Monday, 9 April 2018

பசியாற்றுவித்தல் - பழவேற்காடு அருள்ஜோதி குருகுல பாடசாலை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் பழவேற்காடு அருள்ஜோதி குருகுல பாடசாலையில் வருகிற 10-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை முதல் மதியம் வரை அருள்ஜோதி அன்ன ஆலயத்தின் ஸ்தாபகரும், ஜீவகாருண்ய செம்மல்   தவத்திரு. சதீஸ்ராஜ் அடிகளார் அவர்களின் இரண்டாம் ஆண்டு ஜீவ ஐக்கிய நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதை ஒட்டி குருகுல பாடசாலை மாணவர்கள், சன்மார்க்க சான்றோர்கள் பொதுமக்கள்  உள்பட  ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற உள்ளது.

அதுசமயம் அன்னதான சமையல் பணிக்கும், காய்கறிகளை வெட்டுவதற்கும் அதிகளவில் சேவதாரிகள் தேவைப்படுகிறார்கள். ஆன்மநேய  ஒருமைப்பாட்டுள்ளம் கொண்ட அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருட் பெருங்கருணைக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு:
சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் 09-04-2018 திங்கள்கிழமை மாலை 4-30 மணிக்குள் சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலைக்கு வருகை தர வேண்டுகிறோம். சரியாக மாலை 5-00 மணிக்கு வாகனம் புறப்படுகிறது.

தொடர்ப்புக்கு: 9444073635

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...