Thursday, 22 March 2018

மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் இன்று (21-03-2018) மாலை சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த முருகன் திலகவதி தம்பதியினரின் மகளாகிய, 7 வயது ஏஞ்சலினா ரோஷினிக்கு பிறவி முதலே தீராத நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.



தற்சமயம் திருநெல்வேலியில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டு இருப்பதால் தீபம் அறக்கட்டளையின் சார்பில் ₹5000/- க்கான காசோலையை வழங்கி அந்த பால்மனம் மாறாத  குழந்தை பூரண நலம்பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் இப்புவியில் வலம் வரவேண்டி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

மருத்துவ உதவிக்கு ₹5000 நன்கொடை அளித்த தயவாளர்  தயவுதிரு செந்தில் அவர்களை தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...