Sunday, 6 January 2019

05.01.2019 - மார்கழி மாத பனிக்குளிரில் நடுங்கும் சென்னை மாநகர சாலையோரத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் போர்த்தி மகிழ்விக்கும் நிகழ்வு











திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மார்கழி மாத பனிக்குளிரில் நடுங்கும் சென்னை மாநகர சாலையோரத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் போர்த்தி மகிழ்விக்கும் நிகழ்வு

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் தொடர்ந்து பத்தாம் ஆண்டாக சென்னை மாநகர் வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள இரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் சாலையோரங்களில் மார்கழி மாத கடுங்குளிரில் பரட்டை தலையுடன் சுருண்டு படுத்து உறங்கும், ஆதரவற்றவர்களை வறியவர்களை தேடிச் சென்று நேற்று (05-01-2019) நள்ளிரவு 12-30 மணி முதல் இன்று (06-01-2019) அதிகாலை 4-30 மணிவரை போர்வைகளை போர்த்தி சிறப்பு அன்னம் தந்து மகிழ்வித்த அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.

இந்த அருட் பணிக்கு  நிதியாகவும், போர்வைகளாகவும் வாரி வழங்கிய தயவாளர்களுக்கு,
அருளாளர்களுக்கு, தீபம் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

இந்நிகழ்வில் போர்வைகள் மட்டுமல்லாது, பசியால் படுத்து இருந்தவர்களுக்கு  உணவு தந்து காலை 3 மணி அளவிலும் 4 மணி அளவிலும் பசியோடு அவர்கள் உணவை எடுத்துக்கொண்ட காட்சி நெஞ்சை நெகிழ வைக்கிறது.
எண்ணற்ற ஆதரவற்றவர்கள் உணவை எடுத்துக்கொண்ட விதம், அவர்கள் முதல் நாள் இரவு உணவை சாப்பிடவில்லை அல்லது முதல் நாள் இரவு அரைவயிறு உணவோடு படுத்து இருக்கிறார்கள்  என்பதை உணர முடிகிறது.

இந்த அற்புதமான அருட்பணியில் தீபம் அறக்கட்டளையின் நடமாடும் தருமச் சாலை வாகனத்தில் 22 சேவடிகள் இரவு முழுவதும் கண்விழித்து இந்த அற்புத சமுதாயப் பணியை செய்திருக்கிறார்கள். அவர்களை தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

தொண்டு செய்வோம் !
ஆனந்தமாய் வாழ்வோம் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற சமுதாய அற தொண்டு நிறுவனம்

அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், தொண்டு செய்ய விரும்புவோர் தொடர்புக்கு;
9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...