Sunday, 10 September 2017

தீபம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள் !தீபம் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்கள் !

10-09-2017. ஆம் தேதி தீபம் அறக்கட்டளையின் சார்பாக 10.ஆம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சி பெரு விழா காலையில் இருந்து இரவு 10.மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அந்த பெருவிழாவில் ஈரோடு கதிர்வேல் ஆகிய எனக்கும் வாய்ப்பு கொடுத்து .மரணம் இல்லாப்பெருவாழ்வு என்னும் தலைப்பில் பேச வைத்தார்கள்

அது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவை  அவ்வளவு பெருமையாக  எனக்குத் தோன்றவில்லை.

அவற்றை விட பெருமையாக ஆச்சரியமாக சிலவற்றைக் கண்டேன்.

காலை 9-30.மணிக்கு தீபம் அறக்கட்டளை இல்லத்தின் உள்ளே சென்றேன்.கண் கொள்ளா காட்சியைக் கண்டேன்.தீப அறக்கட்டளையின் சேவதாரிகள்.ஆண்களும் பெண்களும் இன்முகத்தோடு வறவேற்றார்கள்.

அப்போது தீபம் அறக்கட்டளையின் நிர்வாகி திரு பாலகிருஷ்ணன் அய்யா இல்லை.தீப அறக்கட்டளையின் செயல் வீரர் சதுரகிரியார் அய்யா இல்லை வெளியில் முக்கியமான வேலைகளை கவனிக்க சென்று இருந்தார்கள் போல.

அங்கே சுமார் 50.க்கும் மேல்பட்ட சேவதாரிகள் ஆண்களும்.பெண்களும் ஜீவகாருண்ய பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்த்து.அவரகளிடம் உரையாடினேன்.உங்களுக்கு சோரவு.களைப்பு உண்டாகிறதா என்று கேட்டேன்.இல்லை அய்யா மூன்று நாட்களாக தூங்காமல் வேலை செய்கிறோம்.பாலகிருஷ்ணன் அய்யா இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு  பணிகளை  செயது கொண்டு உள்ளோம் என்றார்கள்

பாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் தான் எங்களுக்கு ஜீவகாருண்யத்தின் நற்பயனை சொல்லிக் கொடுத்து நல்ல வழியைக் காட்டி உள்ளார். என்பதனை அத்தனை பேரும் ஒத்த கருத்துடன் சொன்னார்கள்.நான் வியந்து போனேன்.

அந்த கருணையே வடிவமாக உள்ள திரு. பாலகிருஷ்ணன் அய்யாவின் உண்மை.நேர்மை ஒழுக்கம் . இரக்கம..தயவை.அன்பை.சேவதாரிகள் மூலமாக தெரிந்து ஆச்சரியமும் வியப்பும் அடைந்தேன்.

நான் இதுவரையில் வள்ளலாரை கனவில் கூட கண்டதில்லை.அன்று  தீப அறக்கட்டளை சேவதாரிகள் அத்தனை பேரும் என் கண்களுக்கு வள்ளலார் போல் தோன்றினார்கள் அன்றுதான் பல உருவங்களில் வள்ளலார் காட்சி கொடுத்ததை நேரே கண்டேன்.என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் முன்னால் கண்ணீர் விட்டு கதறி அழுதேன்.என்னே அருள் அற்புதம் இறைவா.

அற்புதம் அற்புதம் அருள் அற்புதமே.

அந்த சிறிய தீப அறக்கட்டளை இல்லத்தில் அளவு கடந்த ஜீவகாருண்ய பணிகளை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தோன்றும் துணையாக இருந்து செயலாற்றிக் கொண்டு வருகிறார் என்பதை உணர்ந்தேன்.

தீப அறக்கட்டளையின் ஜீவகாருண்ய பணி தோய்வு இல்லாமல் மேலும் மேலும் விரிவடைய புதியதாக விரிவான சொந்த இடத்திற்கு கருணை பாலிக்க வேண்டுமாய் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொண்டேன்.

திரு பாலகிருஷ்ணன் அய்யாவைக் கண்டேன் அவர் அன்பிற்கு அளவே இல்லை. சொல்லவே வேண்டியதில்லை.அவர் கருணையே வடிவமாக திகழ்கின்றார்.தன்னை வெளியே காட்டிக் கொள்ளாமல் .அதிகம் பேசாமல்.மேடையில் ஏராமல்  மிகவும் அடக்கத்துடன்.அன்புடன்.தயவுடன்.கருணையுடன் மவுன புரட்சி செய்து கொண்டு உள்ளார்

 இவ்வளவு ஜீவகாருண்ய  பணிகளை இவரால் எப்படி செய்ய முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சிரியமாக உள்ளது.வியந்து வியந்து பாராட்டுகிறேன்

ஆதரவு அற்றவர்களுக்கு உணவு உடை.பொருள்.

கண் இல்லாதவர்களுக்கு அவர்கள் வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் சிறிய வியாபாரம் செய்ய பொருள் உதவி .

மேலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு மேற் படிப்பிற்காக பண உதவி.

முதியவர்களுக்கு உணவு உடை  தினமும் உணவுக்கு வேண்டிய பொருள்கள்.

ஏழைகள்.குழந்தைகள் முதியவர்கள்.பசியோடு எங்கு எங்கு உள்ளார்கள் என்பதை அறிந்து வேன் மூலமாக உணவு கொண்டு சென்று நேரே உணவு வழங்குவது.

குளிர் காலங்களில் ரோட்டிலே தவிக்கும் முதியவர்களுக்கு போர்வை வழங்குதல்.போன்ற எண்ணற்ற ஜீவகாருண்ய பணிகளை.தீபம் அறக்கட்டளை மூலமாக கருணைமிகு பாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் சேவதாரிகளின் துணையோடு உதவியோடு செயல்பட்டுக் கொண்டு உள்ளது பெரும் வியப்பை அளிக்கிறது.

அவர் ஆன்மாவிலே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அமர்ந்து செயலாற்றிக் கொண்டு உள்ளார் .அதுதான் உண்மை.

விழாவில் எந்த சலசலப்பும் இல்லாமல் அவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக நடை பெற்றது்

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும்ஜோதி.

என்ற வள்ளலார் வாக்குக்கு பாத்திரமாக தீபம் அறக்கட்டளை விளங்கி கொண்டு உள்ளது. பாராட்ட வார்த்தைகளே இல்லை.

மேலும் திரு சதுரகிரியார் அவர்கள் எல்லாப் பணிகளையும் சிரமேற் கொண்டு சுமை தாங்கிபோல் பம்பரம் போல் சுற்றி சுற்றி மின்னல் வேகத்தில் பணிகளை செய்து கொண்டு இருந்தார்.அவருக்கு நிகர் அவர்தான் அந்த அன்பு உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வார்.

மேலும் எனது இனிய தோழர் கருணை கோவிந்தசாமி அய்யா அவர்கள் தீபம் அறக்கட்டளையில் தங்கி நல்ல கண்காணிப்பாளராக.நல்ல ஆலோசகராக செயல் பட்டுக் கொண்டு இருப்பது அளவில்லா ஆணந்தம்.

மேலும் தீபம் அறக்கட்டளையின் வளர்ச்சியில் பங்கு கொண்டு வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் சான்றோர்கள் நிறைந்து உள்ளார்கள்

அந்த கருணை உள்ளங்களால் ஜீவ காருண்ய பணி சிறப்புடன் செயலாற்றிக் கொண்டு வருகின்றது்

 தீபம் அறக்கட்டளை தொய்வு இல்லாமல் உலகம் போற்றும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகின்றது என்றால் கருணை உள்ள வள்ளல்கள் தான் காரணம்  அவர்களை் நான் வணங்கும் அருட்பெரும்ஜோதி யாக கண்டேன் அந்த தெய்வங்கள். கொடுக்கும் கருணை உள்ள உள்ளங்களுக்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வாரி வழங்குவார் இது சத்தியம்..

அவர்களுக்கு நீண்ட ஆயுள். நிறைந்த செல்வம்.அழியாப் புகழ்.என்றும் அழியாத அருளைப் கொடுத்து மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வைக்க  வேண்டும் என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் வேண்டிக் கொள்கிறேன்.தலைவணங்கி பிரார்த்தனை செய்ய கடமை பட்டு உள்ளேன்.

குறுகிய காலத்தில் தீபம் அறக்கட்டளை ஒரு சகாப்தமாக விளங்கிக் கொண்டு வருகின்றது. மேலும் மேலும் பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க ஒவ்வொரு சன்மார்க்கிகளும்.சன்மார்க்க சங்கங்களும் தீபம் அறக்கட்டளைப் போல் செயல் பட உறுதியை மேற் கொள்வோம்

உண்மை நேர்மை.ஒழுக்கம்.
இரக்கம்  இருந்தால் போதும் கடவுள் நிச்சயம் காரியப்படுவார்.

எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து !.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!

நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்த

சிவபதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட

மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே வாழிஎன் !

 வாழி என் ஆண்டவன்
எங்கோன்அருள் வாய்மை என்றும்

வாழி எம்மான் புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்

வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு

வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.!

அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
98659 39896

No comments:

Post a Comment

தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல்

தயவுடையீர், வணக்கம் வந்தனம்!!! இவ்வுலகில் ஒரு ஜீவன் கூட பசியோடு வாடக்கூடாது ; பசியோடு இருக்கக்கூடாது ; பசியோடு இறக்கக் கூடாது. - தீ...