Tuesday 1 January 2019

மார்கழி விடியலின் சிறப்பு!

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்” என பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். மார்கழி மாதம் வந்ததும் விடியற்காலையில் எழுவதும், குளிப்பதும், வாசலில் கோலமிடுவதும், திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும், பல கோயில்களில் பக்தி பாடல்களை ஒலிப்பெருக்கியில் ஒலிக்கச் செய்வதும், சபரி மலைக்கு செல்லும் பக்தர்களின் சரணகோஷம் விண்ணைப் பிளக்கும் படியும் இருக்கும். மார்கழி மாதம் விடியலில் எழுவதும் இறைவனை தொழுவதும் நன்மை பயக்கும். இதில் சந்தேகம் வேண்டாம். இயேசு நாதர் பிறந்ததும் இந்த மாதத்தில் தான். அவர் வழி நிற்போறும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா எடுப்பதும் மார்கழி மாதம் தான்.




விடியற்காலை எழுவது இந்த மாதத்தின் சிறப்பு என்றாலும், இந்த மாதம் வந்தால் சிலர் விடியலில் விழித்து எழவேண்டிய அவசியம் இருப்பதில்லை. காரணம் அவர்கள் இரவில் உறங்குவதில்லை. சாலையோரத்தில், பஸ் நிறுத்தங்களிலும், இரயில் நிறுத்தங்களிலும்,  சாக்கடை மூடிகள் மீதும், கடை படிகட்டின் மீதும், முழங்காலை தலையில் தொடுமளவு மடக்கி, ஆறடி உயரமுள்ள மனிதன் மூன்றடியாகி நைந்து போன சின்ன ஒரு அழுக்கு துணியால் தேகமெல்லாம் மூடி குளிரில் நடுங்கி சுருண்டு கிடப்பதால் தூக்கம் வருவதில்லை. இவர்களின் மார்கழி மாத விடியல் இப்படித்தான் விதிக்கப்பட்டுள்ளது.

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நமது நாட்டில், அதில் ஒருவனான “பேகன்” எனும் அரசன், குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலுக்கு தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி அதன் குளிரைப் போக்கி, அது ஆடதொடங்கியதை கண்டு மகிழ்ந்தான், என்பதை சங்ககால பாடல் கூறுகிறது.

மார்கழி மாத குளிரில் நடுங்கிகொண்டே பாதி உறக்கத்திலிருப்பவர்களை பாதி இரவில் எழுப்பி, இதுவரை 6000 போர்வைகளை வழங்கியுள்ளது சென்னை, வேளச்சேரியில் இயங்கும் தீபம் அறக்கட்டளை. 

கடந்த வருடம் போர்வைகள் வழங்கிய புகைப்படங்களை காண:

ஒரு போர்வை கொடுத்தற்கே  அந்த “பேகன்” எனும் அரசனை ஓராயிரம் ஆண்டுகளாக பேசி வியக்கும் நாம், இந்த 6000 போர்வையை போர்த்திய தீபம் நன்கொடையாளர்களை ஒரு கோடி ஆண்டுகட்கு போற்றியே ஆகவேண்டும் அல்லவா? இப்பணி தொடர இந்த மார்கழி மாதம் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அந்த பரோபகாரம் மட்டுமே சன்மார்க்க சங்கத்தவர் விழைவு. முற்றிலும் வித்தியாசமான மாற்றத்துடன் சிறக்கட்டும் மார்கழி விடியலின் சிறப்பு.

மார்கழி மாத குளிரில் வாடும் வறியவர்களுக்கு போர்வை, கம்பளம் தந்து புண்ணிய பலன் விரும்புவோர் தீபம் அறக்கட்டளைக்கு நன்கொடை தந்து உதவலாம்.

நன்கொடையளிக்க http://deepamtrust.org/donate-now/

---
K N உமாபதி
மூத்த சன்மார்கி
கே.கே.நகர்
தீபம் அறக்கட்டளை
9444073635 / 044 2244 2515

தீபம் அறக்கட்டளையின் சேவைகளை மின்னஞ்சல் (email) ஆக பெற Google குழுவில் இணைய இந்த link ஐ click செய்து apply membership மற்றும் apply to join this group என click செய்யவும். https://groups.google.com/d/forum/deepam-trust


No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...