சாதி,சமயம்,
மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்!
எதிலும்
சுயநலம் இல்லாத பொது நோக்கம் வேண்டும்.
கடவுள்
சுய நலம் இல்லாதவர். கருணையே வடிவமாக உள்ளவர். அவருடைய குழந்தைகளாகிய நாம் எப்படி
வாழ வேண்டும். அருட் தந்தை வள்ளல்பெருமான் போல் அன்பு தயவு கருணையுடன் வாழ்ந்தால்
மட்டுமே இறை அருளைப் பெற முடியம்.
உண்மைக்
கடவுளை அறிந்து கொள்ளாமல் பொம்மைக் கடவுளை பிடித்துக் கொண்டு அலைவதால் எந்த பயனும்
சிறிதளவும் கிடைக்காது என்பதை மிகத் தெளிவாக
வள்ளலார் பதிவு செய்துள்ளார்.
எய்வகைசார் 357 மதங்களிலே
பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்றுகைவகையே
கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும்
பெரியீர்ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை
அறியீர்உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர்
உவப்பே!
மேலும்
தெய்வங்கள்
பலபல சிந்தைசெய் வாரும்சேர்கதி பலபல செப்புகின் றாரும்பொய்வந்த கலைபல புகன்றிடு
வாரும்பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன்
றில்லார்மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்எய்வந்த துன்பொழித் தவர்க்கறி
வருள்வீர்எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!
கடவுள்
ஒருவர் தான் உள்ளார் என்றும் அவர்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்றும்.அவரிடம்
தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற முடியும்...
அந்த அருளினால். சத்து சித்து
ஆனந்தம் பெற்று மரணத்தை வெல்ல முடியும்
இதற்கு
சன்மார்க்க பயிற்சி என்பது ஒழுக்கம் மட்டுமே.
ஒழுக்கத்தில்
நான்கு வகை பயிற்சிகள் கொடுத்துள்ளார்.
- இந்திரிய ஒழுக்கம்.
- கரண ஒழுக்கம்.
- ஜீவ ஒழுக்கம்.
- ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு பயிற்சிகளை வள்ளலார் சொல்லி உள்ளார்.
இந்த
ஒழுக்கத்தில் இரண்டு ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம் என்பதை முழுமையாக
கடைபிடித்தால் போதும் ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் தானே விளங்கி விடும். அவை
விளங்கினால் அருள் என்னும் திரவம் ஆன்மாவில் இருந்து வெளிப்படும். அருள் வெளிப்பட்டால்
ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.
இவைதான்
வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் பாதையாகும்.இந்த ஒழுக்கத்திற்கு தடையாக
இருப்பதுதான் சாதி, சமய, மதங்களின் மேல் வைத்துள்ள பற்றுகளாகும்.இவைகள் இன்று நேற்று
அல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக நம் ஆனமாவை பற்றிக் கொண்டு உள்ளன என்கிறார் வள்ளலார்.
வள்ளலார்
பாடல் !
சாதியிலே
மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே
அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி
விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!
சாதி
சமய மதங்களின் பற்றை விட்டு வாருங்கள் இறைவனிடம் அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம்
என உலக மக்களை அழைக்கின்றார் வள்ளலார்.
உயர்களின்
மேல் உண்மை அன்பு,உண்மை தயவு,உண்மை இரக்கம், உண்மையான கருணை மட்டுமே இருந்தால்
போதும் என்கிறார் வள்ளலார். இதற்கு தடையாக இருப்பது சாதி சமயம், மதம் என்பதை விளக்கமாக விளக்குகின்றார்
இது
தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்
மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.வருணம் ஆசிரம்ம்
முதலிய சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.
சுத்த
சன்மார்க்கத்தின் முக்கிய லஷ்யமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு எங்களுக்குள்
எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச்
செய்வித்து அருளல் வேண்டும்.
எல்லாமாகிய
தனிப்பெரும் தலைமை அருட்பெரும்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு
வந்தனம்! வந்தனம்!
என்று
தினமும் சொல்லிக் கொண்டு உள்ளோம்.அதில் உள்ள சத்திய பொருளை உணர்ந்து சாதி சமய
மதங்களை விட்டு உள்ளோமா என்பதை சிந்திக்க வேண்டும்.அவைகளை
விடாமல் இருக்கின்ற வரை எந்தவித ஆன்ம லாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.
விடாமல்
வைத்து இருந்தவர்கள் எந்தவித லாபத்தையும் பெறவில்லை அடையவில்லை என்று
வள்ளல்பெருமான் தெளிவாக விளங்க வைத்துள்ளார் .
நான்
எல்லாவகை பற்றுகளையும் விட்டு விட்டேன். என்னைப்போல் நிங்களும்
விட்டுவிட்டீர்களானால் என்னைப் போன்ற பெரிய லாபத்தை அடையலாம் என்பதை தெளிவாக
விளக்கமாக சொல்லி உள்ளார்.
நாம்
இதுவரை இருந்த்துபோல் இனியும் வீண்காலம் கழிக்காமல் நான் சொல்வதை கேளுங்கள்
என்கிறார்.இது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கட்டளை என்கிறார்.
எனவே
நாம் இனிமேலாவது ஆண்டவர் கட்டளையை மீறாமல் செயல்படுவோம்.
மரணம்
பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே
நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வோம்.
ஆன்ம
லாபத்தைப் பெற்று மரணத்தை வெல்லுவோம்.
அன்புடன்
ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்
9865939896.
No comments:
Post a Comment