Saturday, 30 September 2017

Vessels & Gas Stove for Muthukulathur Dharumasalai

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் பெருங்கருணையோடும், தயா உள்ளம் கொண்ட தங்களின் பேராதரவோடும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை சார்பில் 19 வது தருமச்சாலையாக இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் வருகிற அக்டோபர் 1 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்.
ஜீவகாருண்ய செம்மல் தயவுமிகு ப்ரம்மஸ்ரீ பழனிச்சாமி அய்யா பொறுப்பில் இயங்கி வரும் தருமச்சாலையில் நித்ய பசியாற்றுவித்தல் (முதல்படியாக கஞ்சி வார்த்தல்) தொடங்க தீபம் திருவுள்ளம் கொண்டதை அடுத்து முதுகுளத்தூர் தருமச்சாலைக்கு வழங்குவதற்கு தயாராக உள்ள அடுப்பு மற்றும் பாத்திர வகைகளை படத்தில் காணலாம். இதன் மொத்த மதிப்பீடு Rs.18,298/- ஆகிறது.
உபயம் செய்ய விரும்புபவர்கள் மொத்தமாகவோ, பகுதியாகவோ வாரி வழங்கி கிடைப்பதற்கரிய இந்த மானிடப்பிறவியின் பெரும்பயனை உண்ர்ந்து ஆன்மலாபம் பெற தங்களை இருகரம் கூப்பி விண்ணப்பிக்கின்றோம்.
மேலும் 12 தருமச்சாலைகளும் தொடங்க வேண்டுமாய் பல அன்பர்கள் தீபம் அறக்கட்டளைக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...