Saturday, 24 March 2018

பசித்தவர்களுக்கு அன்னம் அளிப்போம் !

இறையன்பர்களே, வந்தனம்.

ஆகாரங் கொடுக்க உண்டு, பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும், கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத்
தேகமுழுவதும் சில்லென்று தழைய,
முகத்தினடமாகப் பூரித்து விளங்குகின்ற, கடவுள் விளக்கத்தையும், திருப்தியின்பமாகிய கடவுள் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.

ஆதலால் அந்த புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும், கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறிய வேண்டும்.

பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப்  புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால், இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறிய வேண்டும்.



ஜீவகாருணியமே கடவுள் வழிபாடு ... திரு அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம் ....

பசித்தவர்களுக்கு
அன்னம் அளிப்போம் !
ஆண்டவன் அருள் பெறுவோம் !

தயவுடன்,
தீபம் அறக்கட்டளை
சென்னை, வேளச்சேரி
அன்னதானப்பணியில்...21 ஆண்டுகளாக...

No comments:

Post a Comment

ஏழை மாணவ மாணவிகளுக்கு 15ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 27 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப்...