Monday, 23 April 2018

23.04.2018 - வடலூர் மாதபூச சேவை

வடலூர் மாதபூச ஜோதி தரிசன நன்னாளாகிய நேற்று  (22-04-2018) ஞாயிற்றுக்கிழமை சத்திய தருமச்சாலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னம்பாலிக்கும் பொருட்டு காய்கறிகளை நறுக்கும் சேவைக்கும், சமைய‌ல் சேவைக்கும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள் 54 வது மாதமாக பங்கேற்ற அற்புதமான காட்சியை படத்தில் காணுங்கள்.






தன்னார்வ தொண்டர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை காணிக்கையாக்குகிறோம்.

Sunday, 22 April 2018

தீபநெறி 2018 - ஏப்ரல் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.

இருப்பினும் அனைவரும் படித்து பயனடையும் வண்ணம் 2018 ஏப்ரல்  மாத தீபநெறி மின்னிதழை linkல் இணைத்துள்ளோம்.
https://deepamtrustvelachery.blogspot.in/2018/04/2018.html

இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை இந்த https://goo.gl/forms/16OVQfmJp6aieFjD2 லிங்கில் பதிவு செய்தால்  இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.






















Thursday, 12 April 2018

கோடை கால நீர் மோர் பந்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் 01-04-2018 முதல் மூன்று மாதங்களுக்கு (கோடை காலம் முடியும் வரை) தினசரி காலை 11-00 மணிமுதல் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது. 

🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛



இப்புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

10 லிட்டர் தயிருக்கு ₹500/-
5 லிட்டர் தயிருக்கு ₹250/-
1 லிட்டர் தயிருக்கு ₹50/- 
தங்களது விருப்பம் போல் தயிராகவோ நிதியாகவோ வாரி வழங்கிட அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

என்றும் ஆன்மநேய அறப்பணியில்
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை-600042
தொடர்ப்புக்கு: 
044-22442515, 9444073635

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...