Thursday, 12 April 2018

200 வது குருவார அருட்பெருஞ்ஜோதி கூட்டுப் பிரார்த்தனை

சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும், தொழில்வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும், கடன் தொல்லை பல்வேறு வாழ்வியல் பிரச்சனைகளை சமாளிக்கவும், நோய் நொடியில் இருந்து விடுபட்டு  நிறைவோடும் நிம்மதியோடும் என்றும் ஞானச்செல்வத்துடன் இன்புற்று வாழ வேண்டி சன்மார்க்க சாதுக்கள் பங்கு பெறும் இன்று  (12-04-2018) மாலை 200 வது குருவார  அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் மற்றும் ஜோதி தரிசனம் சிறப்பு பிரம்மாண்டமான  கூட்டு ப்ரார்த்தனை வழிபாடும் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருட் பெருங்கருணைக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 12-04-2018 வியாழன்

இடம்: நித்ய தீப தருமச்சாலை 
7/8, புத்தேரிக்கரை தெரு வேளச்சேரி சென்னை 

நேரம்: மாலை 5-00 மணிமுதல்

நிகழ்வுகள்:
உலகை கட்டி ஆளும்   சன்மார்க்க நீதிக்கொடி உயர்த்துதல் 
திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல், அஷ்டகம், ஞானசரியை, சமாதி வற்புறுத்தல், திருக்கதவம் திறத்தல் பாராயணம் 

நேரம்: இரவு 7-50 மணி 
ஜோதி வழிபாடு, தரிசனம், விண்ணப்பம் 

நேரம்: இரவு 8-00 மணி 
அன்னதானம் நடைபெறும் 

அனைவரும் வருக!
அருள்ஜோதி அருள் பெறுக

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...