

இருமலும், இரத்தம் குறைவால்வரும் இரத்த சோகை என்னும் நோயும், சளியும்,
கணைச்சூடும் போன்றவை
எல்லாம் பிறருக்கு உதவி செய்யாதவர்க்கே உரிய
உடைமைகளாகும்.

அச்சம் தரும் இடி,
நாகம்-இராகு,கேது ஆகிய பாம்புகளால் வரும் தொல்லைகள்,
உரோகிணி
நட்சத்திரத்தால்   சிலருக்கு விளையும் தீமைகள்,முன் கழுத்துக் கழலைபோன்றகட்டிகள், எல்லாம், தருமம்
செய்பவர்கள்
பக்கம் நெருங்காது.

சித்தர்கள் பிறருக்கு தருமம் செய்வதை வற்புறுத்திப்பாடல்கள் படைத்துள்ளனர். உலக
மக்கள் பசியற்று இருப்பதே அவர்களின்
தலைமையான குறிக்கோள்.
திருமூலரும் இப்பாடலில் தருமத்தை வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம்!!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

என்றென்றும் அறப்பணியில்... தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

Sunday, 12 January 2020

12.01.2020 - பசி ஆற்றுவித்தல் தொடர் திருத்தொண்டு:


ஒவ்வொரு மாதமும் மாத பூச நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் திருத்தொண்டர்கள் நாகப்பட்டினம் அகல்விளக்கு மன்ற சன்மார்க்க சாலை சம்பந்திகள் உடன் சேர்ந்து அன்னம் பாலிக்கக் கூடிய திருத்தொண்டில் கடந்த 77 மாதங்களாக நாள் முழுவதும் சத்திய தரும சாலை ஓய்வின்றி தொடர் பசி ஆற்று வித்தல் திருப்பணி செய்து வருவது தாங்கள் அறிந்ததே.






11.1.20- மாத பூச நன்னாளில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் தம் திருக்கரங்களினால் ஏற்றிய அடுப்பில்
தீபம் திருத்தொண்டர்கள், நாகப்பட்டினம் சன்மார்க்க அன்பர்களின் அற்புதமான சேவையின் சில காட்சிகள்...
கண்டு மகிழுங்கள்...
தொண்டு செய்த
திரு தொண்டர்களை வாழ்த்துங்கள்...
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்...

தொண்டு பற்றி அவ்வையார்:

எது பெரிது?

பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ அரவின் தலை பாகம்!
அரவமோ உமையவள் இடதுகை சிறுவிரல் மோதிரம்!
அன்னையோ ஐயனுள் அடக்கம்!
ஐயனோ தொண்டர்தம் உள்ளத்து அடக்கம்!
தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே!!!

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

அடுத்த மாதம் பிப்ரவரி எட்டாம் தேதி (8.2.20) சனிக்கிழமை தைப்பூசம்.

வடலூரில் மூன்று நாட்கள் தொடர் அன்னதான திருத்தொண்டு ...

வடலூர் ஞானசபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண...

வடலூர் ஜோதி தரிசனம் காண வரும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு
தீபம் அறக்கட்டளையின் சார்பாக 2 டன் அரிசியில் அன்னம் பாலித்தல்...

விரிவான செய்தி விரைவில்...

எல்லாப் புகழும் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கே !!!

தொடர் தொண்டு செய்யும் தீபம் அறக்கட்டளையின் அடியவர்களையும்,
உலகம் முழுவதும்
உண்மை தொண்டு செய்துவரும்
ஆன்ம நேய அன்பு உள்ளங்களின் பொற் பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.

தயவுடன் 
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...